18.12.17

வீடியோ தான் இனி... பார்வையாளரை ஈர்ப்பது எப்படி?

ட்விட்டர் , ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோரில் செல்பேசி வழி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 90% மேல் என்பதால் வழமையான பதிவிடலில் இருந்து, புது உத்திகளை கையாள வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

படிப்பதை விடவும், வீடியோவாக பார்த்து கடந்து செல்வதே இணைய வாசகர்களின் விருப்பமாக உள்ளது. அதனாலயே, வீடியோ பதிவுகளின் பரவல் அதிகமாக உள்ளது.

வீடியோக்களை தொடர்ந்து பார்க்கலாமா வேண்டாமா என்பதை முதல் 10 விநாடிகள் தான் தீர்மானிக்கின்றன.

அதுவும் பார்வையாளர்கள், ஒலி இல்லாமல் வெறுமனே காட்சி ஓட்டத்தை வைத்து தான் தொடர்வதை தீர்மானிக்கின்றனர்.

ஆக, அதை நம் வசப்படுத்த Strategy வகுக்க வேண்டும்.

பொதுவாக தேநீர் கடையில், பயணத்தில், பொது இடத்தில், அலுவலகத்தில் இருப்போர் சமூகவலைப்பக்கங்களில் உலவும் போது நம் வீடியோவை காண நேரிட்டால் அதை ஒலி இல்லாமல் தான் காண்பர். அது தான் 99.99% நடக்கும்.

நம் வீடியோ, பேசும் படங்களாக மாற வேண்டும். அப்போது தான் அதனை கடந்து செல்லாமல் பார்வையாளர் தக்க வைக்கப்படுவர்.

இதற்கு சில யோசனைகளையும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

1. வீடியோவின் தொடக்கத்தில் ஈர்க்கக்கூடிய காட்சிகளை காண்பிக்கலாம்
2. வீடியோவில் எழுத்துகளையும் காண்பித்தால் (Caption) கேட்பதற்கு பதில் படித்து கொண்டே பார்ப்பார்கள்.
3. முக்கியமாக Thumbnail படம் கிளிக் செய்ய தூண்டும் படி அமைக்க வேண்டும்.
4. நிறுவனங்கள் தங்கள் Brandஐ நன்கு காணும் படி வைக்க வேண்டும்.

பொழுதுபோக்கு அம்சங்களை தேடிப்போய் பார்த்து விடுவார்கள். வணிக நிறுவனங்கள் தங்கள் பொருட்களை பார்வையாளரிடம் சேர்க்க மேற்கண்ட உத்திகளை முயற்சி செய்யலாம்..

No comments:

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...