11.11.17

நியூஸ் மீடியாக்கள் நியூ மீடியாவை எப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டும்..? (1)

சோசியல் மீடியாவில் எழுதுவது ஒரு கலை...

குறிப்பாக செய்தி ஊடகங்களின் சமூக வலைதளங்களில் எழுதுபவர்கள் வாசகர்களுக்கு செய்தியை உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் அதே வேளையில் அதை எப்படி வாசகனை ஈர்ப்பது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரே செய்தியை எல்லா செய்தி நிறுவனமும் தருகிறது.

அதில் நாம் என்ன வாசகனுக்கு புதிதாக தரப்போகிறோம்.. அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் தரப்போகிறோம் என்பதை தீர்மானித்து எழுத வேண்டும்.

சுருக்கமாக நறுக்கென்று எழுத தொழில்நுட்பமோ, அனுபவமோ தேவையில்லை.. நல்ல வாசகனாக இருக்க பழகிக்கொள்ளுங்கள்..

சோசியல் மீடியாவில் எதையாவது எழுதுபவராக இருக்க வேண்டியது இல்லை.. எதையாவது படித்துக்கொண்டேயிருங்கள்..

நீங்கள் தான் நியூ மீடியா / டிஜிட்டல் மீடியா என்கிற  ஊடகத்தின் ராஜா...!!!!

(தொடரும்..)

அடுத்ததடுத்த பதிவுகளில் ஜர்னலிசமோ, மொழியையோ சொல்லி தரப்போவதில்லை.. அது ஆளுக்கொரு விதியாக செயல்பட்டு கொண்டிருப்பதால் தொழில்நுட்பங்களை பகிரலாம் என்று எண்ணுகிறேன்..

12.4.17

என்ன மயிருக்கு கெஞ்சனும்?

உடுக்கை கழன்று உழவன் போராடும்
அவலம் கண்டு அகம் கொதிக்கிறது...

நீட்சியாகி போன உழவனின் வேதனை..
நீதியின்றி நீத்திட வேண்டுமோ?

கட்சிகள் தோறும் காட்சிக்காக கூவுவது போதும்
ஆட்சி நடத்தி நீங்கள் ஆக்கியதும் போதும்

உயிருக்கு உணவு.. உணவுக்கு உழவன்...
அறிவுத்துறையில் உயர்ந்து என்ன பயன்?

நீயும் நானும் கழனியில் உழுதாக வேண்டும்
உழவன் புரட்சி வெடித்தாக வேண்டும்..

என்ன மயிருக்கு கெஞ்சனும்?
உழவே தலை உழவே தலை என
உழவனை கண்டு ஒவ்வொருத்தனும் அஞ்சனும்..!

நியூஸ் மீடியாக்கள் நியூ மீடியாவை எப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டும்..? (1)

சோசியல் மீடியாவில் எழுதுவது ஒரு கலை... குறிப்பாக செய்தி ஊடகங்களின் சமூக வலைதளங்களில் எழுதுபவர்கள் வாசகர்களுக்கு செய்தியை உடனுக்குடன் கொ...