4.12.13

செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)

செய்தி இணையதளங்கள் -  பார்வையாளர்களை ஈர்ப்பது எப்படி ?
அதற்கு கூகுள் தரும் வசதிகள் என்ன என்பது குறித்து தொடர்ந்து  பார்த்து வருகிறோம்.

செய்தி தளங்கள் சமூக வலைதளங்களில் இணைத்துக்கொள்வதன் மூலம் பார்வையாளர்களை பெற முடிகிறது. முகநூல், டிவிட்டர் போன்ற தளங்கள் அதற்கான வசதிகளை தருகின்றன.

அதேப்போல், கூகுளின் சமூக வலைதளமான கூகுள் ப்ளஸ், முகநூலை போன்றே செயல்படுகிறது.சரி.

அதற்கு முன் சில தகவலை பகிர விரும்புகிறேன்.

செய்தி இணையதளங்கள் தொழில்நுட்ப ரீதியாக என்னென்ன கட்டமைப்புகளை பெற்றிருக்க வேண்டும். இணையதளங்களில் எந்த வடிவில் செய்திகளை பதிவிட வேண்டும் என்பதை பற்றி அறிய தருகிறேன்.

ஆனால், அவை தொழில்நுட்பமாக இருப்பதால், எளிதான சில தகவலை உள்வாங்கிக்கொண்டு அவற்றை பற்றி அறிந்துக்கொள்ளலாம்.

கடந்த பதிவுகளில் இருந்து கூகுள் சேவைகள் பற்றி அறிந்து வருகிறோம். அந்த வரிசையில் கூகுள் நியூஸ் என்றால் என்ன என்பதை அடிப்படையாக அறிந்துக்கொண்டோம்.

இப்போது, கூகுள் ப்ளஸ் செய்யும் பணிகள் பற்றிப்பார்ப்போம்.

கூகுள் ப்ளஸ் என்பது சமூக வலைதளம்.
முகநூலை போன்றே செயல்படக்கூடியது..

இதன் மூலம் அரட்டை அடிக்கலாம்.. மற்றவர் நிலைத்தகவலை படிக்கலாம்.... பகிரலாம்... இன்னும் அதிகபட்சமாக விருப்பம்(லைக்) தெரிவிக்கலாம்.

இப்ப மகிழ்ச்சியாக இருக்குமே...

சரி.

கூகுள் ப்ளஸில் எப்படி இணைவது என்பதை அறிவோம்.

உங்களில் பெரும்பாலானோருக்கு ஜிமெயில் கணக்கு இருக்கும். அது போதும். ஒட்டுமொத்த கூகுள் உலகத்தையே சுற்றி வரலாம்.

இல்லையென்றால் பரவாயில்லைங்க.. இங்க  சொடுக்கி உருவாக்கிக்கொள்ளுங்கள்.

இப்போது. உங்களுக்கு கூகுள் ப்ளஸ் கணக்கும் உருவாகிவிடும்.

ஒருமுறை கூகுள் கணக்கில் நுழைந்துவிட்டால், கூகுள்.காம் திறக்கும் போது, கீழே உள்ள படத்தில் உள்ளது போல் +You அல்லது +நீங்கள் என்று இருக்கும்.


அதனை சொடுக்கினால் உங்களுக்கான பக்கம் தோன்றியிருக்கும். அதற்குள் சென்று என்ன வேண்டுமானால் ஆராய்ச்சி செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஃபேஸ்புக்கை பயன்படுத்த டியூசனா போனீர்கள்...?

அதனால், கூகுள் + ம் கைக்குள் அடங்கிவிடும்.

என்ன இங்கு லைக்-க்கு பதில் +1 என்றிருக்கும் . அவ்வளவுதான்.

இது தனி நபர் ப்ரொபைல் பக்கமாக இருக்கும் எடுத்துக்காட்டாக எனது பக்கத்தை பாருங்கள் ...  https://plus.google.com/+YUVARAJVe/

இது செய்தி இணையதளங்களுக்கு  போதாது. தனிப்பக்கமாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

அதற்கு நீங்கள் ஒரு பக்கத்தை(பேஜ்) உருவாக்கிக்கொள்ள முடியும்.... இந்த பக்கம் எப்படி இருக்கும் என்றால்...
என்.டி.டிவி பக்கத்தை பாருங்கள்... https://plus.google.com/+NDTV/

சரி. ஒரு புதிய சமூக தளத்தை கையாளும் நிலைக்கு வந்திருப்பீர்கள்... எதிர்காலம் இது தான் என்றால் நம்புவீர்களா...?

ஃபேஸ்புக் க்குக்கு அடுத்த நிலையில் கூகுள் ப்ளஸ் தான் இருக்கிறதாம். இப்போதே காற்பதித்துக்கொள்ளுங்கள்.

சரி கூகுள் ப்ளஸ் உருவாக்கிவிட்டது. அடுத்த என்ன என்கிறீர்களா..?

உங்கள் இணையதள செய்திகளை இதில் பகிருங்கள்... வாசகர்களை பெறுங்கள். அதுமட்டுமில்லைங்க...  இந்த கூகுள் ப்ளஸை உங்களுடைய இணையதளத்தோடு இணைக்கும் பணி நிலுவையில் உள்ளது. அது உங்களுடைய  இணையதளத்தின் ஹிட்டை அதிகரிக்க உதவும் முக்கியத்துவம் வாய்ந்த பணி.

அதை முன்னர் கூறியதுபோல் தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் தனி பதிவில் விவரிக்கிறேன்.

தேடுபொறிகளில் கூகுள் ப்ளஸ் பதிவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அதனால், கூகுள் ப்ளஸை இணையதளங்களின் அங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள்.


அடுத்த பதிவில்... 
கூகுள் ப்ளஸ் எவ்வாறு வணிகரீதியில் பயன்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

ஊடகங்கள் - கூகுள் ப்ளஸ்-ஐ இன்னும் எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் பார்க்கலாம். 

அதேப்போன்று ஊடகவியலாளர்களுக்கு கூகுள் ப்ளஸ் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.


- வெ.யுவராஜ்


செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)

No comments:

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...