14.3.18

நம்ம ஊரில் கூகுள் !

கூகுள் என்றாலே பிரம்மாண்டம் தான். அந்த பிரம்மாண்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் எனும் போது கணினித்தமிழ் வளர்ச்சி மேலோங்கி பயணிக்கிறது என்பதில் உள்ளபடியே மகிழ்ச்சி.

தமிழ் சேவையில் கூகுள் ஏற்கனவே காலடி வைத்தாலும் , தமிழ் மண்ணில் இன்று (மார்ச்13) தான் முதன்முறையாக காலடி வைத்திருக்கிறது.

ஆம். வழக்கமாக பெங்களூரு, ஐதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்திவந்த கூகுள் முதன்முறையாக தமிழகத்தில் #Googleforதமிழ் என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் கூகுள் விளம்பர சேவையை (Google AdSense) தமிழுக்கும் நீட்டித்தது. இதன் படி, தமிழ் இணையதளங்களுக்கும் வருவாய் ஈட்டித்தரும் பெரும்பாக்கியத்தை கூகுள் வழங்கியிருக்கிறது. இதன் அறிமுகம் நிகழ்ச்சியாகவும், வலைப்பதிவர், இணையதளம் நடத்துவோருடனான சந்திப்பாகவும் கூகுள் ஏற்பாடு செய்தமை வரவேற்கத்தக்கது.

விரைவில் இது போன்ற நிகழ்வுகளை சென்னையில் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாக கூகுள் உறுதியளித்துள்ளது.

இன்றைய நிகழ்வில் நான் உட்பட கணினித்தமிழ் ஆர்வலர்கள், இணையதளம் நடத்துவோர், இணையத்தில் எழுதுவோர், இணைய வடிவமைப்போர்  என பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றோம்.


குறைந்தளவே அனுமதிக்கப்பட்டதால் ஆன்லைன் முன்பதிவு குறுகிய நேரத்தில் திறந்து மூடப்பட்டது. இதனால் பலர் பங்கேற முடியாமல் போனது.

காண்க: http://zhakanini.com/google-for-tamil-event-in-chennai/

#GoogleForTamil 

No comments:

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...