Posts

Showing posts from January, 2016

வறுமை எனும் நிலை மாற ஒன்றிணைய உறுதி ஏற்போம்

புதிய ஆண்டின் தொடக்கத்திற்கு முதல் நாள்,
மது போதையில் என்ன செய்கிறோம் என்பதில் நிதானம் இல்லாமல் உர்... உர்.. என்று வாகனங்களில் பறக்கும் சாலையில் சில காட்சிகள் என் கண்களை கசியவிட்டன...
அந்த சாலை கடற்கரையை நோக்கி செல்லும் சாலை.. அவ்வழியாக கார்களும், பைக்குகளும் அணிவகுத்து சென்றுக்கொண்டிருந்தன.
நள்ளிரவு நெருங்கும் அதேசமயம், ஊர்ந்து செல்லும் வாகனங்களுக்கிடையே சிறுவர்கள் முகத்தில் சோர்வுடன் குல்லாக்களையும், பலூன்களையும் விற்று கொண்டிருந்தது பார்வைக்குள் ஆழ நுழைந்தது... அதனை வாங்க யாரும் முன்வராத நேரத்தில் என்னையும் கடந்து சென்ற அந்த காட்சி இன்னமும் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறது.
இதே நேரத்தில்.. மற்றொருபுறம் சொகுசு மது விடுதியின் வாசலில் பிச்சை எடுக்கும் சில வயதான உருவங்கள் கையேந்தி நின்றிருந்தன. சென்னையின் முக்கிய இடங்களில் நான் கவனிக்க நேர்ந்த அந்த காட்சிகள் மறையாத தருணத்தில்..
விடியற்காலை , சாலையில் நடக்கும் போது நம்மை கடந்து சென்ற மூன்று இளம்பெண்கள் (சிறுமிகள்) ஹான்ஸ் புகையிலையை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டு சென்றது பேரதிர்ச்சி ஏற்படுத்தியது.
என் கண்கள் அந்த பெண்களின் மீதே இருந்தது.

புத்தாண்டு...!

புதிய ஆண்டு என்பதெல்லாம்.. கால ஓட்டத்தின் வெறும் அடையாளங்கள் தான்...
கிறித்து பிறப்பு அடிப்படையில் தோன்றிய ஒரு கால அலகினை உலகளாவிய கொண்டாட்டமாய் மக்கள் களித்துக்கொள்கிறார்கள்..
ஓர் ஆய்வு சொல்கிறது... உலகின் மொழிகளை அழிக்கும் கொடுங்கொல்லியாக ஆங்கிலம் இருந்து வருகிறது என்று.
தொழில்நுட்ப வளர்ச்சியில் கண்கூடாகவே நாம் அதை கண்டு வருகிறோம்.. மொழி அழிவு என்பதில் இனத்தின் அழிவையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இன அழிப்புக்கு போர் மட்டுமல்ல.. மொழி மீதான ஆதிக்கமும் தான் காரணமாகிறது. கிறித்து சமயத்தவரின் ஆண்டு முறை இன்று உலக மக்களின் தவிர்க்க முடியாத நாட்காட்டியாகிவிட்டது.
ஆனால், தமிழ் சமயம் / சமூகம் தனக்கான அடையாளங்களை இழப்பதையும், இனத்தார் சற்று கருத்தில் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் தற்போது என்னுள் மேலோங்கி இருக்கிறது.
உலக பொதுமறை எழுதிய பொய்யா புலவன் வள்ளுவ பெருந்தகை பிறப்பையொட்டி, சுறவம் (தை) முதற்கொண்டு ஆண்டு பிறப்பையும், தொடர்முறையையும் பின்பற்ற வேண்டும் என தமிழ் அறிஞர் பெருமக்கள் வகுத்தனர்.
ஆனால், தமிழ் மரபு, மாண்பு, பண்பு, அறிவியல் ஆகியவற்றுக்குப் பொருத்தமாகதவையும், பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்…