18.2.15

இந்திய (இந்தி/ஆங்கிலம்) ஊடகங்கள் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என வாழ்த்துகின்றன...


என்ன? ஏன் ? என்கிறீர்களா.... நாம் பயன்படுத்தும் முகநூல், டிவிட்டரில் ஹாஷ்டேக் எனப்படும் குறியிடும் முறை என்று உள்ளது.

நாம் ஒரு கருத்துருவின் கீழ் தகவல்களை பகிர்கிறோம் என்றால், அதற்கான ஒரு பொதுவான தலைப்பிட்டு எழுத வேண்டும். அப்படி எழுதினால், நம்மைப்போன்று, நாம் எழுதிய கருத்தொத்து எழுதுவோரின் கருத்துகளையும் ஒரு சேர பெற்று படிக்கலாம், பகிரலாம்...

அப்படி டிவிட்டரில் “ தமிழ்வாழ்க “ என்ற ஹாஷ்டேக் தற்போது பிரபலமடைந்துள்ளது...

நம்புவீர்களா..?  தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்த பதிவிடும் முறை அதாவது ஹாஷ்டேக் செயல்படாமல் இருந்தது. தற்போது தான் செயல்படுத்தி இருக்கிறார்கள் டிவிட்டர் தரப்பினர்...

முதலில் இந்தி மொழி யில் பதிவிட்ட ஜெய்ஹிந்த் (#जयहिन्द) பிரபலமான ஹாஷ்டேக் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது, சுமார் 24 மணி நேரத்திற்கு மேலாக #தமிழ்வாழ்க உள்ளது...
செம்மொழியாம் தமிழ் , இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் இருந்து சுவைபட நம் நாவில் தவழ்ந்தது...

தற்போது நான்காம் தமிழாம் அறிவியல்தமிழில் இணையத்தில் உயர செல்வதை உலகமே காணும் போது....

என்ன செய்ய... இந்தி, ஆங்கில ஊடகங்களும் முழக்கமிடுகின்றன... தமிழ் வாழ்க .. தமிழ் வாழ்க என்று...

No comments:

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...