Posts

Showing posts from 2015

யாகாவாராயினும் நாகாக்க... நாகாக்க..

ராசா...
அப்படி என்ன தான்
உங்க கிட்ட கேட்டாலும்
உங்களுக்கு ஏன் கோபம் வருது...
அறிவு இருக்கா உங்களுக்கு... நீங்க கேட்ட அதே கேள்வியை நானும் கேட்கிறேன் அறிவு இருக்கா உங்களுக்கு...
பொது இடத்தில் ஊடகங்கள் முன்னிலையில்
"என் கிட்ட பேச உனக்கு என்ன..."-ன்னு பேசினால்.. உங்க கிட்ட கேட்க என்ன தகுதி வேணும்னு நினைக்கிறீங்க.. இடம் பொருள் ஏவல் வேண்டாமா..
எங்க வந்து என்ன கேட்கிறேன்னு நீங்க கேட்டதும் சரிதான்.
உங்க துறை சார்ந்த சக கலைஞன் பற்றிய சர்ச்சைக்கு
உங்களின் எதிர்வினையை கேட்க முற்பட்ட செய்தியாளன்
கேட்பதில் என்ன தவறாகி விட்டது..
பொதுவாழ்வில் வந்தாச்சு பொதுஜன ஊடகத்தில் இருக்கிறீங்க..
ஒருதுறையின் அடையாளமா உருவாகிட்டீங்க..
நீங்க உயர்ந்த இடத்தில் இருக்கீங்கன்னு
மிதப்பில் இருந்தா..
உங்க மிதப்புக்கு மதிப்பு தரனுமா என்ன..
ஏய் ஊய்ன்னு பேசுறீங்க..
இப்ப பாருங்க வீதியில வெளிப்பட்டு முகம்சுழிக்க வைத்து சிறுமைப்பட்டு போறீங்க..
குப்பையோடு குப்பையா இருந்ததை கிளறி,
அது என்னன்னே தெரியாதவனையெல்லாம் கேட்க தூண்டி, பாதி பேருக்கு "பீப்"க்குள்ள இருந்த சொல்லுக்கு பொருளே தெரியாது...
மிச்ச பேர் அந்த சொல…

(Beep) பீப்-க்கு ஒரு காரணம் இருக்கு !

பீப்-க்கு ஒரு காரணம் இருக்கு !
நல்ல வாயை விட நாற வாய் தான் ஸ்மார்ட்டாம்..!
புரியலையா? எவன் ஒருத்தன் சாபமிட்டு கண்டபடி திட்டி பேசுறானோ...
அவன் நல்லவாய்களை விட ஸ்மார்ட்டானவர்களாக அண்மைய ஆய்வு சொல்கிறது...
கடுப்பேத்துற சூழலில் ஒருவர் உடனே தன்னை வெளிப்படுத்தி, நாயே, பன்னி, எருமை, ம..., ப.., பி.., பு.., பீப் பீப் பீப் ன்னு குறுகிய நேரத்தில் தன்னிடம் உள்ள சொல்வளத்தை வெளிக்கொட்டுகிறாராம்...
இது எல்லாராலும் முடியாது...
அதனால் தான் சொல்வளம் இல்லாத சிலர் பொறுமைசாலி என்ற போர்வையில் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்களாம்... இங்கதான் கவனிக்கனும்...
பெரும்பாலும் கேவலமான சொல்லைதான் பயன்படுத்துதாகவும், அதுவும் பெண்களை இழிவுபடுத்தும் சொல்லைதான் பயன்படுத்துவதாகவும்... ஆய்வு சொல்கிறது.
இது என்ன கேடுகெட்ட ஆய்வுன்னு நினைக்காதீங்க...
கல்லூரி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தான் இந்த திறமைசாலிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது..
ஆண்களுக்கு இணையா பெண்களும் பொது இடம் கூட பார்க்காம கண்ட வார்த்தைகளால் திட்டுகிறார்களாம்....
இருந்தாலும் சிம்பு பண்ணது தப்புதானேன்னு சொல்றவங்களுக்கு..
என்ன …

வரலாற்றில் இடம்பிடித்த யாஷினிக்கு வாழ்த்துகள் !

Image
தொடர்வண்டியில் பயணிப்போருக்கு திருநங்கைகள் என்றால் ஒரு புரிதல் இருக்கும்...

தாம்பரத்தில் இருந்து எழும்பூர் வரை பயணிப்பது என்று வைத்துக்கொள்வோம்.. எல்லா நிறுத்தங்களிலிருந்தும், பார்வை மாற்றுத்திறனாளிகள் கைவினை பொருட்கள் அல்லது தின்பண்டம் விற்பது, வயதானோர் பிச்சை எடுப்பது, சிறுவர்கள் வறுத்த நிலக்கடலை விற்பது போன்ற காட்சிகள் காணாமல் சென்று விட முடியாது.

இவர்களுக்கிடையில் திருநங்கைகளையும் யாரும் தவிர்த்திருக்க முடியாது.

மேற்சொன்ன எல்லோரையும், எளிதாக புறக்கணித்திருப்போம்.
ஆனால், திருநங்கைகள் தூரத்தில் தெரியும் போதே, சிலர் தூங்குவது போன்றும், செல்பேசியில் பேசுவது போன்றும், வழி ஓரத்தில் உட்கார்ந்திருப்போர் எழுந்து வாசல் நோக்கி செல்வதும் என அவர்களை தவிர்க்க முயற்சிக்கும் காட்சிகள் சற்று அச்சத்தையும் உருவாக்கி விடுகின்றன.

திருநங்கைகள் பிச்சை எடுப்பது, அவர்களின் வாழ்வாதரத்திற்கான வழி என்றாலும்.. மேனிலை என்பது அவர்கள் வாழ்வில் இனி இருக்கப்போவதில்லை என்று தான் கடந்த காலம் காட்டியிருக்கிறது.

இன்று மேற்படிப்புகள் படித்த, அறிவில் தெளிந்த, சமூகத்தை புரிந்த மனதளவில் யாரையும் எதிர்கொள்கிற பக்குவத்தில்…

நடிகர்களை மிகைப்படுத்துவது ஊடகமா? ஊர்மக்களா?

நடிகர்களை ஊடகங்கள் மிகைப்படுத்தியதில் தவறு ஒன்றுமில்லை..

சமூக உளவியலை புரிந்துக்கொள்ள வேண்டும்.

நடிகனும், நடிகையும், திரைப்படங்களும் என் பொழுது போக்காக... மன்னிக்கவும்... களிப்பு கருவிகளாக மாற்றியது யார்?

நான் வாங்கி படிக்கும் பல்சுவை இதழில் அவர்களையே பக்கம் பக்கமாக நிரப்ப அனுமதிப்பது யார்?, அப்படி நிரப்பும் போதெல்லாம் அவை விற்று தீருவதையும் யார் செய்வது..

நான் மகிழ்ந்து கிடக்க சில நூறு செலவானாலும், திரைக்கூடம் செல்ல பணித்தது யார்?

நடிகன் வெறும் நடிகன்...

அவனை கண்டு வியப்பு கொள்வதும், அருகில் வந்தால் நெருங்கி படம் எடுத்து பகிர்வதும் பொதுபுத்தியாகி போனது.

ரசித்தல்.....

நடிகனும், நடிகையும் திரையில் கண்ணுக்கு குளிர்ச்சியாகிறார்கள்...

நான் வாழ முடியாததை, வாழ நினைப்பதை திரையில் வாழ்ந்து காட்டுகிறார்கள்...

உதாரண மனிதர்களாகிறார்கள்...
என் ரசனைக்குரியவராகிறார்கள்....

இவர்கள் திரையில் இப்படியென்றால், நிஜவாழ்க்கையில் எப்படியிருப்பார்கள்...

அவரைப்போல் வாழ நானும் தயாராக மனம் விரும்பி, அவர்களின் சொந்த நடவடிக்கையில் கவனம் கொள்கிறது..

இதற்கு அப்பப்ப தீனிப்போட்ட ஊடகங்களை நான் ஒருநாளும் உதாசீனப்படுத்…

சோறும், சொகுசும் என் வாழ்வின் இலக்கு

Image
சோறும், சொகுசும் என் வாழ்வின் இலக்கு இது தான் ஒட்டுமொத்த மனித குலமே ஆசை படுகிற வாழ்க்கை முறை... சோற்றுக்காக... பணம் வேண்டும்.
பணம் ஈட்ட பணி வேண்டும்..
பணி செய்ய படிப்பு வேண்டும்... படிக்க (மட்டுமே) வாய்ப்புகள் இருப்பதால்... வசதிக்கேற்ப எல்லோரும் படிக்கிறோம், படித்த பின் பணிக்கு செல்கிறோம், பணம் ஈட்டுகிறோம், ஏறக்குறைய சொகுசு சேர்க்கிறோம்..
சோறு உண்கிறோம்... இந்த சொகுசும், சோறும் பெற போய்.... இப்ப உண்மையா மனதுக்கும் உடலுக்கும் சொகுசு தரும் இயற்கையை இழந்து வரோம்... சோறு போடுற உழவை துறந்தோம்... பட்டணம் போய் குளிரூட்டப்பட்ட அறையில் பணம் பயிரிட்டுக்கொண்டிருக்கிறோம்.. மழை காலமான புரட்டாசி, ஐப்பசியில் கோடையை உணர்கிறோம்... விசிறி சுழலில் மூச்சு வாங்குகிறோம்... கிராமத்தில் கழனிகள் கட்டாந்தரையாகிவிட்டன..
நீர்நிலை இல்லை..
உழைக்க ஆள் இல்லை.. காணுமிடமெல்லாம் கடைசி தலைமுறை உழவர்கள்... இதை வெம்பி வெட்கமில்லாமல் எழுதி ஆதங்கபடுற என் உள்ளத்தின் இன்னொரு மூலை பணம் ஈட்டு , பணம் ஈட்டு , பணம் ஈட்டு... உழவால் பட்ட கடனை, இழந்த மதிப்பை ஈடுகட்ட பணம் ஈட்டு, பணம் ஈட்டு , பணம் ஈட்டு என்கிறது... என்ன செய்வது... உழுதுண்ட…

