சென்னையில் ”சொகுசு” தொடர்வண்டி !!

இன்று சென்னை சொகுசு தொடர்வண்டியில் பயணித்து பார்க்கலாம் என்று வடபழனியில் இருந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் சென்றேன்...

அன்றாடம், தேவைக்காக பயணிக்க முடியாத கட்டணம் தான், நம்மை மற்றொரு முறை என்று வருவோமோ என்று யோசிக்க வைக்கிறது...
கட்டணத்திற்காக ரூவா தாளை தடவி தடவி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது..
ஆனால், தொடர்வண்டி பயணம் புது அனுபவம் தான்...
சொகுசான பயணம்..
சுற்றுலா செல்வது போல் இருந்ததே தவிர...
மீண்டும் வர மனம் தோன்றவில்லை...
பயணித்த அனைவருமே புதிய அனுபவத்தை நுகர வந்தவர்களே தவிர... பொது பயன்பாட்டுக்கு உகந்ததாக கருதவில்லை...
அரசு.. கட்டணத்தை கொஞ்சம் கருணையோடு குறைத்தால் பாமரனும் படியேறி பயணிப்பான்...
இல்லையேல்... வழக்கம் போல் வெள்ளை பலகை பேருந்தில் படியிலேயே பயணிப்பான்...Post a Comment

Popular posts from this blog

கட்செவி அஞ்சல்

அறிவியல் தமிழ் களஞ்சியம்

உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன்