16.1.15

உழவே உழவே உயிரென போற்றி...

காணாமல் போன கழனிகளை...
கூகுளில் தேடி
வாழ்த்து செய்தி வரைபவர்கள் நாம்...
பொங்கலுக்கு மட்டும் தான் ஏர் கலப்பையும், ஏறுதழுவலும் நமக்கு நினைவு வரும்...
அதுகூட புதிய தலைமுறைக்கு தெரிந்துவிடாதபடி, சதைமினுக்கும் சாக்கடையர்களின் கூத்தாட்டம் காட்டுகிறோம்..
பண்பட்ட நிலமும், பண்பாட்டு தடமும்,
இல்லாதொழித்து
இனி எதை நாம் உண்போம்..
உழவை ஏற்போம்...
அழிவை தடுப்போம்...
அறிவை பெருக்கி அண்டம் சுற்றும் எம்மால்
மண்ணை கிளறி மகசூல் காண முடியாதோ...
உழவே உழவே உயிரென போற்றி
உழவர் திருநாள் வாழ்த்துகளுடன்..

வெ. யுவராஜ்

நியூஸ் மீடியாக்கள் நியூ மீடியாவை எப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டும்..? (1)

சோசியல் மீடியாவில் எழுதுவது ஒரு கலை... குறிப்பாக செய்தி ஊடகங்களின் சமூக வலைதளங்களில் எழுதுபவர்கள் வாசகர்களுக்கு செய்தியை உடனுக்குடன் கொ...