மனித உறவுகள் மேம்படட்டும்

ஒவ்வொரு மனிதனும் , சகமனிதர்களுடனான உறவை சரிவர மேற்கொள்ளாததால் தான் பொறாமை, வன்மம், ஆணவம், சகிப்பின்மை, அது இதுன்னு மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்குகிற பேரில் மனிதத்தை தொலைக்கிறார்கள்...
யாரை பார்த்தாலும், முகநூல் பதிவில் மனித உறவுகளில் உள்ள சிக்கல்களை மையமாக கொண்ட பொன்மொழிகளை பகிர்கிறார்கள் அல்லது தாங்களாகவே தத்துவங்களை எழுதி வைக்கிறார்கள்...
குறிப்பாக மனித உறவில் சிக்கல் , காதல், நட்பு ஆகியவற்றை தாண்டி, பணியிடங்களில் தான் அதிகமாக இருக்கிறது.
சக பணியாளர் படிக்கவே , தத்துவ பொன்மொழிகளை பதிந்து விடுவதாக ஆய்வில் தெரியவருகிறது. அதனை சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கிறாரோ இல்லையோ, அதே கருத்துடைய வேறொருவர் பார்த்து பகிரப்படும் போது , இந்த உறவு சிக்கல் எவ்வளவு வீரியமாக பரவி கிடக்கிறது என்பது அடையாளப்பட்டு விடுகிறது.
இது சமூக சிக்கலாக்கி விடும் என்பதும் இன்னொரு அதிர்ச்சி... இருந்தபோதும், சமூக வலைதளங்கள் இத்தகைய உளவியல் சிக்கல்களை கொட்டி தீர்க்கும் இடமாக அமையும் போது ஆறுதலான பகிர்வும், கருத்தும் மனமாற்றத்தை உண்டாக்கும்...
ஆனால் , இது எல்லா சூழலிலும் வேலை செய்யாது... ஆக, இன்னா செய்யாமையை கடைபிடிக்கும்…

திரிஷா இல்லைன்னா நயன்தாரா

அண்மையில் திரிஷா இல்லைன்னா நயன்தாரா திரைப்படத்தினை பார்க்க நேர்ந்தது.
அது அப்படியே இருக்கட்டும்.
கீழ்காண்பதை முதலில் படித்து விட்டு தலைப்புக்கு வருவோம். திரைப்படங்கள் பொழுதுப்போக்கு என்று கூறப்பட்டாலும், மக்கள் அதனை வெறும் பொழுதுப்போக்காக மட்டும் நுகர்வதில்லை.... திரைப்படம் - ஓர் ஊடகம் அது மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கண்ணாடி.. அங்கு காட்டப்படும் காட்சிகள் கற்பனைகளாக இருந்தாலும், கதையோட்டம் சிறிதேனும் நடைமுறை வாழ்வியலோடு ஒன்றிகிடக்கும் என்பதில் அய்யமில்லை. சமகால வாழ்க்கைமுறைகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணப்பட்டு போக திரைப்படங்கள் உதவுகின்றன. செயல்பாடுகளில், பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் செய்ய, சீர்த்திருத்திக் கொள்ள, சரியானவற்றை அடையாளங்காண திரைப்படங்கள் உதவுகின்றன. நாகரிக மாற்றங்களும், திரைப்படங்களோடு சம்பந்தப்பட்டுதான் இருக்கின்றன. கதாபாத்திரங்களின் உடை, நடைகள் யதார்த்த மனிதர்களுக்கு தொற்றிக்கொள்கின்றன. கற்பனைகள் காட்சியாக்கப்பட்டாலும், மீண்டும் அந்த காட்சி நிஜமாக்கப்படுகிறது என்பதும் மறுக்க இயலாது.. ஆக, இந்த காட்சி ஊடகத்தை கையாளும் கலைஞர்கள் சற்று நடப்பு சமூகவி…

தலைநிமிர்வு கொண்டேன்..!

