செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)

மெய் உலகில் ஊடகம் நடத்த ஆகும் செலவு, மெய்நிகர் உலகில் ஊடகம் நடத்த தேவைப்படுவதில்லை.

வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, ஒருங்கிணைக்க தெரிந்தாலே போதும்.. சராசரியாக பார்வையாளர்களை ஈட்டிவிட முடியும்.என்ன ஊடக அதிபர் ஆக ஆலோசனை கூறுவது போல் தோன்றுகிறதா....?

கடந்த பதிவுகளில் இருந்து என்ன தெரிந்துக்கொண்டீர்களோ இல்லையோ ஊடக அதிபர் ஆகும் கனவு உங்கள் மூளையின் மூலையில் உருவாகி இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நேரம் உருவாகி இருக்கவேண்டும்.

சரி. விட்ட கதையை தொடருவோம். மேல் சொன்னவற்றை அப்படியே மூலை(ளை)யிலேயே விட்டுவையுங்கள்... பிறகு பொறுமையாக ஆலோசிப்போம்.

இதுவரை கூகுள் ப்ளஸ் பற்றி அறிமுகம் கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

கூகுள் ப்ளஸ் - ஆல் ஊடகத்திற்கு என்ன நன்மை என்றால்... வாசகர் வட்டம் உருவாகி விடும். அப்புறம் உங்களுக்கென்று ஒரு கூட்டம் இருப்பதாக செயல்படுவீர்கள்.

கூகுள் ப்ளஸ் - ஆல் ஊடகவியலாளருக்கு என்ன நன்மை என்றால்....

உங்கள் பெயர் உலகில் தெரிய வேண்டாமா...?

அதற்குதான்...

உங்கள் எழுத்துகள், உங்கள் ஆவணப்படங்கள், உங்கள் நேர்காணல்கள் எல்லாவறையும் பார்வையாளருக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், அந்த பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கவும் கூகுள் ப்ளஸ் பயன்படுகிறது.

இது எவ்வாறு நிகழ்கிறது என்று பார்ப்போம்.

கீழ்காணும் படத்தை பாருங்கள்...

கூகுள் தேடுபொறியில் தமிழ்த்தோட்டம் என்று தேடுகிறேன்.  வரிசையாக தமிழ்த்தோட்டம் தொடர்பான பதிவுகள் பட்டியலிடப்படுகிறது.
இதில், தமிழ்த்தோட்டம் என்று இருக்கிறது. அதன் கீழ் இதனை யார் வழங்கியது என்பதை காட்ட யுவராஜ் என்று உள்ளது. கூடவே படமும் உள்ளது.

அப்புறம் அவருக்கான வட்டத்தில் யார்யார் உள்ளனர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை சொடுக்கினால், யுவராஜ்-ன் தன்விபரம் தெரியும்... அதில், நிலைத்தகவல் இருக்கும் . அங்கு சென்று வாசகர்கள் கருத்து தெரிவிக்கலாம்.

அல்லது, யுவராஜ் பதிவுகளை தொடர்ந்து பெறலாம்.

இந்த யுவராஜ் - என்று உள்ள இடத்தில்  ஊடகவியலாளர்கள் தங்கள் பெயர் தெரிய வழிவகைசெய்யலாம்.

ஒரு செய்தி இணையதளம் கூகுள் ப்ளஸில் இணைவதோடு... செய்தி ஆசிரியர்களின் தனிப்பட்ட கூகுள் ப்ளஸ் பக்கங்களை இணைப்பதன் மூலம் அவர் பதிவு செய்கிற அல்லது அவரின் பெயரில் பதிவு செய்கின்ற செய்திகள்/கட்டுரைகள் கீழ் அந்த ஆசிரியர்/ஊடகவியலாளர் பெயர் இடம்பெறும்.


கீழுள்ள படத்தை பாருங்கள் . கூகுள் தேடுபொறியில் வாஷிங்க்டன் போஸ்ட் இணையதளத்தின் செய்திகள் கட்டப்பட்டுள்ளது. அதன் கீழ் அதனை எழுதியவரின் பெயரும் உள்ளது.


என்ன ஊடகவியலாளர்களே... மகிழ்ச்சியாக உள்ளதா...

இந்த பேரும் புகழும் ஃபேஸ்புக் உலகில் கிடையாது. அது ஃபேஸ்புக் என்ற எல்லைக்கு அப்பால் வராது.

ஆனால், கூகுள் ப்ளஸ் எங்கும் காணக்கிடைக்கும்.

அதாவது. கூகுள் என்ற தேடுபொறி இல்லை என்றால் நம்மால் இணையதளத்தை பயன்படுத்த முடியாது.
அப்படி அடிப்படைத்தேவையாக உள்ளது இந்த கூகுள்.

அந்த கூகுளில் அதன் தயாரிப்புகளுக்கு  ராஜமரியாதை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதனால், கூகுள் ப்ளசை எந்த அளவு பயன்படுத்திகொள்ள முடியுமோ... அந்த அளவுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

வரலாறு நமக்கு முக்கியம்.


அடுத்த பதிவில்...

கூகுள் ப்ளஸ் மூலம் இணைய(தொலை)க்காட்சி நடத்துவது எப்படி? 

நேரலை ஒளிபரப்பு செய்வது எப்படி...?

வணிக ரிதியில் கூகுள் ப்ளஸின் பயன் என்ன... ? என்பதையெல்லாம் காணலாம்.- வெ.யுவராஜ்


செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)
Post a Comment

Popular posts from this blog

கட்செவி அஞ்சல்

அறிவியல் தமிழ் களஞ்சியம்

உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன்