31.12.13

உன் காலடி நோக்கி புறப்பட்டேன்..

நம்மாழ்வார் அய்யாவின் வானகத்தின் இயற்கை வேளாண்மை மற்றும் வாழ்வியல் பயிற்சி வரும் சனவரி 2-ல் நடைபெற இருந்தது. அதில் கலந்துக்கொள்ள திட்டமிட்டுருந்தேன்.....

காலத்தின் சூழ்ச்சி... அய்யாவை ஆட்கொண்டு சென்றுவிட்டது.

இயற்கை அழிகிறது..
நோய்கள் பெருகுகிறது...

எது இருந்தால் வாழ்வோ..
அதை அழித்து வாழநினைக்கும் மனிதனை
விழிப்பேற்படுத்த இயங்கிய மாமனிதனை
காலம் கடத்திவிட்டது..

உமது சொற்கேட்டு...
செயல் பார்த்து...
என் அறிவு விழித்து...
இனி வயல்வெளியை
பசுமையாக்க புறப்பட்டேன்....

உன்னிடம் கற்க,
உன்னுடன் இயங்க,
உன் காலடி நோக்கி புறப்பட்டேன்..

இழந்த உழவு
மறைந்த மரபு
விதைகளை தேடி... புறப்பட்டேன்...
உன்காலடி நோக்கி புறப்பட்டேன்..

உன்னை நேரில் காண எண்ணி 
இருந்த இரண்டொரு நாட்களை எண்ணி
காத்திருந்த என் காதருகே வந்தது உன் மரண செய்தி....
அதிர்ந்தேன்...
அகத்தோடு அழுதேன்...

நிலமகள் துயருறுகிறாள்..

மண்ணை மாசாக்கி..
மரங்களை மாயமாக்கி..
வளர்ச்சியென வாழும் அறிவிலர்களே...
உன்னை நீ அழித்து, என்ன நீ கிழிப்பாய்...
உண்ண நல்ல சோறு வேண்டும்.. 
அதை விட வேறு என்ன வேண்டும் 
அதை நீ எண்ண வேண்டும்...

என்று எனக்கு அறிவுரைகள் சொல்கிறது அய்யா.. உன் நினைவுகள்...

என்றோ நீ விதைந்துக்கொண்டாய் இந்த உலகிற்காய்....
இயற்கை வேளாண்மையால் இந்த உலகை உயிர்பிக்க....

இன்று நீ உடலால் மறைந்தாலும்... 
நினைவால் விதைக்கப்பட்டிருக்கிறாய்....

உன் இயக்கம் என்றும் உயிர்பித்திருக்கும்...
நிலமகள் பசுமை போர்த்திட நிற்கிறோம்
களத்தில் இளையோர் பட்டாளமாய்...

அய்யா....
வார்த்தைகள் இல்லை.....
உமக்கு என் கண்ணீர் அஞ்சலி......

- இயற்கை வழியில் வெ.யுவராசன்

14.12.13

ஓரின சேர்க்கை-ன்னு சொல்றாங்களே...



ஒரு ஆண் ஒரு பெண்ணுடனான உறவு இயற்கையாக அமைந்தது. இதில் பெறும் இன்பங்களை தாண்டி, இனப்பெருக்கம் என்கிற நிகழ்வு அமைந்திருக்கிறது....

அது என்னங்க புதுசா ஓரின சேர்க்கை....

பொதுவான பாலியல் இன்பம் பெறும் முறைகளாக கீழ்கண்டவாறு பிரித்து இருக்கிறார்கள்..

* ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (heterosexuals),
* ஆணும் ஆணும் அல்லது  பெண்ணும் பெண்ணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (homo sex அல்லது Lesbianism)
* சுய இன்பம்(masturbation) பெறுதல்.

ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுவதன் மூலம் பாலியல் திருப்தி அடைய நினைப்பது ஒரு சாதாரண நிகழ்வாகும் . அவ்வாறு அல்லாமல் வேறு முறைகள் மூலம் பாலியல் இன்பம் பெற நினைப்பது மாற்று வழிப் பாலியல் முறை (sexual deviation) எனப்படுகிறது.

இதனால் பெரிதாக பாதிப்பு இல்லாத போது, நாம் அவ்வளவாக பெரிது படுத்துவதில்லை.... விளைவுகளையும், சமூக இயல்பு நிலையை மாற்றும் போது தான் பிரச்னை முளைக்கிறது.

இது மன வியாதியும் கூட...

இந்த மாதிரியான   செக்சிவல் டிஸ்ஆர்டரில் பல வகைகள் உள்ளன...


ஆனால், அதெல்லாம் வியாதியா..  ஒழுங்கின்மையா... என்பது குறித்து ஆராய்ச்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள்....

edipus complex  - ஆண் குழந்தைக்கு தாயின் மேல் ஏற்படும் ஈர்ப்பு
electra complex - பெண் குழந்தைக்கு தந்தையின் மேல் ஏற்படும் ஈர்ப்பு.
frotteurism  -   பிற பாலினத்தை உரசி உரசி இன்பம் காண்பது
Transvestism - பிற  பாலினங்களின் உடைகளை அணிவதில் இன்பம் கொள்வது
Necrophilia  - பிணங்களோடு உறவு கொள்வது
Exhibitionism - தன் உறுப்புகளை பிற பாலினத்திற்கு காட்டி இன்பம் காண்பது
voyeurism  -  பிறர் உடலுறவு கொள்வதை பார்த்து இன்பம் காண்பது
Narrotophilia - பிறர் பாலினத்தை திட்டுவது மூலம் இன்பம் காண்பது
Telephone scatologia - தொலைபேசியில் உரையாடுவதால் ஏற்படும் இன்பம்
Partialism - உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இன்பம் காண்பது
Zoophilia  - விலங்குகளோடு உறவு கொள்வது
pedophilia  - குழந்தைகளோடு உறவு கொள்வது
Homeovestism -  தன்பால் உடைகளை அணிந்து இன்பம் காண்பது.
Gerentophilia   -  மூத்த வயதினரோடு உறவு கொள்வது
Lactophilia  - மார்பில் பால்குடிப்பதன் மூலம் இன்பம் காண்பது
Mechanophilia - கார் அல்லது மெஷின்களோடு உறவாடுவது
Olfactophilia - வாசனை பிடித்து இன்பம் காண்பது
Pictophilia - படங்களைபார்த்து இன்பம் காண்பது
Somnophilia - தூங்குபவர்களோடு உறவு கொண்டு இன்பம் காண்பது
Maieisophilia - கர்ப்பிணி பெண்களோடு உறவு கொள்வது .

.... இது போன்ற வகையறாக்கள் ஏராளம்...

பிறகு இவற்றுக்கெல்லாம் அங்கீகாரம் கோர போராட்டங்கள் நிகழ்ந்தால் ஆச்சரிபடுவதற்கில்லை...

மனித உரிமை... எல்லாம் தாண்டி... நாளை சமூக நிலை.... எப்படி இருக்கும் பாருங்கள்....

இன்னொரு கதையை கேளுங்கள்.. சிலர் சூழ்நிலை காரணமாக ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதுண்டு...

சூழ்நிலை ஓரினசேர்க்கையாளர் (Situational Homosexual) ,  இவர்கள் கீழ்வரும் காரணிகளால் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள் என்று கூறப்பெறுகிறது.

* ஒரே விடுதியில் தங்கியிருக்கும் நபர்கள். இவர்களில் ஆண்கள், பெண்கள், மாணவர்களும் அடங்குவர்.
* ஓரிடத்தில் வேலையின் காரணமாக தங்கியிருப்பவர்கள்.
சிறையில் ஓரிடத்தில் இருக்கும் கைதிகள், அலுவகப் பணி காரணமாக தங்கியிருப்பவர்கள்.
* திருமணம் ஆனபிறகு மனைவியுடன் உறவுகொள்ள இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள்.


திருநங்கை உள்ளிட்டோரும் செக்சுவல் டிஸ் ஆர்டர் வகையினர் தான்.

தன் பால் அடையாளங் காணாமை காரணமாக, எதிர் பாலினத்தினர் போன்று தன்னை மாற்றிக்கொள்கிறார்கள்... பெண்களாக இருந்தால் தன் மார்பகங்களை மறைக்க முயல்வார்கள்... ஆண்களாக இருந்தால், தனது ஆண்குறியை மறைக்க முயல்வார்கள்; மார்பகத்தை பெருக்க நினைப்பார்கள்.. எதிர்பாலின உடைகளை அணிய விரும்புவார்கள்... இப்படியாக இருக்கும் சிக்கல்களை மருத்துவ உலகம் சரியான குறியீடு வழங்காமல் அது அது போக்கில் ஆராய்ச்சி செய்து வருகிறது. இருப்பினும்... இவை மன ரீதியாக குணப்படுத்த இயலும் தன்மைவாய்ந்ததும் கூட... கவுன்சிலிங் மூலம் இந்த சிக்கல்களை தீர்க்க முடியும்..


இது இன்று நேற்று உருவானதல்ல... காலங்காலமாக உள்ளது என்று நியாயம் கறிபிப்பார்கள்... அது இருக்க தானே செய்யும்... காலங்காலமாக மனிதர்கள் இருந்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்... என்ன இப்ப ஊடகத்தால் எல்லாம் வெட்ட வெளிச்சமாக உள்ளது. அப்போது அது இல்லை...

எவ்வளவோ விசயங்களை நாம் இயற்கைக்கு மாறாக நிகழ்த்தி வருகிறோம்....

அந்த பட்டியலில் இவற்றையும் அனுமதித்து விடாதீர்கள்...

பாதிக்கப்பட்டவர்களை மாற்ற முயற்சிக்கலாம்.. மாற முடியாதார்களுக்கு.. மாற்றி வழி யோசிக்கலாம்...

இங்கு சரி தவறு க்கு இடமில்லை...
வேண்டும் வேண்டாம் என்பதற்கு மட்டும் விடைகாண முயன்றால் போதும்....

ஏனென்றால் இத்தகைய டிஸ் ஆர்டர்கள் (ஒழுங்கின்மை) இயற்கையாக தான் வருகிறது....

13.12.13

செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)

இதழ்கள் போன்று இணையதளங்களுக்கும் பரவல் ( ‘சர்குலேசன்’ ) முக்கியமானது. அப்படி படைப்புகள், சேவைகள் வாசகர்களை கொண்டு சேரும் போதுதான், ஆக்கம் ஆக்கமாக  இருக்கும். இல்லையென்றால் தேக்கம் தான்.

அந்த வகையில், யார் நமது வாசகர்கள்...
எங்கிருந்து வருகிறார்கள்,
எந்த நாடு,
நம் இணையதளத்தில் என்ன படிக்கிறார்கள் உள்ளிட்டவைகளும் நிகழ்நேரத்தில் தெரிந்தால் எப்படி இருக்கும்..?

நினைத்துப்பாருங்கள்.... ஒரு இணையதள ஆசிரியர்/உரிமையாளர்களுக்கு அது மகிழ்ச்சியின் உச்சக்கட்டம்.

அதுதான் அடுத்த நகர்வுக்கு அடித்தளம்...

செய்தி இணையதளங்களுக்கு வாசகர்களின் எண்ணிக்கை கூடும்போது.. அங்கு தரம் இருக்கும்... தகவல் இருக்கும்...

கூடவே அங்கு பணம் கொழிக்கவும் வாய்ப்பிருக்கும்.

சரி இத்தகைய சேவையை எப்படி பெறுவது...?

கூகுளின் சேவைகளில் கூகுள் அனலடிக்ஸ், இந்த பணியை இனிதே செய்கிறது.

வழக்கம்போல... கூகுள் கணக்கை பயன்படுத்தி, கூகுள் அனலடிக்ஸில் பதிந்து, அதில் நமது இணையதளத்தை சேர்த்து விட்டால் போது, நமது வாசகர்களை கண்காணித்துவிடலாம்...

இந்த அனலடிக்ஸ் சேவை மூலம், நமது வாசகர்கள் எதை விரும்பி படிக்கிறார்கள், எந்த சமூக வலைதளங்கள் மூலம் வருகிறார்கள், எந்த நேரத்தில் அதிகமாக வருகிறார்கள்... உள்ளிட்ட தகவல்கள் விரல் நுனியில் அறியலாம்.

இதன் மூலம் , நமது செய்தி தளத்திற்கு விளம்பரம் பெறலாம்.  காசு சம்பாதிக்கலாம்......


என்ன நண்பர்களே...!

ஓரளவுக்கு இணையதளங்கள்.. அதுவும் செய்தி இணையதளங்கள் பதிவேற்றங்களை தாண்டி... செய்ய வேண்டிய சில அடிப்படை பரவலாக்க செயல்பாடுகளை மேலோட்டமாக அறிந்திருப்பீர்கள்...

ஊடகங்களுக்காக கூகுள் தரும் சேவைகள் ஓரளவு புரிந்திருப்பீர்கள்.

இன்னும் அறிய வேண்டிய அரிய தகவல்களை அவ்வபோது பதிவிடுகிறேன்...

இயற்றுவோம் தமிழால் !

- வெ.யுவராஜ்


செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)

10.12.13

செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)

ஊடகங்களுக்கான கூகுள் சேவைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து அறிந்து வருகிறோம்.

அதன்படி, ஒரு செய்தி இணையதளம், தனது செய்தியாக்கத்தை எவ்வாறு வாசகர்களை ஈர்க்க முடியும் அல்லது வாசகர்களை சென்றடைய செய்வது என்பது பற்றி அறிந்தோம்.

அதாவது கூகுள் செய்திகள் சேவை குறித்து அறிந்தோம்.

அதேப்போல், கூகுள் வழங்கும் மற்றொரு சேவையான கூகுள் ப்ளஸ் சமூக வலைதளத்தையும், அதன் பயன்பாடுகளையும் அறிந்துக்கொண்டோம்.

இணைய ஊடகங்கள் காணொளி சேவையை நேரலையாக வழங்கும் முறை குறித்தும், அந்த சேவையை கூகுளே வழங்குவது குறித்தும் அறிந்துக்கொண்டோம்.

சரி.

சென்ற பதிவில் நாம் குறிப்பிட்டது போல..

செய்தி இணையதளத்தில் காசு பார்ப்பது எப்படி?
யாரெல்லாம் நம் இணையதளத்தை பார்க்கிறார்கள்...?

என்பதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக செய்திகளை வழங்கும் இணையதளங்கள் மிகவும் வண்ணமயமாக, ஆர்ப்பாட்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எளிமையாக முதல் பக்கத்தில் பார்க்க கூடிய இடத்தில் முக்கிய செய்திகளை இடம்பெற செய்ய தெரிந்தாலே போதும்.

இது இணையதள வடிவமைப்பின் போது, நிரலாளர் மூலம் செயல்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பாக செய்திகளை எழுத்துகளாக இருப்பதாக பார்த்துக்கொள்ள வேண்டும். சில இணையதளங்கள் தலைப்புகளை படமாக மாற்றி பதிவேற்றி இருப்பார்கள்.

இதனால் என்ன சிக்கல் என்றால், நீங்கள் தேடுபொறியில் ஒரு குறிப்பிட்ட செய்தியை தேடுகிறீர்கள்... அந்த செய்திக்கு பொருத்தமாக,  உங்கள் தளத்தில் செய்தி உள்ளது.

ஆனால், அது பட வடிவமாக உள்ளது என்றால், தேடுபொறி அதனை தேடிக்கொடுக்காது. எழுத்தாக இருந்தால் அந்த செய்தி, தேடுபொறியின் தேடல் வரிசையில் இருக்கும்.

அதே சமயம், செய்திக்கு பொருத்தமான படங்களை இணைக்கலாம்.



பொதுவாக, யாரும் நேரடியாக இணையதளங்களுக்கு சென்று தகவல்களை தேடுவதில்லை.

தேடுபொறியை நம்பியே நம் மக்கள் தகவல்களை தேடுகிறார்கள் என்ற உண்மையை அறிய வேண்டும்.


கூகுள் தான் இவர்களுக்கு எல்லாம்.


இதற்காக தான் நாம் தேடுபொறிக்கு ஏதுவான முறையில் இணையதளங்களை வடிவமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அந்தவகையில், செய்தி பக்கத்தின் இணைய முகவரியில் செய்திக்கு பொருத்தமான சொற்றொடர் இருத்தல் நலம்.

உதாரணமாக...

தேடுபொறியில் சில ஆங்கில சொற்களை பயன்படுத்தி, தமிழ் தளங்களில் தேட முனைகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

http://thamizhthottam.blogspot.in/2013/12/blog-post.html

என்ற முகவரியில் உள்ள சொற்றொடர், அந்த பக்கத்தில் உள்ள தகவலுக்கு தொடர்புடையதாக அமைத்திருந்தால், உடனே முதல் பட்டியலில் காண்பிக்கும்.

http://www.aljazeera.com/news/africa/2013/12/world-leaders-bid-farewell-mandela-20131210134926782841.html

இந்த இணையதளத்தின் பக்கத்தை பாருங்கள்... உள்ளடக்கத்திற்கு தொடர்புடைய வகையில் முகவரி உள்ளது.

இதுமட்டுமே காரணி என்று எடுத்துக்கொள்ள முடியாது.

இணைய பக்கத்தில் உள்ள தகவல்களுக்கு தொடர்புடைய சொற்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் அந்த பக்கங்களில் இணைக்க வேண்டும்...

இது பார்வையாளர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை... இந்த சொற்கள் மறைவாக அந்த பக்கத்தில் ஒளித்து வைக்கலாம்.

தேடுபொறியில் நாம் ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் தேடுவோம்.

அப்போது, அந்த சொல், இணையமுகவரியிலோ, இணைய பக்கத்திலோ இடம்பெற்றிருந்தால், தமிழ் தளங்களாக இருந்தாலும், தேடுபொறியின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.


இதுக்குறித்த  விழிப்பு இணைய ஊடகவியலாளர்களுக்கு இருந்தால் போதும்.

அதனை தங்களின் இணைய நிரலாளரிடம் (இணையதள வடிவமைப்பாளர்) வற்புறுத்தி சொல்லி, அந்த வசதியை பெற்றுக்கொள்ளுங்கள்.

இது தொடர்பான முழுமையான  தகவலை விரைவில் விளக்கமாக தருகிறேன்.


சரி . இதெல்லாம் எதற்காக கூறுகிறேன் என்றால், நீங்கள் காசு பார்க்க வேண்டாமா...?

அதற்காக தான்.

உங்கள் இணையதளம் அதிக வாசகர்களை கொண்டிருந்தால், அந்த இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டால், அதனை பார்க்க பார்க்க பணம் தான்.


நீங்கள் ஒரு ஆங்கில செய்தி தளம் வைத்திருக்கிறீர்கள் அல்லது உங்கள் தளத்தில் ஆங்கிலம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றால், கூகுள் ஆட்சென்ஸ் என்ற சேவை மூலம் விளம்பரம் பெறலாம்.

www.google.com/adsense

இந்த விளம்பர உதவி என்பது, அற்புதமான வேலையை செய்கிறது.

ஒருமுறை கூகுள் ஆட்சென்ஸ் வசதியை பதிவு செய்து , அதில் வழங்கப்படும் நிரலை இணையப்பக்கத்தில் எந்த இடத்தில் விளம்பர வர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ.. அங்கு இணைக்கலாம்.

இப்போது, அந்த பக்கத்தில் வாகன விபத்து தொடர்பான செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள் என்றால், அங்கு, வாகன பாதுகாப்பு தொடர்பான விளம்பரம் இடம்பெறும். அதாவது, உள்ளடக்கம் பொறுத்து, இந்த விளம்பரம் தேர்வு செய்யப்படுகிறது.

அதனால் தான் அதற்கு ஆட்சென்ஸ் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

நண்பர்களே... ஆங்கில இணையதளத்திற்கு கிடைத்த இந்த வாய்ப்பு தமிழுக்கு கிடைப்பதில்லை. ஏனென்றால், இந்த ’தானே விளம்பர தேர்வு செய்யும் வசதி’யை தமிழ் மொழிக்கு கூகுள் வழங்க இல்லை.

இருந்தாலும், இதேப்போன்று, விளம்பரங்களை தரும் சேவை நிறுவனங்கள் நிறைய உள்ளன. அதில் பதிவு செய்து, பணம் சம்பாதிக்கலாம்.


நினைவு வைத்துக்கொள்ளவும்... அந்தந்த நிறுவனம் வழங்கும் சேவை ஒவ்வொன்றும் மாறுபட்டவை... விளம்பரம் என்ன வரவேண்டும்..., பணம் எவ்வாறு கொடுப்ப்பார்கள் போன்ற விதிகள் மாறுபடும்...

உங்களுக்காக விளம்பரம் தரும் சில இணைப்புகள்...

http://publisher.yahoo.com/
https://adcenter.microsoft.com/
http://exchange.contextweb.com/
http://www.adengage.com/
http://adclickmedia.com/
http://www.oxado.com/
http://fairadsnetwork.com/
http://performancingads.com/
http://www.adsbingo.com/
https://www.adgitize.com/
http://buysellads.com/
http://www.viralblogads.com/
https://www.star-clicks.com/
http://chitika.com/
http://www.adbrite.com/
http://www.tribalfusion.com/
http://www.valueclickmedia.com
http://www.clicksor.com/
http://adsforindians.com/ads/index.asp


இந்த தகவலோடு, இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்...

அடுத்த பதிவில், நம்முடைய இணையதளத்தை பார்ப்பவர்கள் யார் யார்... எந்தெந்த இணையதளங்கள் நமது தளத்தை இணைப்பாக கொடுத்திருக்கின்றன... வாசகர்கள் எந்தெந்த வழிகளில் நமது இணையதளத்தை பார்க்க வந்துள்ளனர் போன்ற விபரங்களையும் காணலாம்...

காத்திருங்கள்...

- வெ.யுவராஜ்.

செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)

6.12.13

செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)

செய்திகளும், ஊடகங்களும், இணையமும் என்ற தலைப்பின் கீழ் தொடராக வரும் பதிவுகளில் கூகுளை அறிமுகப்படுத்தி, அதன் சிறப்புகளை விளக்கி வருகிறோம்.

இந்த விளக்கங்கள் கூகுளுக்கு விளம்பரம் தேட அல்ல. ஊடகங்களை விளம்பரப்படுத்த என்பதை நினைவுக்கொள்ள வேண்டும்.

முன்னர், பதிவுகளில் குறிப்பிட்டது போல... அசைக்க முடியாத ஒன்றாக கூகுள் திகழ்வதால்... அதன் சேவைகளை காலத்தே பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்பது நமது அவா. தமிழ் (ஊடக) சமூகம் இந்த வசதிகளை நுகர்தல் அவசியம்.

கூகுள் ப்ளஸ் மூலம் - பதிவுகளை பகிர்தல், ஊடக இணையதளங்களில் செய்தி ஆசிரியர் / செய்தியாளர் பெயருடனும், தன்விபரமுடனும் செய்திகளை வெளியிடவும் முடிகிறது.

தேடுபொறிகளில் குறிப்பிட்ட செய்தியுடன், அதன் ஆசிரியரின் விபரமும் கிடைப்பதால் வாசகருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சரி.

ஒரு இணைய ஊடகம் தனது செய்தி சேவைகளில் ஒரு பகுதியாக பார்வையாளர்களிடமிருந்து கருத்து கேட்கவோ, நேர்காணல் பதிவு செய்யவோ, நேரலையாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவோ செய்ய விரும்பினால்... என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி அறிவோம்.

ஒரு தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு உரிமம், தொழில்நுட்ப வசதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்றிருக்கும் கூடுதல் பணச்செலவுகளை ஒப்பிடுகையில், இணையத்தில் ஒளிபரப்பு செய்ய ஆகும் செலவு மிகமிகக் குறைவு.

கூகுள் ப்ளஸ் - ல் ஹாங்க் அவுட் வசதி மூலம், செலவே இல்லாமல் ஒளிபரப்பு செய்வதோடு, அதனை யூடியூப் மூலம் உலகம் முழுவதும் பரப்பலாம்.

இதுக்குறித்து, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், நிகழ்விடத்தில் இருந்தே நேரலையில் ஒளிபரப்பு செய்ய கூகுள் + ஹாங் அவுட், வசதி செய்கிறது. அதற்கு இணைய வசதியோடு ஒரு செல்பேசி இருந்தால் போதும்.

நேரலையிலேயே, வாசகர்களிடமிருந்து கருத்துகளை பெறலாம். அதற்கு ஊடகத்தரப்பில் பதிலும் இடலாம்.


அப்படியிருக்க... தொடர் நேரலையில் இணையதொலைக்காட்சியை செயல்படுத்த தயக்கம் ஏன்..?

சரி.

இப்படி கூகுள் ப்ளஸ் - ஊடகத்திற்கும், ஊடகவியலாளர்களுக்கும் உதவுவது மட்டுமல்லாமல், வாசகர்கள்/பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் எளிமையான வழிமுறைகளை செய்து முடிக்கிறது.

நண்பர்களே..

இன்னும் காத்திருங்கள்.

இணையதளங்களில் செய்தி சேவை செய்வது , அதுவும் தொடர்ந்து செய்வது எளிமையல்ல... நிலையான பொருளாதாரம் தேவையாக உள்ளது.

காசு பார்க்க வேண்டாமா..? அதற்கும் கூகுள் நமக்கு குறைவைக்கவில்லை.


அதனால்.. அடுத்த பதிவில்...

செய்தி இணையதளத்தில் காசு பார்ப்பது எப்படி?
யாரெல்லாம் நம்மை பார்க்கிறார்கள்...?
பொதுவாக மக்கள் , இணையதளத்தில் என்ன தேடுகிறார்கள்.. அதை ரகசியமாக எப்படி கண்காணிப்பது?

இப்படி பல தகவல்களை அறியலாம்.



- வெ.யுவராஜ்.



(நண்பர்களே... நான் இதுவரை அறிமுகமாக தான் கூறி வருகிறேன்... இந்த சேவைகளை ஆழமாக தெளிவாக தெரிந்துக்கொள்ள விளக்கமான  பதிவுகளை தயார் செய்துவருகிறேன்... விரைவில் உங்கள் பார்வைக்கு வரும்)


செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)

5.12.13

செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)

மெய் உலகில் ஊடகம் நடத்த ஆகும் செலவு, மெய்நிகர் உலகில் ஊடகம் நடத்த தேவைப்படுவதில்லை.

வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, ஒருங்கிணைக்க தெரிந்தாலே போதும்.. சராசரியாக பார்வையாளர்களை ஈட்டிவிட முடியும்.



என்ன ஊடக அதிபர் ஆக ஆலோசனை கூறுவது போல் தோன்றுகிறதா....?

கடந்த பதிவுகளில் இருந்து என்ன தெரிந்துக்கொண்டீர்களோ இல்லையோ ஊடக அதிபர் ஆகும் கனவு உங்கள் மூளையின் மூலையில் உருவாகி இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நேரம் உருவாகி இருக்கவேண்டும்.

சரி. விட்ட கதையை தொடருவோம். மேல் சொன்னவற்றை அப்படியே மூலை(ளை)யிலேயே விட்டுவையுங்கள்... பிறகு பொறுமையாக ஆலோசிப்போம்.

இதுவரை கூகுள் ப்ளஸ் பற்றி அறிமுகம் கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

கூகுள் ப்ளஸ் - ஆல் ஊடகத்திற்கு என்ன நன்மை என்றால்... வாசகர் வட்டம் உருவாகி விடும். அப்புறம் உங்களுக்கென்று ஒரு கூட்டம் இருப்பதாக செயல்படுவீர்கள்.

கூகுள் ப்ளஸ் - ஆல் ஊடகவியலாளருக்கு என்ன நன்மை என்றால்....

உங்கள் பெயர் உலகில் தெரிய வேண்டாமா...?

அதற்குதான்...

உங்கள் எழுத்துகள், உங்கள் ஆவணப்படங்கள், உங்கள் நேர்காணல்கள் எல்லாவறையும் பார்வையாளருக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், அந்த பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கவும் கூகுள் ப்ளஸ் பயன்படுகிறது.

இது எவ்வாறு நிகழ்கிறது என்று பார்ப்போம்.

கீழ்காணும் படத்தை பாருங்கள்...

கூகுள் தேடுபொறியில் தமிழ்த்தோட்டம் என்று தேடுகிறேன்.  வரிசையாக தமிழ்த்தோட்டம் தொடர்பான பதிவுகள் பட்டியலிடப்படுகிறது.




இதில், தமிழ்த்தோட்டம் என்று இருக்கிறது. அதன் கீழ் இதனை யார் வழங்கியது என்பதை காட்ட யுவராஜ் என்று உள்ளது. கூடவே படமும் உள்ளது.

அப்புறம் அவருக்கான வட்டத்தில் யார்யார் உள்ளனர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை சொடுக்கினால், யுவராஜ்-ன் தன்விபரம் தெரியும்... அதில், நிலைத்தகவல் இருக்கும் . அங்கு சென்று வாசகர்கள் கருத்து தெரிவிக்கலாம்.

அல்லது, யுவராஜ் பதிவுகளை தொடர்ந்து பெறலாம்.

