23.3.15

கட்செவி அஞ்சல்

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எண்ணற்ற கண்டுப்பிடிப்புகள், ஆராய்ச்சிகள் என நொடி பொழுதில் பல மாற்றங்களை கண்டு வருகிறோம்...

அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்கு பெயரிடும் முறை வரையறுக்கப்பட வில்லை என்றாலும், கண்டுப்பிடிப்பாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே, அதன் தன்மையை பொறுத்து கண்டுப்பிடிப்புகள் பெயரிடப்பட்டுள்ளன.

எனினும், அது பன்மொழி பயன்பாட்டின் போது காரணம்/செயல்பாடு/தன்மை பொறுத்து மொழி மாற்றி பெயரிடப்படுகிறது.

இது மொழிபெயர்ப்பாகவும் சில சமயம் அமைந்து விடுகிறது.

குறிப்பாக தகவல் தொழில்நுட்ப சேவைகளில் எண்ணற்ற புது சொற்கள் ஆங்கிலத்திலேயே முளைத்துள்ளன.

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற கருவிகள் அகராதியில் கிட்டத்தட்ட ஒரு சொல்லாக இடம்பெற்று விட்டன.சரி, நான் சொல்ல வேண்டிய கருத்தை முதலில் பகிர்ந்துவிடுகிறேன்.

தினமணி செய்தித்தாளில் ஒரு புதிய சொல் பயன்பாட்டை காண முடிந்தது. ”கட்செவி அஞ்சல்”.

அது என்ன கட்செவி அஞ்சல். கண்+செவி = கட்செவி

முன்னர் குறுஞ்செய்தி மூலம் வெறும் எழுத்தோ அல்லது படமோ அனுப்பிகொண்டிருந்தோம்.

இப்பொழுது வாட்ஸ் அப் எனும் மென்கருவி மூலம் ஒளி, ஒலி, உரை என காணக்கூடியது, கேட்க கூடியதுமாக தகவல் அனுப்புகிறோம்.

இதற்கு கட்செவி என்று பெயரிட்டு அழைப்பது என்பதை பொதுவெளியில் அரிது. அதாவது தனித்தமிழில் மாற்றி பயன்படுத்துவதை யாரும் சிந்திப்பதில்லை.

தொழில்நுட்பத்தின் வேகத்தில், அப்படியே அதை ஏற்றுக்கொண்டு நாமும் பயணிக்கிறோம்.

இங்கு அறிவியல் தமிழின் முக்கியத்துவம் நாம் அறிய வேண்டியுள்ளது.

மக்கள் தொலைக்காட்சி, தமிழ் ஓசை ஆகிய ஊடகங்கள் தனித்தமிழ் பயன்பாட்டை நடப்பு காலக்கட்டத்தில் கொண்டு வந்தன. ஆனால் அதன் வளர்ச்சி, ஊக்குவிப்பு தமிழர்களிடையே இல்லையாதலால் முடங்கி கிடக்கின்றன.

ஆயினும், ஊடகங்கள் - தமிழாக்கம், குறிப்பாக அறிவியல் சொற்களுக்கு தெளித்தமிழில் பெயரிட்டு பயன்பாட்டில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்பதே எமது அவா.

ஊடகங்களின் பயன்பாட்டால் பொது மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு செல்லமுடியும்.

அந்தவகையில் கலைச்சொல்லாக்க முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும். இதனை இழுக்கு, பின்னோக்கிய பார்வை என்றெல்லாம் விட்டொழித்து, நம் தாய்மொழியில் எது இல்லை என்று கேட்கும் அளவுக்கு சொல்லாக்கங்கள் அமைய வேண்டும்.

எனவே தமிழர்களே ஒன்றிணைவோம்... தமிழை வளர்க்க...தினமணியின் பல்வேறு தமிழாக்க முயற்சிகள் பாராட்டக்கூடியது. அந்த வகையில் வாட்ஸ் அப்-க்கு கட்செவி அஞ்சல் என்று பயன்படுத்தி அண்மை காலமாக கையாண்டு வருவதை வரவேற்கிறேன். இது போன்று பல்வேறு தமிழ் சொற்கள் தினமணி கையாண்டு வருவதும் நாம் அறிந்ததே.. இருந்தாலும், தற்போது வாட்ஸ் அப் புரட்சி உருவாகி இருப்பதால், இந்த பதிவை நமது நவின நண்பர்களுக்கு நினைவூட்டி, தமிழூட்டி மொழி காப்போம் என்ற எண்ணத்தில் எழுது உள்ளேன்.

அதேபோல் காலத்தே தினமணியை பாராட்ட வேண்டியது நமது கடமையும் கூட..

- வெ.யுவராஜ்

No comments:

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...