10.12.13

செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)

ஊடகங்களுக்கான கூகுள் சேவைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து அறிந்து வருகிறோம்.

அதன்படி, ஒரு செய்தி இணையதளம், தனது செய்தியாக்கத்தை எவ்வாறு வாசகர்களை ஈர்க்க முடியும் அல்லது வாசகர்களை சென்றடைய செய்வது என்பது பற்றி அறிந்தோம்.

அதாவது கூகுள் செய்திகள் சேவை குறித்து அறிந்தோம்.

அதேப்போல், கூகுள் வழங்கும் மற்றொரு சேவையான கூகுள் ப்ளஸ் சமூக வலைதளத்தையும், அதன் பயன்பாடுகளையும் அறிந்துக்கொண்டோம்.

இணைய ஊடகங்கள் காணொளி சேவையை நேரலையாக வழங்கும் முறை குறித்தும், அந்த சேவையை கூகுளே வழங்குவது குறித்தும் அறிந்துக்கொண்டோம்.

சரி.

சென்ற பதிவில் நாம் குறிப்பிட்டது போல..

செய்தி இணையதளத்தில் காசு பார்ப்பது எப்படி?
யாரெல்லாம் நம் இணையதளத்தை பார்க்கிறார்கள்...?

என்பதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக செய்திகளை வழங்கும் இணையதளங்கள் மிகவும் வண்ணமயமாக, ஆர்ப்பாட்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எளிமையாக முதல் பக்கத்தில் பார்க்க கூடிய இடத்தில் முக்கிய செய்திகளை இடம்பெற செய்ய தெரிந்தாலே போதும்.

இது இணையதள வடிவமைப்பின் போது, நிரலாளர் மூலம் செயல்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பாக செய்திகளை எழுத்துகளாக இருப்பதாக பார்த்துக்கொள்ள வேண்டும். சில இணையதளங்கள் தலைப்புகளை படமாக மாற்றி பதிவேற்றி இருப்பார்கள்.

இதனால் என்ன சிக்கல் என்றால், நீங்கள் தேடுபொறியில் ஒரு குறிப்பிட்ட செய்தியை தேடுகிறீர்கள்... அந்த செய்திக்கு பொருத்தமாக,  உங்கள் தளத்தில் செய்தி உள்ளது.

ஆனால், அது பட வடிவமாக உள்ளது என்றால், தேடுபொறி அதனை தேடிக்கொடுக்காது. எழுத்தாக இருந்தால் அந்த செய்தி, தேடுபொறியின் தேடல் வரிசையில் இருக்கும்.

அதே சமயம், செய்திக்கு பொருத்தமான படங்களை இணைக்கலாம்.பொதுவாக, யாரும் நேரடியாக இணையதளங்களுக்கு சென்று தகவல்களை தேடுவதில்லை.

தேடுபொறியை நம்பியே நம் மக்கள் தகவல்களை தேடுகிறார்கள் என்ற உண்மையை அறிய வேண்டும்.


கூகுள் தான் இவர்களுக்கு எல்லாம்.


இதற்காக தான் நாம் தேடுபொறிக்கு ஏதுவான முறையில் இணையதளங்களை வடிவமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அந்தவகையில், செய்தி பக்கத்தின் இணைய முகவரியில் செய்திக்கு பொருத்தமான சொற்றொடர் இருத்தல் நலம்.

உதாரணமாக...

தேடுபொறியில் சில ஆங்கில சொற்களை பயன்படுத்தி, தமிழ் தளங்களில் தேட முனைகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

http://thamizhthottam.blogspot.in/2013/12/blog-post.html

என்ற முகவரியில் உள்ள சொற்றொடர், அந்த பக்கத்தில் உள்ள தகவலுக்கு தொடர்புடையதாக அமைத்திருந்தால், உடனே முதல் பட்டியலில் காண்பிக்கும்.

http://www.aljazeera.com/news/africa/2013/12/world-leaders-bid-farewell-mandela-20131210134926782841.html

இந்த இணையதளத்தின் பக்கத்தை பாருங்கள்... உள்ளடக்கத்திற்கு தொடர்புடைய வகையில் முகவரி உள்ளது.

இதுமட்டுமே காரணி என்று எடுத்துக்கொள்ள முடியாது.

இணைய பக்கத்தில் உள்ள தகவல்களுக்கு தொடர்புடைய சொற்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் அந்த பக்கங்களில் இணைக்க வேண்டும்...

இது பார்வையாளர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை... இந்த சொற்கள் மறைவாக அந்த பக்கத்தில் ஒளித்து வைக்கலாம்.

