Posts

Showing posts from September, 2014

பெண்களிடையே இணையம் தொடர்பான கல்வி

கூகுள் இந்தியா, பெண்கள் இணையத்தை பயன்படுத்த் வேண்டும் என்பதற்காக பரப்புரை இயக்கத்தை தொடங்கியுள்ளது.
இந்தி நடிகர் பர்ஹாந் அக்தர் உடன் இணைந்து, இதற்காக சமுக ஊடகங்களில் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பெயர்.. #ReachForTheSky (fb.com/hashtag/ReachForTheSky)
இதன் நோக்கம் பெண்களிடையே இணையம் தொடர்பான கல்வியை/அறிதலை அதிகரிக்க செய்தல்.
கடந்த ஆண்டு மின்கல்வி திட்டத்தை தொடங்கிய கூகுள் HelpingWomenGettingOnline என்ற இயக்கத்தை செயல்படுத்தியது. இதற்கு உதவியாக இண்டெல், எச்.யூ.எல்., ஆக்சிஸ் வங்கி இருந்தது.
இதன் விளைவாக கடந்த ஓராண்டில் மட்டும் இணையத்தை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 35 விழுக்காடு உயர்ந்துள்ளது.. ஆண்களின் எண்ணிக்கை 31 % தானாம்.
கூகுள் சொல்கிறது... உலகில் இணையம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா கிட்டத்தட்ட இரண்டாவது இடத்தில் உள்ளது என்று. ஆனால், இணையத்தை ப்யன்படுத்துவோரில் பெண்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட குறைவு என்று கவலைக்கொள்கிறது கூகுள்.
இதற்கு என்ன செய்யலாம் என்ற திட்டத்தில் மேலே குறிப்பிட்ட நடிகரின் MARD என்ற் அமைப்பு மூலம் ReachForTheSky என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளத…