உன் காலடி நோக்கி புறப்பட்டேன்..

நம்மாழ்வார் அய்யாவின் வானகத்தின் இயற்கை வேளாண்மை மற்றும் வாழ்வியல் பயிற்சி வரும் சனவரி 2-ல் நடைபெற இருந்தது. அதில் கலந்துக்கொள்ள திட்டமிட்டுருந்தேன்.....

காலத்தின் சூழ்ச்சி... அய்யாவை ஆட்கொண்டு சென்றுவிட்டது.

இயற்கை அழிகிறது..
நோய்கள் பெருகுகிறது...

எது இருந்தால் வாழ்வோ..
அதை அழித்து வாழநினைக்கும் மனிதனை
விழிப்பேற்படுத்த இயங்கிய மாமனிதனை
காலம் கடத்திவிட்டது..

உமது சொற்கேட்டு...
செயல் பார்த்து...
என் அறிவு விழித்து...
இனி வயல்வெளியை
பசுமையாக்க புறப்பட்டேன்....

உன்னிடம் கற்க,
உன்னுடன் இயங்க,
உன் காலடி நோக்கி புறப்பட்டேன்..

இழந்த உழவு
மறைந்த மரபு
விதைகளை தேடி... புறப்பட்டேன்...
உன்காலடி நோக்கி புறப்பட்டேன்..

உன்னை நேரில் காண எண்ணி 
இருந்த இரண்டொரு நாட்களை எண்ணி
காத்திருந்த என் காதருகே வந்தது உன் மரண செய்தி....
அதிர்ந்தேன்...
அகத்தோடு அழுதேன்...

நிலமகள் துயருறுகிறாள்..

மண்ணை மாசாக்கி..
மரங்களை மாயமாக்கி..
வளர்ச்சியென வாழும் அறிவிலர்களே...
உன்னை நீ அழித்து, என்ன நீ கிழிப்பாய்...
உண்ண நல்ல சோறு வேண்டும்.. 
அதை விட வேறு என்ன வேண்டும் 
அதை நீ எண்ண வேண்டும்...

என்று எனக்கு அறிவுரைகள் சொல்கிறது அய்யா.. உன் நினைவுகள்...

என்றோ நீ விதைந்துக்கொண்டாய் இந்த உலகிற்காய்....
இயற்கை வேளாண்மையால் இந்த உலகை உயிர்பிக்க....

இன்று நீ உடலால் மறைந்தாலும்... 
நினைவால் விதைக்கப்பட்டிருக்கிறாய்....

உன் இயக்கம் என்றும் உயிர்பித்திருக்கும்...
நிலமகள் பசுமை போர்த்திட நிற்கிறோம்
களத்தில் இளையோர் பட்டாளமாய்...

அய்யா....
வார்த்தைகள் இல்லை.....
உமக்கு என் கண்ணீர் அஞ்சலி......

- இயற்கை வழியில் வெ.யுவராசன்

Post a Comment

Popular posts from this blog

கட்செவி அஞ்சல்

அறிவியல் தமிழ் களஞ்சியம்

உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன்