செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)

செய்திகள் எனப்படுவது பொதுவாக  ‘நிகழ்வின் பதிவு’.

இது முதன்மையானதா... முதன்மையற்றதா... என்பதை முடிவு செய்வது நிகழ்வின் தன்மையை பொறுத்தது.

இந்த செய்திகளை ஒருங்கிணைத்து கொண்டு சென்று பொது மக்களிடம் சேர்ப்பது தான்  ‘ஊடகம்’.
இந்த ஊடகம் எதை கொண்டு சேர்க்கிறது. எதை பாதியிலேயே விழுங்கிவிடுகிறது என்பதெல்லாம் வாதத்திற்குரியது.

எது செய்தி என்பதும் வாதத்திற்குரியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த ஊடகங்களை வகைப்படுத்தினால், மூன்றாக பிரிக்கலாம்.

ஒன்று அச்சு ஊடகம், இரண்டு மின் ஊடகம்(தொலைக்காட்சி, வானொலி), மூன்று புதிய ஊடகம் (இணையம்)அச்சு, தொலைக்காட்சி , வானொலி (வானொலியில் செய்தி கேட்பது அரிதாகிவிட்டது) இவற்றை நாம் நன்றாகவே பயன்படுத்தி வருகிறோம். இவற்றை   விளக்கவும் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.

இவற்றையெல்லாம் தாண்டி வளர்ந்து வருவது இணைய ஊடகம். இதை பற்றி நாம் அறிய வேண்டிய நிறைய உள்ளது. இதனை மின் ஊடகங்கள் பிரிவில் சேர்க்கலாம். இருந்தாலும், இந்த இணைய ஊடகத்திற்கு தனிச்சிறப்புகள் உள்ளன. அதனால், தனியாக பிரித்தறிவது நல்லது.

ஒரு காலத்தில், இணையதளங்கள் வளர்ந்த நகரங்களில் மட்டுமே காண கூடியதும், அணுக கூடியதுமாக இருந்தது.
ஆனால், 15 ஆண்டுகளில், “யாருக்கு தான் தெரியாது இணையதளங்கள் பற்றி” என்றாகிவிட்டது.

படித்த சமூகம் பெருகிவிட்டதால், அவர்களுக்கு இணையதளங்கள் இன்றியமையாததாகி இருக்கிறது.

இணையதளம் தனி பகுதி.  இதனை இன்னொரு நாள் விளக்கமாக காணலாம்.

இணையதளம் எவ்வாறு செய்தி ஊடகமாகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

செய்திக்கென்று இணையதளங்கள் - ஆங்கிலமல்லாத பிற மொழிகளில் பெருகி விட்டது.

ஏன் ஆங்கிலமல்லாத.. என்று சுட்டிக்காட்டுகிறேன் என்றால், கணினியை கண்டுபிடித்ததும், இணையத்தை பயன்படுத்த தொடங்கினதும் ஆங்கிலத்தில் தான் என்பதால், தமிழ் போன்ற பிற மொழிகளின் எழுத்துருக்களை கணினிகள் ஏற்காதவையாக இருந்தன.

அதற்காக தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டது. இதையெல்லாம் ஒருங்கே கணினியில் நிறுவி இணையதளங்களை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல...

இந்த எழுத்துரு கதையும் தனி கதை. அதையும் பிறகொரு நாள் பார்ப்போம்.

சரி. இணையத்தில் செய்தி ஊடகங்கள் பற்றி பார்ப்போம்.வெறும் எழுத்துகளாக மட்டும் செய்திகளை  படிக்காமல், அதனை, எந்த வடிவிலும் தெரிந்துக்கொள்ள இணையதளங்கள் உதவி புரிகின்றன.
ஒலியாக கேட்கலாம், ஒளியாகவும் பார்க்கலாம்.

வழங்கல் (ப்ரெசண்டேசன்) முறை பயனரின் விருப்பதற்கு ஏற்றாற் போல் இணைய ஊடகங்கள் அமைகின்றன.

அவ்வாறு பல வடிவங்களில் பல மொழிகளில் செய்திகளை உடனுக்குடன் வழங்க இணைய ஊடகங்கள் வளர்ந்து விட்டன.

இந்த ஊடகங்களுக்கென வரன்முறை கிடையாது . எதை வழங்க வேண்டும் . எந்த வாசகருக்கு எது பிடிக்கும் என்பதெல்லாம் அறிந்து தன்னியல்பாக அந்த இணையதளங்கள் மாறிக்கொள்கின்றன. நீங்கள் இரவு நேரங்களில் என்ன பார்ப்பீர்கள் என்பதை நுகர்ந்து அதற்கேற்றாற் போல் அந்த இணையதளம் இரவு நேரங்களில் நீங்கள் / உங்களை கேட்காமலே , அதனை வழங்க ஏற்பாடு செய்கின்றன.

அது எது என்பது.. உங்களின் தேடலை பொறுத்தது.

அப்படி, செய்தி இணைய தளங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதை எப்படி ஒருங்கே படிப்பது.. பார்ப்பது.. என்ற குழப்பத்திற்கும் விடை அளிக்கிறது இணையம்.....

தேடுபொறிகள் என்ன செய்யும் . ?

பொதுவாக தேடும் சொல் எந்த இணையதளத்தில் உள்ளது என்பதை தேடி காட்டும்.

இன்னும் மேம்பட்ட தேடலில், காணொளியாகவோ, படங்களாகவோ, தேடி கொடுக்கும்...

செய்தி இணையதளங்களில் மட்டும் தேடு என்றால்... அதையும் தேடி கொடுக்கும்...

என்னடா.. செய்தி... ஊடகம்... இணையதளம் ன்னு சொல்லிவிட்டு... தேடுபொறி க்கு வந்துவிட்டேன்னு நினைக்காதீங்க...

இணைய ஊடகம் குறித்து பாடம் எடுக்க விரும்பவில்லை. அதற்கான பாடசாலையும் இது அல்ல.  அதனால், அடுத்து வருவதை கவனமா படிங்க.

இங்க தான் நம்ம கதை இருக்கு.

கூகுள்.

இது இணைய உலகின் அசைக்க முடியாத ஒன்று.

இந்த கூகுள் சேவைகள் பலவற்றை நாம் பயன்படுத்தி வந்தாலும். நம்மில் எத்தனை பேர் கூகுளின் செய்தி சேவையை பயன்படுத்துகிறோம் என்பது தெரியவில்லை.

கூகுள் செய்தி சேவை மற்ற செய்தி சேவைகளை விட வேறுபட்டது.

எடுத்துக்காட்டாக யாகூவின் செய்திச்சேவையை பாருங்கள். மைக்ரோசாப்ட்டின் எம்எஸ்என் இணையதளத்தையும் பாருங்கள்...

அவற்றின் செய்திகளில், தனிப்பட்ட நிறுவனங்களின் செய்திகளை விலைக்கு வாங்கி பதிவிட்டிருப்பார்கள்....

ஆனால், கூகுள் அவ்வாறு இல்லாமல், செய்தி இணையதளங்கள் பதிவு செய்யும் நேரத்திலேயே அந்த செய்திகள் கூகுள் செய்திகள் பக்கத்தில் வந்துவிடும்.

அதை சொடுக்கினால், அந்த கூறிப்பிட்ட இணையதளத்திற்கு நேரடியாக செல்லும்.

அதேப்போன்ற செய்திகள், பிற இணையதளங்களில் பதிவாகி இருந்தால் அந்த பதிவுகளும் காட்டப்படும்...

சரி. நமக்கு ஒரு கணக்கு  மனதுக்குள் தோன்றியிருக்குமே... இதனால் கூகுளுக்கு என்ன லாபம் என்று..?

நாம் கூகுளுக்கு என்ன லாபம் என்பது பற்றி சிந்திக்காமல் , இதனால் செய்தி இணையதளங்களுக்கு  என்ன லாபம் என்று தான் கணக்கிட வேண்டும்.

இந்தியாவில், ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் தான் கூகுள் செய்தி சேவை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் செய்தி சேவையில், பெரும்பாலான அச்சு ஊடகங்களின் (நாளிதழ்) இணையதளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு தொலைக்காட்சிகளின் இணையதளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இதை தாண்டி, விமர்சனங்கள் எழுதும் இணையதளங்களும், மற்ற இணையதளங்கள் என சிலவற்றையும் காணமுடிகிறது....

நீங்கள் செய்திகளை வழங்கும், இணையதளங்களை கொண்டிருந்தால்,
இதற்கு மேல் இந்த சேவை குறித்து அறிந்து கொள்ள, உங்களுக்கு ஆசை வரலாம்...

இதில் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியாது. கூகுள், செய்தி இணையதளங்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. அவற்றையும் அறிந்துக்கொண்டால், அதன் முழு பலனையும் அனுபவிக்கலாம்.

* கூகுள் செய்தி சேவையில் இணைவது எப்படி..?
* கூகுள் சேவைகளில் செய்தி இணையதளங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியவை என்னென்ன..?
* இணைய உலகில் கோலோச்ச ரகசியங்கள் என்னென்ன..?

தொழில்நுட்பத் தகவல்களை தாண்டி.... 
இன்னும் அறிந்துக்கொள்ள காத்திருங்கள்.... 

( அடுத்த பகுதியில் தொடரும்...)செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)


- யுவராஜ் .வெ.


Post a Comment

Popular posts from this blog

கட்செவி அஞ்சல்

உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன்

அறிவியல் தமிழ் களஞ்சியம்