Posts

Showing posts from July, 2015

இணையமும் தமிழ் செய்தி ஊடகங்களும்

Image
இணையதளம் இன்று பிரதான செய்தி ஊடகமாகி விட்டது.

இதற்காக தான் கூகுள் தனது முக்கிய திட்டப்பணிகளில் செய்தியாளர் மற்றும் செய்தி இணையதளங்களுக்காக தனி கவனம் செலுத்தி வருகிறது.

இதுமட்டுமல்லாது சமூக வலைதளங்களான முகநூல், டிவிட்டர், கூகுள்+ கூட செய்தி வழங்கும் முக்கிய தளமாகி விட்டன.

அதாவது, மேற்சொன்ன இணையதளங்களின் நோக்கம் தொடக்கத்தில் வேறு. ஆனால், இன்று அவற்றின் பிரதான நோக்கம் செய்தி .

உலகளவில் மிகப்பெரிய அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் இணையதளங்களை தனது விளம்பரப்பலகையாக பயன்படுத்தாமல், பிரதான செய்தி வழங்கல் தளமாக்கி விட்டன.

இதில் கணிசமான வருவாயும் ஈட்டுகின்றன அந்த நிறுவனங்கள்.

இந்த தொழில்நுட்பத்தை ஆரம்பகாலத்தில் இருந்து நமது இந்திய ஊடகங்கள் நோட்டமிட்டுக்கொண்டே இருந்தன.

இதன் வரவு எங்கிருந்து வருவாயை பாதிக்குமோ என்ற அச்சத்தில் அச்சு மற்றும் காட்சி  ஊடகங்கள இருந்தன.

ஆனால், தகவல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி, அனைவரின் கைகளில் செல்பேசியை கொண்டு சேர்த்தது மட்டுமல்லாமல் இணைய பயன்பாட்டை அதிகரிக்க செய்தது..

இணையதளம் மூலம் சம்பாதிக்க முடியும் என்ற நிலை பிரகாசமானதும்... இணைய இதழ்கள் வரிசை கட்ட தொடங்…

ஆபாசத்தை தேடும் இளைஞர்கள்...

Image
அறிவுத்தேடலில் இணையம் இன்றியமையா ஒன்றாகி விட்டது இன்றைய காலக்கட்டத்தில்...

இதில் மூழ்கி சின்னாபின்னமானவர்களும் உண்டு, மூழ்கி முத்து எடுத்தவர்களும் உண்டு.

சரி தத்துவங்களுக்கு அப்பால் சில உண்மைகளை உடைப்பதுவே இந்த பதிவின் நோக்கம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

என்னவென்றால், இணையம் என்றால் முக்கிய இடத்தில் இருப்பது “ஆபாசம்”.

இணையத்தில் மூழ்கி முத்தெடுப்பவர்களில் பலர் தன்னந்தனியே என்ன பார்ப்பார்கள் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை...

ஆனால் ஆபாச இணையதளமே, யாரெல்லாம் ஆபாசங்களை ரசிக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்துள்ளது.

அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

1980 களுக்கு பிறகு பிறந்தவர்களிடம் ( இன்றைய இளைஞர்கள் ) நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 24 விழுக்காடு பெண்களும், 76 விழுக்காடு ஆண்களும் ஆபாசங்களை பார்ப்பதாக தெரியவந்துள்ளது.

இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பெண்களின் அளவீடு வழக்கத்தை விட அதிகம் என்கிறது ஆய்வு.

அதாவது, முந்தைய தலைமுறையை விட (35+ வயதினர்) இந்த தலைமுறை இளைஞிகளில் ஆபாசத்தை ரசிப்பவர்கள் அதிகமாம்.

குறிப்பாக இரவு 11 மணிக்கு மேல் ஆபாசத்தை தேடும் இளைஞர்கள், சராசரியாக 9 நிமிடங்கள் ஆபாச…

குடிப்பவனிடம் அறிவுரை கூறுவது....

Image
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.
இதை நான் சொல்லலைங்க...
நம்ம வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அனுபவித்து எழுதி இருக்கிறார்...
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

கோயம்பேடு பேருந்து நிலையம்

Image
ஊருக்கு பேருந்தும் கிடைக்கும்.. உறவுக்கு பெண்ணும் கிடைக்கும்... வேறெங்குமில்லை, 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் சென்னையின் முக்கிய இடமான கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்
தான். இங்கு வெளியூர் செல்வோர் கணிசமாக நடமாடுவது நாம் அறிவோம்... ஆனால், இங்கேயே குடித்தனம் நடத்துவோரை அறிவோமா...? சொந்த ஊர் செல்ல வாரந்தோறும் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று தான் பேருந்து பிடித்து செல்வேன்.. ஒவ்வொருமுறையும் புதுப்புது காட்சிகள் கண்களில் தென்படும்... அதனை பட்டியலிட்டால் பக்கங்கள் நீளும்.. இருந்தாலும், இன்றைய காட்சிகளையாவது பட்டியலிட்டு விடுகிறேன்.. பேருந்து நிலையம் நுழைந்ததும் அகன்ற அரங்கம் நம்மை வரவேற்கும்.
இரவில் அங்கு பெருங்கூட்டம் படுத்து கிடக்கும்.. அதில் பாதி கடைசி பேருந்தை தவற விட்டதும், மீதி வீடே இதுவென வாழ்ந்து கிடப்பதுமாக இருக்கும்... இங்கு அமர மட்டுமே அனுமதி . ஆனால், கூட்டம் மிகுதியானால் விதிகளுக்கும் ஓய்வு வழங்கப்படும். சில நேரம் அந்த அரங்கம் வெறிச்சோடி இருக்கும்.. சுற்றி பார்த்தால் சில காவல் தெய்வங்கள் கொம்புகளால் தரையை தட்டிக்கொண்டிருக்கும். ஆனாலும், மேற்சொன்ன காட்சி அப்படியே இர…

வாழ்க தா(போ)லி !

Image
தாலி என்பது இந்து சமயத்தை பின்பற்றுகிற பெண் ஒருவருக்கு, ஒருங்கே இல்லறம் ஏற்கும் ஆண் அணிவிக்கும் கயிறு என்பதை யாவரும் அறிவர். அது அண்மையில் கேலி கூத்தான கதை ஊரறிந்ததே..
சரி. விடயத்துக்கு வருகிறேன். சென்னை மாநகர பேருந்தில், பயணித்துக்கொண்டிருந்தேன். பின் இருக்கையில் இருந்ததால், முன்னோக்கி என் பார்வை இருப்பதும் இயல்பே... சட்டென என் கண்ணில் பட்டது ஒரு இளம்பெண்ணின் தாலி... அது அசாதாரணமாக முதுகில் தொங்கிக்கொண்டிருந்தது. ஒரு வேளை சங்கிலி பறிப்புக்கு இலக்காகி, பின்னர் முயற்சி தோல்வியடைந்ததால் தப்பித்த தாலியோ எண்ணிக்கொண்டேன்... இது நடந்து நாட்களானது... அண்மையில் அதேபோல் காண நேர்ந்தது, வேறொரு சூழலில்... பின்னர் தான் தெரிந்தது , பெரும்பாலான இளம்பெண்கள் தங்கள் தாலியை கழுத்தில் இருப்பதை அசிங்கமான அடையாளமாக கருதுவது... அதை ஆடைக்குள் மறைத்துக்கொள்கிறார்கள். சில சமயம் அது வெளியே வந்து காட்டிக்கொடுத்துவிடுகிறது.. தெளிவான புரிதல் என்ன்வென்றால்.. பெண்கள் தாலியை விரும்புகிறார்களோ இல்லையோ... அது வெறும் கயிறாக இல்லாமல், தங்கத்தால் ஆனதென்றால் சமூகத்தில் மற்றவர் முன் மதிப்பாக உணருகிறார்கள் என்பதை உணர முடிகி…

டிஜிட்டல் அம்னீசியா தெரியுமா உங்களுக்கு...?

Image
ஸ்மார்ட் ஃபோனை சதா கட்டி அழும் நண்பர்களே..! டிஜிட்டல் அம்னீசியா  தெரியுமா உங்களுக்கு...?

ஞாபக மறதியில் இது ஒரு வகையாம். ஸ்மார்ட்ஃபோனையும், இண்டெர்நெட்டையும் எந்த நேரமும் கட்டி அழும் நம்மள மாதிரி ஆளுங்களை இந்த நோய் தாக்குமாம்... நாம நம்ம மூளையை கூகுளிடம் தாரை வார்த்து கிடப்பதையே அறியாமல் இருக்கிறோமே... இது தான் இந்த நோய்க்கான முதல் அறிகுறி... எதையும் ஞாபக வச்சுக்காம , ஒன்னு கூகுளை தட்டனும், இல்ல ஃபோனை தட்டனும்... இது தான் நம்ம நாலேஜ் என்றால்... நமக்கு வந்திருக்கும் நோய்க்கு பேர் டிஜிட்டல் அம்னீசியா.. பத்து ஃபோன் நம்பர் கூட... நம்மால ஞாபகத்துல வச்சுக்க வக்கில்லனா நமக்கு வந்திருக்கும் நோய்க்கு பேர் டிஜிட்டல் அம்னீசியா.. அமெரிக்கக்காரனுக்கு இந்த பாதிப்பு அதிகமா வந்துவிட்டதாம்.
உஷார் நண்பர்களே...
ஸ்மார்ட்ஃபோன் ஹாலிடே ன்னு ஒரு நாள் அனுசரிக்க வச்சுடாதீங்க..

இரவில் செய்தி வழங்கும் தொலைக்காட்சிகள்

Image
தந்தி தொலைக்காட்சியும், புதிய தலைமுறை தொலைக்காட்சியும் இரவிலும் செய்திகளை நேரலையாக தொகுத்து வழங்குகின்றன.
இருநிறுவனத்தின் சேவைக்கும், ' போட்டி 'க்கும் வாழ்த்துகள்...
(தந்தி தொலைக்காட்சி) (புதிய தலைமுறை தொலைக்காட்சி)

இந்திய மொழிகளில் கவனம் செலுத்தும் கூகுள்

Image
உலகளவில் இணைய சந்தையில் இரண்டாமிடத்தில் உள்ளது இந்திய நாடு.
இங்கு இணைய தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க இணைய நிறுவனங்கள் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் சூழலில் டிஜிட்டல் இந்தியா என்ற மத்திய அரசின் திட்டம், அவர்களுக்கு எளிமையாக வழி அமைத்துக்கொடுத்துள்ளது.

முக்கியமாக, எல்லா துறைகளும் மின்னணுமயமாக்கும் மத்திய அரசின் நோக்கம், தொழில்நுட்ப பயன்பாட்டில் உலகளவில் முந்தி இருக்க வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

கூகுள் என்கிற உலகின் மிக பெரிய இணைய தேடு பொறி, மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தோடு கைக்கோர்த்து, பல்வேறு திட்டப்பணிகளை வகுத்து வருகிறது.

தொழில்முனைவோர்களை இணையத்தில் இழுக்க, உள்ளூர் மொழிகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது கூகுள்.

ஆங்கிலம் பேச தெரியாத 20 கோடி இந்தியர்களை இணையத்திற்குள் நுழைக்க கூகுளின் இந்த முயற்சி அழிந்தொழியும் மொழிகளுக்கு மறு உயிர்ப்பாக அமையும்.

குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், அதில் இணையப் பயன்பாடும் உயருகிறது..

இதன் பொருட்டு, தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கான தொழில்நுட்ப ஆதரவும் இனி உயரும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை…

சென்னையில் ”சொகுசு” தொடர்வண்டி !!

Image
இன்று சென்னை சொகுசு தொடர்வண்டியில் பயணித்து பார்க்கலாம் என்று வடபழனியில் இருந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் சென்றேன்...
அன்றாடம், தேவைக்காக பயணிக்க முடியாத கட்டணம் தான், நம்மை மற்றொரு முறை என்று வருவோமோ என்று யோசிக்க வைக்கிறது... கட்டணத்திற்காக ரூவா தாளை தடவி தடவி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.. ஆனால், தொடர்வண்டி பயணம் புது அனுபவம் தான்... சொகுசான பயணம்.. சுற்றுலா செல்வது போல் இருந்ததே தவிர... மீண்டும் வர மனம் தோன்றவில்லை... பயணித்த அனைவருமே புதிய அனுபவத்தை நுகர வந்தவர்களே தவிர... பொது பயன்பாட்டுக்கு உகந்ததாக கருதவில்லை... அரசு.. கட்டணத்தை கொஞ்சம் கருணையோடு குறைத்தால் பாமரனும் படியேறி பயணிப்பான்... இல்லையேல்... வழக்கம் போல் வெள்ளை பலகை பேருந்தில் படியிலேயே பயணிப்பான்...