Image
இரண்டரை ஆண்டு காலம் இருக்கும்...

தலைகுனிவு வாழ்க்கை..
பெரும்பாலும் பொது இடத்தில்
தனிமையில் இருந்தாலே தலைகுனிவு தான்...

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்பட்ட தொடர்பு...
காலத்தின் அவசியம், பணி நிமித்தம்...
தலைகுனிவு நிரந்தரமாகிவிட்டது...

ஜூலை 25, 2015 பகல் 1.30 மணி..
தலைகுனிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வரப்போவதை அந்த நொடி வரை அறிந்திருக்கவில்லை...

மாநகர பேருந்து வருகைக்காக காத்திருந்த அந்த பொழுதிலும்..
தொடர்பு நெருக்கமாகவே இருந்தது...

பேருந்து வந்தது..
முதல்படி ஏறும் அந்த கணமும் என் இதயத்தோடுதான் ஒன்றிகிடந்தது...

மூன்று படி ஏறி சமதளத்தில் நின்று
இதயத்தை தடவினேன்....

உறவு அற்றுப்போனது...
அல்ல அல்ல உறவு களவாடப்பட்டது.
தொடர்பு திருடப்பட்டது..

அப்போது தான் இதயத்தை வெகுநேரம் தொட்டப்படியே உணர்ந்துக்கொண்டேன்..
சென்னையில் திருடர்கள் இருப்பதை....

தலை நிமிர்ந்தது...
தலை நிமிர்வு என் சிந்தனைக்கு தீணிப்போட்டது...

அன்றைய நாளிலிருந்து..

பொது இடத்தில் தனிமையில் இருக்கும் போதெல்லாம்...
உலகை கவனித்தது என் கண்கள்..
மூளைக்குள் சிந்தனை, கற்பனை...
கவிதைகள்... அக்கறை கீற்றுகள்...
அசைபோட்டன எண்ணற்ற எண்ண…

இணையமும் தமிழ் செய்தி ஊடகங்களும்

Image
இணையதளம் இன்று பிரதான செய்தி ஊடகமாகி விட்டது.

இதற்காக தான் கூகுள் தனது முக்கிய திட்டப்பணிகளில் செய்தியாளர் மற்றும் செய்தி இணையதளங்களுக்காக தனி கவனம் செலுத்தி வருகிறது.

இதுமட்டுமல்லாது சமூக வலைதளங்களான முகநூல், டிவிட்டர், கூகுள்+ கூட செய்தி வழங்கும் முக்கிய தளமாகி விட்டன.

அதாவது, மேற்சொன்ன இணையதளங்களின் நோக்கம் தொடக்கத்தில் வேறு. ஆனால், இன்று அவற்றின் பிரதான நோக்கம் செய்தி .

உலகளவில் மிகப்பெரிய அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் இணையதளங்களை தனது விளம்பரப்பலகையாக பயன்படுத்தாமல், பிரதான செய்தி வழங்கல் தளமாக்கி விட்டன.

இதில் கணிசமான வருவாயும் ஈட்டுகின்றன அந்த நிறுவனங்கள்.

இந்த தொழில்நுட்பத்தை ஆரம்பகாலத்தில் இருந்து நமது இந்திய ஊடகங்கள் நோட்டமிட்டுக்கொண்டே இருந்தன.

இதன் வரவு எங்கிருந்து வருவாயை பாதிக்குமோ என்ற அச்சத்தில் அச்சு மற்றும் காட்சி  ஊடகங்கள இருந்தன.

ஆனால், தகவல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி, அனைவரின் கைகளில் செல்பேசியை கொண்டு சேர்த்தது மட்டுமல்லாமல் இணைய பயன்பாட்டை அதிகரிக்க செய்தது..

இணையதளம் மூலம் சம்பாதிக்க முடியும் என்ற நிலை பிரகாசமானதும்... இணைய இதழ்கள் வரிசை கட்ட தொடங்…

ஆபாசத்தை தேடும் இளைஞர்கள்...

Image
அறிவுத்தேடலில் இணையம் இன்றியமையா ஒன்றாகி விட்டது இன்றைய காலக்கட்டத்தில்...

இதில் மூழ்கி சின்னாபின்னமானவர்களும் உண்டு, மூழ்கி முத்து எடுத்தவர்களும் உண்டு.

சரி தத்துவங்களுக்கு அப்பால் சில உண்மைகளை உடைப்பதுவே இந்த பதிவின் நோக்கம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

என்னவென்றால், இணையம் என்றால் முக்கிய இடத்தில் இருப்பது “ஆபாசம்”.

இணையத்தில் மூழ்கி முத்தெடுப்பவர்களில் பலர் தன்னந்தனியே என்ன பார்ப்பார்கள் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை...

ஆனால் ஆபாச இணையதளமே, யாரெல்லாம் ஆபாசங்களை ரசிக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்துள்ளது.

அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

1980 களுக்கு பிறகு பிறந்தவர்களிடம் ( இன்றைய இளைஞர்கள் ) நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 24 விழுக்காடு பெண்களும், 76 விழுக்காடு ஆண்களும் ஆபாசங்களை பார்ப்பதாக தெரியவந்துள்ளது.

இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பெண்களின் அளவீடு வழக்கத்தை விட அதிகம் என்கிறது ஆய்வு.

அதாவது, முந்தைய தலைமுறையை விட (35+ வயதினர்) இந்த தலைமுறை இளைஞிகளில் ஆபாசத்தை ரசிப்பவர்கள் அதிகமாம்.

குறிப்பாக இரவு 11 மணிக்கு மேல் ஆபாசத்தை தேடும் இளைஞர்கள், சராசரியாக 9 நிமிடங்கள் ஆபாச…

குடிப்பவனிடம் அறிவுரை கூறுவது....

Image
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.
இதை நான் சொல்லலைங்க...
நம்ம வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அனுபவித்து எழுதி இருக்கிறார்...
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

கோயம்பேடு பேருந்து நிலையம்

Image
ஊருக்கு பேருந்தும் கிடைக்கும்.. உறவுக்கு பெண்ணும் கிடைக்கும்... வேறெங்குமில்லை, 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் சென்னையின் முக்கிய இடமான கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்
தான். இங்கு வெளியூர் செல்வோர் கணிசமாக நடமாடுவது நாம் அறிவோம்... ஆனால், இங்கேயே குடித்தனம் நடத்துவோரை அறிவோமா...? சொந்த ஊர் செல்ல வாரந்தோறும் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று தான் பேருந்து பிடித்து செல்வேன்.. ஒவ்வொருமுறையும் புதுப்புது காட்சிகள் கண்களில் தென்படும்... அதனை பட்டியலிட்டால் பக்கங்கள் நீளும்.. இருந்தாலும், இன்றைய காட்சிகளையாவது பட்டியலிட்டு விடுகிறேன்.. பேருந்து நிலையம் நுழைந்ததும் அகன்ற அரங்கம் நம்மை வரவேற்கும்.
இரவில் அங்கு பெருங்கூட்டம் படுத்து கிடக்கும்.. அதில் பாதி கடைசி பேருந்தை தவற விட்டதும், மீதி வீடே இதுவென வாழ்ந்து கிடப்பதுமாக இருக்கும்... இங்கு அமர மட்டுமே அனுமதி . ஆனால், கூட்டம் மிகுதியானால் விதிகளுக்கும் ஓய்வு வழங்கப்படும். சில நேரம் அந்த அரங்கம் வெறிச்சோடி இருக்கும்.. சுற்றி பார்த்தால் சில காவல் தெய்வங்கள் கொம்புகளால் தரையை தட்டிக்கொண்டிருக்கும். ஆனாலும், மேற்சொன்ன காட்சி அப்படியே இர…

வாழ்க தா(போ)லி !

Image
தாலி என்பது இந்து சமயத்தை பின்பற்றுகிற பெண் ஒருவருக்கு, ஒருங்கே இல்லறம் ஏற்கும் ஆண் அணிவிக்கும் கயிறு என்பதை யாவரும் அறிவர். அது அண்மையில் கேலி கூத்தான கதை ஊரறிந்ததே..
சரி. விடயத்துக்கு வருகிறேன். சென்னை மாநகர பேருந்தில், பயணித்துக்கொண்டிருந்தேன். பின் இருக்கையில் இருந்ததால், முன்னோக்கி என் பார்வை இருப்பதும் இயல்பே... சட்டென என் கண்ணில் பட்டது ஒரு இளம்பெண்ணின் தாலி... அது அசாதாரணமாக முதுகில் தொங்கிக்கொண்டிருந்தது. ஒரு வேளை சங்கிலி பறிப்புக்கு இலக்காகி, பின்னர் முயற்சி தோல்வியடைந்ததால் தப்பித்த தாலியோ எண்ணிக்கொண்டேன்... இது நடந்து நாட்களானது... அண்மையில் அதேபோல் காண நேர்ந்தது, வேறொரு சூழலில்... பின்னர் தான் தெரிந்தது , பெரும்பாலான இளம்பெண்கள் தங்கள் தாலியை கழுத்தில் இருப்பதை அசிங்கமான அடையாளமாக கருதுவது... அதை ஆடைக்குள் மறைத்துக்கொள்கிறார்கள். சில சமயம் அது வெளியே வந்து காட்டிக்கொடுத்துவிடுகிறது.. தெளிவான புரிதல் என்ன்வென்றால்.. பெண்கள் தாலியை விரும்புகிறார்களோ இல்லையோ... அது வெறும் கயிறாக இல்லாமல், தங்கத்தால் ஆனதென்றால் சமூகத்தில் மற்றவர் முன் மதிப்பாக உணருகிறார்கள் என்பதை உணர முடிகி…

டிஜிட்டல் அம்னீசியா தெரியுமா உங்களுக்கு...?

Image
ஸ்மார்ட் ஃபோனை சதா கட்டி அழும் நண்பர்களே..! டிஜிட்டல் அம்னீசியா  தெரியுமா உங்களுக்கு...?

ஞாபக மறதியில் இது ஒரு வகையாம். ஸ்மார்ட்ஃபோனையும், இண்டெர்நெட்டையும் எந்த நேரமும் கட்டி அழும் நம்மள மாதிரி ஆளுங்களை இந்த நோய் தாக்குமாம்... நாம நம்ம மூளையை கூகுளிடம் தாரை வார்த்து கிடப்பதையே அறியாமல் இருக்கிறோமே... இது தான் இந்த நோய்க்கான முதல் அறிகுறி... எதையும் ஞாபக வச்சுக்காம , ஒன்னு கூகுளை தட்டனும், இல்ல ஃபோனை தட்டனும்... இது தான் நம்ம நாலேஜ் என்றால்... நமக்கு வந்திருக்கும் நோய்க்கு பேர் டிஜிட்டல் அம்னீசியா.. பத்து ஃபோன் நம்பர் கூட... நம்மால ஞாபகத்துல வச்சுக்க வக்கில்லனா நமக்கு வந்திருக்கும் நோய்க்கு பேர் டிஜிட்டல் அம்னீசியா.. அமெரிக்கக்காரனுக்கு இந்த பாதிப்பு அதிகமா வந்துவிட்டதாம்.
உஷார் நண்பர்களே...
ஸ்மார்ட்ஃபோன் ஹாலிடே ன்னு ஒரு நாள் அனுசரிக்க வச்சுடாதீங்க..

இரவில் செய்தி வழங்கும் தொலைக்காட்சிகள்

Image
தந்தி தொலைக்காட்சியும், புதிய தலைமுறை தொலைக்காட்சியும் இரவிலும் செய்திகளை நேரலையாக தொகுத்து வழங்குகின்றன.
இருநிறுவனத்தின் சேவைக்கும், ' போட்டி 'க்கும் வாழ்த்துகள்...
(தந்தி தொலைக்காட்சி) (புதிய தலைமுறை தொலைக்காட்சி)

இந்திய மொழிகளில் கவனம் செலுத்தும் கூகுள்

Image
உலகளவில் இணைய சந்தையில் இரண்டாமிடத்தில் உள்ளது இந்திய நாடு.
இங்கு இணைய தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க இணைய நிறுவனங்கள் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் சூழலில் டிஜிட்டல் இந்தியா என்ற மத்திய அரசின் திட்டம், அவர்களுக்கு எளிமையாக வழி அமைத்துக்கொடுத்துள்ளது.

முக்கியமாக, எல்லா துறைகளும் மின்னணுமயமாக்கும் மத்திய அரசின் நோக்கம், தொழில்நுட்ப பயன்பாட்டில் உலகளவில் முந்தி இருக்க வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

கூகுள் என்கிற உலகின் மிக பெரிய இணைய தேடு பொறி, மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தோடு கைக்கோர்த்து, பல்வேறு திட்டப்பணிகளை வகுத்து வருகிறது.

தொழில்முனைவோர்களை இணையத்தில் இழுக்க, உள்ளூர் மொழிகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது கூகுள்.

ஆங்கிலம் பேச தெரியாத 20 கோடி இந்தியர்களை இணையத்திற்குள் நுழைக்க கூகுளின் இந்த முயற்சி அழிந்தொழியும் மொழிகளுக்கு மறு உயிர்ப்பாக அமையும்.

குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், அதில் இணையப் பயன்பாடும் உயருகிறது..

இதன் பொருட்டு, தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கான தொழில்நுட்ப ஆதரவும் இனி உயரும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை…

சென்னையில் ”சொகுசு” தொடர்வண்டி !!

Image
இன்று சென்னை சொகுசு தொடர்வண்டியில் பயணித்து பார்க்கலாம் என்று வடபழனியில் இருந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் சென்றேன்...
அன்றாடம், தேவைக்காக பயணிக்க முடியாத கட்டணம் தான், நம்மை மற்றொரு முறை என்று வருவோமோ என்று யோசிக்க வைக்கிறது... கட்டணத்திற்காக ரூவா தாளை தடவி தடவி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.. ஆனால், தொடர்வண்டி பயணம் புது அனுபவம் தான்... சொகுசான பயணம்.. சுற்றுலா செல்வது போல் இருந்ததே தவிர... மீண்டும் வர மனம் தோன்றவில்லை... பயணித்த அனைவருமே புதிய அனுபவத்தை நுகர வந்தவர்களே தவிர... பொது பயன்பாட்டுக்கு உகந்ததாக கருதவில்லை... அரசு.. கட்டணத்தை கொஞ்சம் கருணையோடு குறைத்தால் பாமரனும் படியேறி பயணிப்பான்... இல்லையேல்... வழக்கம் போல் வெள்ளை பலகை பேருந்தில் படியிலேயே பயணிப்பான்...


கட்செவி அஞ்சல்

Image
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எண்ணற்ற கண்டுப்பிடிப்புகள், ஆராய்ச்சிகள் என நொடி பொழுதில் பல மாற்றங்களை கண்டு வருகிறோம்...

அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்கு பெயரிடும் முறை வரையறுக்கப்பட வில்லை என்றாலும், கண்டுப்பிடிப்பாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே, அதன் தன்மையை பொறுத்து கண்டுப்பிடிப்புகள் பெயரிடப்பட்டுள்ளன.

எனினும், அது பன்மொழி பயன்பாட்டின் போது காரணம்/செயல்பாடு/தன்மை பொறுத்து மொழி மாற்றி பெயரிடப்படுகிறது.

இது மொழிபெயர்ப்பாகவும் சில சமயம் அமைந்து விடுகிறது.

குறிப்பாக தகவல் தொழில்நுட்ப சேவைகளில் எண்ணற்ற புது சொற்கள் ஆங்கிலத்திலேயே முளைத்துள்ளன.

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற கருவிகள் அகராதியில் கிட்டத்தட்ட ஒரு சொல்லாக இடம்பெற்று விட்டன.



சரி, நான் சொல்ல வேண்டிய கருத்தை முதலில் பகிர்ந்துவிடுகிறேன்.

தினமணி செய்தித்தாளில் ஒரு புதிய சொல் பயன்பாட்டை காண முடிந்தது. ”கட்செவி அஞ்சல்”.

அது என்ன கட்செவி அஞ்சல். கண்+செவி = கட்செவி

முன்னர் குறுஞ்செய்தி மூலம் வெறும் எழுத்தோ அல்லது படமோ அனுப்பிகொண்டிருந்தோம்.

இப்பொழுது வாட்ஸ் அப் எனும் மென்கருவி மூலம் ஒளி, ஒலி, உரை என காணக்கூடியது, கேட்க கூடியதும…

புதிய தலைமுறை....

Image
புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையம் தாக்கப்பட்ட தகவல், ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பி விட்டது. கருத்து சுதந்திரம் என்பதில் இருந்து ஊடக ஊழியர்களின் பாதுகாப்பு வரையிலான அனைத்து மட்டத்திலும் குரல்கள் ஒலித்தன. ஒலிக்கின்றன.

இங்கு கவனிக்க வேண்டியது.

ஒரு ஊடகம் தனது பதிப்பில் அல்லது ஒளிபரப்பில் சிறப்பு தொகுப்புகளை வழங்கும் போது, நடுநிலைமை அல்லது உண்மையின் பக்கமிருந்து தனது கருத்தை ஆழமாக முன்மொழியும்; அதற்கான ஆதரவு குரல்களையும் பதிவு செய்யும்.

அதேபோல், சர்ச்சை ஏற்படும் வாய்ப்புள்ள பொருளில் ஆவணமாக்கும்போது, இரு தரப்பு கருத்துகளையும் பதிவாக்கி ஒளிபரப்பவோ, பதிவிடவோ செய்யும்.

நிற்க.

ஒரு செய்தியில் தனி நபரையோ, நிறுவனத்தையோ, அரசையோ, அமைப்பையோ குற்றஞ்சாட்டுவதாக இருந்தால், குற்றஞ்சாட்டுக்கு ஆளாகுபவரின் பதில்/கருத்தை கேட்டு அதனையும் சேர்த்து ஒளிபரப்புவதையே பெரும்பான்மை ஊடகங்கள் கடமையாக கொண்டுள்ளன. அந்த வகையில், புதிய தலைமுறை கவனமாக செய்திகளை கையாண்டு வருவதை மறுக்க முடியாது.

இந்நிலையில், தலாக் என்ற ஆவணப்படமும், தாலி குறித்த விவாத நிகழ்ச்சியும் நேரலையாக இல்லாமல் பதிவு செய்து தணிக்க…

தோழி ! இயங்குவோம் மாற்றங்களை நோக்கி...

Image
நீ என்றால் அழகு
ஒத்துக்கொள்வாயா...
அலங்கரிக்காமல் பொதுவெளியில் தோன்ற உன் மனம் ஒத்துவராது என்பதை..

இடைசிறுத்து, முலைபருத்து
உன்னை செதுக்கிவிட்டார்கள்.
கோவில் சிலைகளில் மட்டுமல்ல
கேளிக்கை திரைகளில்....

சொல் பார்ப்போம்
நீ காமத்தில் அடங்காதவள் என்று.

மதிப்புக்கூட்டிய உன் இயல்புகள் ஆண்களுக்கான சந்தையில் ஏராளம்...
உற்றுப்பார் உன் ஆடைக்குள் எத்தனை தாராளம்..

உன்னை திரைவிலக்கி
இன்பத்துக்கு இரை தேடும்
என் இனத்தின் உச்சகட்ட வன்மத்தை
உள்ளபடியே நியாயப்படுத்துவது நியாயமல்ல.

உன்னை கொண்டாடும் இந்நாளில்
உனக்காக உரிமைக்குரல் எழுப்புவதும்
வாழ்த்து கூறுவதும் வாடிக்கையானது.

எது அழகு என்பதை
படம் காட்டும்
பகடித்தனத்தை தோலுரி

சமத்துவம் தேடும் உன் பயணத்தில்
ஆண் வேடம் அணியும் உன் அறியாமையை கழற்றியெறி

ஆண்மையில் அறிந்துக்கொள்
ஆளுமையில் அடையாளங்கொள்

சொற்பதங்களில் ஒன்றுமில்லை
கற்(பு)பிதங்களை வென்றெடு

பாலியல் விடுதலையல்ல உன் விடுதலை
சமூக கட்டமைப்பின் கட்டவிழ்ப்பே நமது எல்லை.

தோழி ! ஒன்றுகொள்.

நான் (ஆண்) உனக்கு எதிரியில்லை
நாமின்றி ஒன்றுமில்லை

இயற்கையின் நியதியை உணர்ந்திடு
பொருளாதாரம் சமநிலையானால்
நமக்கில்லை பாகுபாட…

இந்திய (இந்தி/ஆங்கிலம்) ஊடகங்கள் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என வாழ்த்துகின்றன...

என்ன? ஏன் ? என்கிறீர்களா.... நாம் பயன்படுத்தும் முகநூல், டிவிட்டரில் ஹாஷ்டேக் எனப்படும் குறியிடும் முறை என்று உள்ளது.

நாம் ஒரு கருத்துருவின் கீழ் தகவல்களை பகிர்கிறோம் என்றால், அதற்கான ஒரு பொதுவான தலைப்பிட்டு எழுத வேண்டும். அப்படி எழுதினால், நம்மைப்போன்று, நாம் எழுதிய கருத்தொத்து எழுதுவோரின் கருத்துகளையும் ஒரு சேர பெற்று படிக்கலாம், பகிரலாம்...

அப்படி டிவிட்டரில் “ தமிழ்வாழ்க “ என்ற ஹாஷ்டேக் தற்போது பிரபலமடைந்துள்ளது...

நம்புவீர்களா..?  தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்த பதிவிடும் முறை அதாவது ஹாஷ்டேக் செயல்படாமல் இருந்தது. தற்போது தான் செயல்படுத்தி இருக்கிறார்கள் டிவிட்டர் தரப்பினர்...

முதலில் இந்தி மொழி யில் பதிவிட்ட ஜெய்ஹிந்த் (#जयहिन्द) பிரபலமான ஹாஷ்டேக் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது, சுமார் 24 மணி நேரத்திற்கு மேலாக #தமிழ்வாழ்க உள்ளது...
உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு. #தமிழ்வாழ்க
— KalaignarKarunanidhi (@kalaignar89) February 17, 2015 செம்மொழியாம் தமிழ் , இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் இருந்…

உழவே உழவே உயிரென போற்றி...

காணாமல் போன கழனிகளை...
கூகுளில் தேடி
வாழ்த்து செய்தி வரைபவர்கள் நாம்... பொங்கலுக்கு மட்டும் தான் ஏர் கலப்பையும், ஏறுதழுவலும் நமக்கு நினைவு வரும்... அதுகூட புதிய தலைமுறைக்கு தெரிந்துவிடாதபடி, சதைமினுக்கும் சாக்கடையர்களின் கூத்தாட்டம் காட்டுகிறோம்.. பண்பட்ட நிலமும், பண்பாட்டு தடமும்,
இல்லாதொழித்து
இனி எதை நாம் உண்போம்.. உழவை ஏற்போம்...
அழிவை தடுப்போம்... அறிவை பெருக்கி அண்டம் சுற்றும் எம்மால்
மண்ணை கிளறி மகசூல் காண முடியாதோ... உழவே உழவே உயிரென போற்றி உழவர் திருநாள் வாழ்த்துகளுடன்..
வெ. யுவராஜ்