6.12.13

செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)

செய்திகளும், ஊடகங்களும், இணையமும் என்ற தலைப்பின் கீழ் தொடராக வரும் பதிவுகளில் கூகுளை அறிமுகப்படுத்தி, அதன் சிறப்புகளை விளக்கி வருகிறோம்.

இந்த விளக்கங்கள் கூகுளுக்கு விளம்பரம் தேட அல்ல. ஊடகங்களை விளம்பரப்படுத்த என்பதை நினைவுக்கொள்ள வேண்டும்.

முன்னர், பதிவுகளில் குறிப்பிட்டது போல... அசைக்க முடியாத ஒன்றாக கூகுள் திகழ்வதால்... அதன் சேவைகளை காலத்தே பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்பது நமது அவா. தமிழ் (ஊடக) சமூகம் இந்த வசதிகளை நுகர்தல் அவசியம்.

கூகுள் ப்ளஸ் மூலம் - பதிவுகளை பகிர்தல், ஊடக இணையதளங்களில் செய்தி ஆசிரியர் / செய்தியாளர் பெயருடனும், தன்விபரமுடனும் செய்திகளை வெளியிடவும் முடிகிறது.

தேடுபொறிகளில் குறிப்பிட்ட செய்தியுடன், அதன் ஆசிரியரின் விபரமும் கிடைப்பதால் வாசகருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சரி.

ஒரு இணைய ஊடகம் தனது செய்தி சேவைகளில் ஒரு பகுதியாக பார்வையாளர்களிடமிருந்து கருத்து கேட்கவோ, நேர்காணல் பதிவு செய்யவோ, நேரலையாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவோ செய்ய விரும்பினால்... என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி அறிவோம்.

ஒரு தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு உரிமம், தொழில்நுட்ப வசதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்றிருக்கும் கூடுதல் பணச்செலவுகளை ஒப்பிடுகையில், இணையத்தில் ஒளிபரப்பு செய்ய ஆகும் செலவு மிகமிகக் குறைவு.

கூகுள் ப்ளஸ் - ல் ஹாங்க் அவுட் வசதி மூலம், செலவே இல்லாமல் ஒளிபரப்பு செய்வதோடு, அதனை யூடியூப் மூலம் உலகம் முழுவதும் பரப்பலாம்.

இதுக்குறித்து, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், நிகழ்விடத்தில் இருந்தே நேரலையில் ஒளிபரப்பு செய்ய கூகுள் + ஹாங் அவுட், வசதி செய்கிறது. அதற்கு இணைய வசதியோடு ஒரு செல்பேசி இருந்தால் போதும்.

நேரலையிலேயே, வாசகர்களிடமிருந்து கருத்துகளை பெறலாம். அதற்கு ஊடகத்தரப்பில் பதிலும் இடலாம்.


அப்படியிருக்க... தொடர் நேரலையில் இணையதொலைக்காட்சியை செயல்படுத்த தயக்கம் ஏன்..?

சரி.

இப்படி கூகுள் ப்ளஸ் - ஊடகத்திற்கும், ஊடகவியலாளர்களுக்கும் உதவுவது மட்டுமல்லாமல், வாசகர்கள்/பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் எளிமையான வழிமுறைகளை செய்து முடிக்கிறது.

நண்பர்களே..

இன்னும் காத்திருங்கள்.

இணையதளங்களில் செய்தி சேவை செய்வது , அதுவும் தொடர்ந்து செய்வது எளிமையல்ல... நிலையான பொருளாதாரம் தேவையாக உள்ளது.

காசு பார்க்க வேண்டாமா..? அதற்கும் கூகுள் நமக்கு குறைவைக்கவில்லை.


அதனால்.. அடுத்த பதிவில்...

செய்தி இணையதளத்தில் காசு பார்ப்பது எப்படி?
யாரெல்லாம் நம்மை பார்க்கிறார்கள்...?
பொதுவாக மக்கள் , இணையதளத்தில் என்ன தேடுகிறார்கள்.. அதை ரகசியமாக எப்படி கண்காணிப்பது?

இப்படி பல தகவல்களை அறியலாம்.- வெ.யுவராஜ்.(நண்பர்களே... நான் இதுவரை அறிமுகமாக தான் கூறி வருகிறேன்... இந்த சேவைகளை ஆழமாக தெளிவாக தெரிந்துக்கொள்ள விளக்கமான  பதிவுகளை தயார் செய்துவருகிறேன்... விரைவில் உங்கள் பார்வைக்கு வரும்)


செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)

No comments:

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...