Posts

Showing posts from March, 2015

கட்செவி அஞ்சல்

Image
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எண்ணற்ற கண்டுப்பிடிப்புகள், ஆராய்ச்சிகள் என நொடி பொழுதில் பல மாற்றங்களை கண்டு வருகிறோம்...

அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்கு பெயரிடும் முறை வரையறுக்கப்பட வில்லை என்றாலும், கண்டுப்பிடிப்பாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே, அதன் தன்மையை பொறுத்து கண்டுப்பிடிப்புகள் பெயரிடப்பட்டுள்ளன.

எனினும், அது பன்மொழி பயன்பாட்டின் போது காரணம்/செயல்பாடு/தன்மை பொறுத்து மொழி மாற்றி பெயரிடப்படுகிறது.

இது மொழிபெயர்ப்பாகவும் சில சமயம் அமைந்து விடுகிறது.

குறிப்பாக தகவல் தொழில்நுட்ப சேவைகளில் எண்ணற்ற புது சொற்கள் ஆங்கிலத்திலேயே முளைத்துள்ளன.

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற கருவிகள் அகராதியில் கிட்டத்தட்ட ஒரு சொல்லாக இடம்பெற்று விட்டன.சரி, நான் சொல்ல வேண்டிய கருத்தை முதலில் பகிர்ந்துவிடுகிறேன்.

தினமணி செய்தித்தாளில் ஒரு புதிய சொல் பயன்பாட்டை காண முடிந்தது. ”கட்செவி அஞ்சல்”.

அது என்ன கட்செவி அஞ்சல். கண்+செவி = கட்செவி

முன்னர் குறுஞ்செய்தி மூலம் வெறும் எழுத்தோ அல்லது படமோ அனுப்பிகொண்டிருந்தோம்.

இப்பொழுது வாட்ஸ் அப் எனும் மென்கருவி மூலம் ஒளி, ஒலி, உரை என காணக்கூடியது, கேட்க கூடியதும…

புதிய தலைமுறை....

Image
புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையம் தாக்கப்பட்ட தகவல், ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பி விட்டது. கருத்து சுதந்திரம் என்பதில் இருந்து ஊடக ஊழியர்களின் பாதுகாப்பு வரையிலான அனைத்து மட்டத்திலும் குரல்கள் ஒலித்தன. ஒலிக்கின்றன.

இங்கு கவனிக்க வேண்டியது.

ஒரு ஊடகம் தனது பதிப்பில் அல்லது ஒளிபரப்பில் சிறப்பு தொகுப்புகளை வழங்கும் போது, நடுநிலைமை அல்லது உண்மையின் பக்கமிருந்து தனது கருத்தை ஆழமாக முன்மொழியும்; அதற்கான ஆதரவு குரல்களையும் பதிவு செய்யும்.

அதேபோல், சர்ச்சை ஏற்படும் வாய்ப்புள்ள பொருளில் ஆவணமாக்கும்போது, இரு தரப்பு கருத்துகளையும் பதிவாக்கி ஒளிபரப்பவோ, பதிவிடவோ செய்யும்.

நிற்க.

ஒரு செய்தியில் தனி நபரையோ, நிறுவனத்தையோ, அரசையோ, அமைப்பையோ குற்றஞ்சாட்டுவதாக இருந்தால், குற்றஞ்சாட்டுக்கு ஆளாகுபவரின் பதில்/கருத்தை கேட்டு அதனையும் சேர்த்து ஒளிபரப்புவதையே பெரும்பான்மை ஊடகங்கள் கடமையாக கொண்டுள்ளன. அந்த வகையில், புதிய தலைமுறை கவனமாக செய்திகளை கையாண்டு வருவதை மறுக்க முடியாது.

இந்நிலையில், தலாக் என்ற ஆவணப்படமும், தாலி குறித்த விவாத நிகழ்ச்சியும் நேரலையாக இல்லாமல் பதிவு செய்து தணிக்க…

தோழி ! இயங்குவோம் மாற்றங்களை நோக்கி...

Image
நீ என்றால் அழகு
ஒத்துக்கொள்வாயா...
அலங்கரிக்காமல் பொதுவெளியில் தோன்ற உன் மனம் ஒத்துவராது என்பதை..

இடைசிறுத்து, முலைபருத்து
உன்னை செதுக்கிவிட்டார்கள்.
கோவில் சிலைகளில் மட்டுமல்ல
கேளிக்கை திரைகளில்....

சொல் பார்ப்போம்
நீ காமத்தில் அடங்காதவள் என்று.

மதிப்புக்கூட்டிய உன் இயல்புகள் ஆண்களுக்கான சந்தையில் ஏராளம்...
உற்றுப்பார் உன் ஆடைக்குள் எத்தனை தாராளம்..

உன்னை திரைவிலக்கி
இன்பத்துக்கு இரை தேடும்
என் இனத்தின் உச்சகட்ட வன்மத்தை
உள்ளபடியே நியாயப்படுத்துவது நியாயமல்ல.

உன்னை கொண்டாடும் இந்நாளில்
உனக்காக உரிமைக்குரல் எழுப்புவதும்
வாழ்த்து கூறுவதும் வாடிக்கையானது.

எது அழகு என்பதை
படம் காட்டும்
பகடித்தனத்தை தோலுரி

சமத்துவம் தேடும் உன் பயணத்தில்
ஆண் வேடம் அணியும் உன் அறியாமையை கழற்றியெறி

ஆண்மையில் அறிந்துக்கொள்
ஆளுமையில் அடையாளங்கொள்

சொற்பதங்களில் ஒன்றுமில்லை
கற்(பு)பிதங்களை வென்றெடு

பாலியல் விடுதலையல்ல உன் விடுதலை
சமூக கட்டமைப்பின் கட்டவிழ்ப்பே நமது எல்லை.

தோழி ! ஒன்றுகொள்.

நான் (ஆண்) உனக்கு எதிரியில்லை
நாமின்றி ஒன்றுமில்லை

இயற்கையின் நியதியை உணர்ந்திடு
பொருளாதாரம் சமநிலையானால்
நமக்கில்லை பாகுபாட…