தேடுபொறியில் நாம் ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் தேடுவோம்.

அப்போது, அந்த சொல், இணையமுகவரியிலோ, இணைய பக்கத்திலோ இடம்பெற்றிருந்தால், தமிழ் தளங்களாக இருந்தாலும், தேடுபொறியின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.


இதுக்குறித்த  விழிப்பு இணைய ஊடகவியலாளர்களுக்கு இருந்தால் போதும்.

அதனை தங்களின் இணைய நிரலாளரிடம் (இணையதள வடிவமைப்பாளர்) வற்புறுத்தி சொல்லி, அந்த வசதியை பெற்றுக்கொள்ளுங்கள்.

இது தொடர்பான முழுமையான  தகவலை விரைவில் விளக்கமாக தருகிறேன்.


சரி . இதெல்லாம் எதற்காக கூறுகிறேன் என்றால், நீங்கள் காசு பார்க்க வேண்டாமா...?

அதற்காக தான்.

உங்கள் இணையதளம் அதிக வாசகர்களை கொண்டிருந்தால், அந்த இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டால், அதனை பார்க்க பார்க்க பணம் தான்.


நீங்கள் ஒரு ஆங்கில செய்தி தளம் வைத்திருக்கிறீர்கள் அல்லது உங்கள் தளத்தில் ஆங்கிலம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றால், கூகுள் ஆட்சென்ஸ் என்ற சேவை மூலம் விளம்பரம் பெறலாம்.

www.google.com/adsense

இந்த விளம்பர உதவி என்பது, அற்புதமான வேலையை செய்கிறது.

ஒருமுறை கூகுள் ஆட்சென்ஸ் வசதியை பதிவு செய்து , அதில் வழங்கப்படும் நிரலை இணையப்பக்கத்தில் எந்த இடத்தில் விளம்பர வர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ.. அங்கு இணைக்கலாம்.

இப்போது, அந்த பக்கத்தில் வாகன விபத்து தொடர்பான செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள் என்றால், அங்கு, வாகன பாதுகாப்பு தொடர்பான விளம்பரம் இடம்பெறும். அதாவது, உள்ளடக்கம் பொறுத்து, இந்த விளம்பரம் தேர்வு செய்யப்படுகிறது.

அதனால் தான் அதற்கு ஆட்சென்ஸ் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

நண்பர்களே... ஆங்கில இணையதளத்திற்கு கிடைத்த இந்த வாய்ப்பு தமிழுக்கு கிடைப்பதில்லை. ஏனென்றால், இந்த ’தானே விளம்பர தேர்வு செய்யும் வசதி’யை தமிழ் மொழிக்கு கூகுள் வழங்க இல்லை.

இருந்தாலும், இதேப்போன்று, விளம்பரங்களை தரும் சேவை நிறுவனங்கள் நிறைய உள்ளன. அதில் பதிவு செய்து, பணம் சம்பாதிக்கலாம்.


நினைவு வைத்துக்கொள்ளவும்... அந்தந்த நிறுவனம் வழங்கும் சேவை ஒவ்வொன்றும் மாறுபட்டவை... விளம்பரம் என்ன வரவேண்டும்..., பணம் எவ்வாறு கொடுப்ப்பார்கள் போன்ற விதிகள் மாறுபடும்...

உங்களுக்காக விளம்பரம் தரும் சில இணைப்புகள்...

http://publisher.yahoo.com/
https://adcenter.microsoft.com/
http://exchange.contextweb.com/
http://www.adengage.com/
http://adclickmedia.com/
http://www.oxado.com/
http://fairadsnetwork.com/
http://performancingads.com/
http://www.adsbingo.com/
https://www.adgitize.com/
http://buysellads.com/
http://www.viralblogads.com/
https://www.star-clicks.com/
http://chitika.com/
http://www.adbrite.com/
http://www.tribalfusion.com/
http://www.valueclickmedia.com
http://www.clicksor.com/
http://adsforindians.com/ads/index.asp


இந்த தகவலோடு, இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்...

அடுத்த பதிவில், நம்முடைய இணையதளத்தை பார்ப்பவர்கள் யார் யார்... எந்தெந்த இணையதளங்கள் நமது தளத்தை இணைப்பாக கொடுத்திருக்கின்றன... வாசகர்கள் எந்தெந்த வழிகளில் நமது இணையதளத்தை பார்க்க வந்துள்ளனர் போன்ற விபரங்களையும் காணலாம்...

காத்திருங்கள்...

- வெ.யுவராஜ்.

செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)

No comments:

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...