இந்த யுவராஜ் - என்று உள்ள இடத்தில்  ஊடகவியலாளர்கள் தங்கள் பெயர் தெரிய வழிவகைசெய்யலாம்.

ஒரு செய்தி இணையதளம் கூகுள் ப்ளஸில் இணைவதோடு... செய்தி ஆசிரியர்களின் தனிப்பட்ட கூகுள் ப்ளஸ் பக்கங்களை இணைப்பதன் மூலம் அவர் பதிவு செய்கிற அல்லது அவரின் பெயரில் பதிவு செய்கின்ற செய்திகள்/கட்டுரைகள் கீழ் அந்த ஆசிரியர்/ஊடகவியலாளர் பெயர் இடம்பெறும்.


கீழுள்ள படத்தை பாருங்கள் . கூகுள் தேடுபொறியில் வாஷிங்க்டன் போஸ்ட் இணையதளத்தின் செய்திகள் கட்டப்பட்டுள்ளது. அதன் கீழ் அதனை எழுதியவரின் பெயரும் உள்ளது.


என்ன ஊடகவியலாளர்களே... மகிழ்ச்சியாக உள்ளதா...

இந்த பேரும் புகழும் ஃபேஸ்புக் உலகில் கிடையாது. அது ஃபேஸ்புக் என்ற எல்லைக்கு அப்பால் வராது.

ஆனால், கூகுள் ப்ளஸ் எங்கும் காணக்கிடைக்கும்.

அதாவது. கூகுள் என்ற தேடுபொறி இல்லை என்றால் நம்மால் இணையதளத்தை பயன்படுத்த முடியாது.
அப்படி அடிப்படைத்தேவையாக உள்ளது இந்த கூகுள்.

அந்த கூகுளில் அதன் தயாரிப்புகளுக்கு  ராஜமரியாதை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதனால், கூகுள் ப்ளசை எந்த அளவு பயன்படுத்திகொள்ள முடியுமோ... அந்த அளவுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

வரலாறு நமக்கு முக்கியம்.


அடுத்த பதிவில்...

கூகுள் ப்ளஸ் மூலம் இணைய(தொலை)க்காட்சி நடத்துவது எப்படி? 

நேரலை ஒளிபரப்பு செய்வது எப்படி...?

வணிக ரிதியில் கூகுள் ப்ளஸின் பயன் என்ன... ? என்பதையெல்லாம் காணலாம்.



- வெ.யுவராஜ்


செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)

4.12.13

செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)

செய்தி இணையதளங்கள் -  பார்வையாளர்களை ஈர்ப்பது எப்படி ?
அதற்கு கூகுள் தரும் வசதிகள் என்ன என்பது குறித்து தொடர்ந்து  பார்த்து வருகிறோம்.

செய்தி தளங்கள் சமூக வலைதளங்களில் இணைத்துக்கொள்வதன் மூலம் பார்வையாளர்களை பெற முடிகிறது. முகநூல், டிவிட்டர் போன்ற தளங்கள் அதற்கான வசதிகளை தருகின்றன.

அதேப்போல், கூகுளின் சமூக வலைதளமான கூகுள் ப்ளஸ், முகநூலை போன்றே செயல்படுகிறது.



சரி.

அதற்கு முன் சில தகவலை பகிர விரும்புகிறேன்.

செய்தி இணையதளங்கள் தொழில்நுட்ப ரீதியாக என்னென்ன கட்டமைப்புகளை பெற்றிருக்க வேண்டும். இணையதளங்களில் எந்த வடிவில் செய்திகளை பதிவிட வேண்டும் என்பதை பற்றி அறிய தருகிறேன்.

ஆனால், அவை தொழில்நுட்பமாக இருப்பதால், எளிதான சில தகவலை உள்வாங்கிக்கொண்டு அவற்றை பற்றி அறிந்துக்கொள்ளலாம்.

கடந்த பதிவுகளில் இருந்து கூகுள் சேவைகள் பற்றி அறிந்து வருகிறோம். அந்த வரிசையில் கூகுள் நியூஸ் என்றால் என்ன என்பதை அடிப்படையாக அறிந்துக்கொண்டோம்.

இப்போது, கூகுள் ப்ளஸ் செய்யும் பணிகள் பற்றிப்பார்ப்போம்.

கூகுள் ப்ளஸ் என்பது சமூக வலைதளம்.
முகநூலை போன்றே செயல்படக்கூடியது..

இதன் மூலம் அரட்டை அடிக்கலாம்.. மற்றவர் நிலைத்தகவலை படிக்கலாம்.... பகிரலாம்... இன்னும் அதிகபட்சமாக விருப்பம்(லைக்) தெரிவிக்கலாம்.

இப்ப மகிழ்ச்சியாக இருக்குமே...

சரி.

கூகுள் ப்ளஸில் எப்படி இணைவது என்பதை அறிவோம்.

உங்களில் பெரும்பாலானோருக்கு ஜிமெயில் கணக்கு இருக்கும். அது போதும். ஒட்டுமொத்த கூகுள் உலகத்தையே சுற்றி வரலாம்.

இல்லையென்றால் பரவாயில்லைங்க.. இங்க  சொடுக்கி உருவாக்கிக்கொள்ளுங்கள்.

இப்போது. உங்களுக்கு கூகுள் ப்ளஸ் கணக்கும் உருவாகிவிடும்.

ஒருமுறை கூகுள் கணக்கில் நுழைந்துவிட்டால், கூகுள்.காம் திறக்கும் போது, கீழே உள்ள படத்தில் உள்ளது போல் +You அல்லது +நீங்கள் என்று இருக்கும்.


அதனை சொடுக்கினால் உங்களுக்கான பக்கம் தோன்றியிருக்கும். அதற்குள் சென்று என்ன வேண்டுமானால் ஆராய்ச்சி செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஃபேஸ்புக்கை பயன்படுத்த டியூசனா போனீர்கள்...?

அதனால், கூகுள் + ம் கைக்குள் அடங்கிவிடும்.

என்ன இங்கு லைக்-க்கு பதில் +1 என்றிருக்கும் . அவ்வளவுதான்.

இது தனி நபர் ப்ரொபைல் பக்கமாக இருக்கும் எடுத்துக்காட்டாக எனது பக்கத்தை பாருங்கள் ...  https://plus.google.com/+YUVARAJVe/

இது செய்தி இணையதளங்களுக்கு  போதாது. தனிப்பக்கமாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

அதற்கு நீங்கள் ஒரு பக்கத்தை(பேஜ்) உருவாக்கிக்கொள்ள முடியும்.... இந்த பக்கம் எப்படி இருக்கும் என்றால்...
என்.டி.டிவி பக்கத்தை பாருங்கள்... https://plus.google.com/+NDTV/

சரி. ஒரு புதிய சமூக தளத்தை கையாளும் நிலைக்கு வந்திருப்பீர்கள்... எதிர்காலம் இது தான் என்றால் நம்புவீர்களா...?

ஃபேஸ்புக் க்குக்கு அடுத்த நிலையில் கூகுள் ப்ளஸ் தான் இருக்கிறதாம். இப்போதே காற்பதித்துக்கொள்ளுங்கள்.

சரி கூகுள் ப்ளஸ் உருவாக்கிவிட்டது. அடுத்த என்ன என்கிறீர்களா..?

உங்கள் இணையதள செய்திகளை இதில் பகிருங்கள்... வாசகர்களை பெறுங்கள். அதுமட்டுமில்லைங்க...  இந்த கூகுள் ப்ளஸை உங்களுடைய இணையதளத்தோடு இணைக்கும் பணி நிலுவையில் உள்ளது. அது உங்களுடைய  இணையதளத்தின் ஹிட்டை அதிகரிக்க உதவும் முக்கியத்துவம் வாய்ந்த பணி.

அதை முன்னர் கூறியதுபோல் தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் தனி பதிவில் விவரிக்கிறேன்.

தேடுபொறிகளில் கூகுள் ப்ளஸ் பதிவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அதனால், கூகுள் ப்ளஸை இணையதளங்களின் அங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள்.


அடுத்த பதிவில்... 




கூகுள் ப்ளஸ் எவ்வாறு வணிகரீதியில் பயன்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

ஊடகங்கள் - கூகுள் ப்ளஸ்-ஐ இன்னும் எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் பார்க்கலாம். 

அதேப்போன்று ஊடகவியலாளர்களுக்கு கூகுள் ப்ளஸ் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.


- வெ.யுவராஜ்


செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)

3.12.13

செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)

செய்தி இணையதளங்கள் தங்கள் செய்திகளை கொண்டு சேர்ப்பதை பற்றி சென்ற பதிவில் அறிமுகமாக பார்த்தோம்...

அதாவது, கூகுள் தேடுபொறி தளம் எவ்வாறு செய்தி இணையதளங்களுக்கு உதவுகிறது என்பது குறித்து தொடக்கமாக அறிந்துக்கொண்டோம்.

இந்த பதிவில் நாம் கூகுள் சேவையை செயல்விளக்கமாக அறிய இருக்கிறோம்.

பொதுவாக நீங்கள் கூகுள் தேடுபொறியில் ஏதாவது தேடும் போது முதல்பக்கத் திரையில் என்னவெல்லாம் தோன்றும்.

எடுத்துக்காட்டாக... பிரதமர் என்று கூகுளில் தேடுங்கள்...

திரையில் என்னெவெல்லாம் வருகிறது.



பார்த்தீர்களா..? 

முதலில் விக்கிப்பீடியாவிலிருந்து அதற்கான தகவல் கிடைக்கிறது.
பிறகு செய்திகளில் இருந்து தேடிக்கொடுக்கிறது.

செய்திகள் பிரிவில் அண்மையில் பிரதமர் குறித்து எந்த இணையதளம் பதிவிட்டதோ அந்த இணையதளங்களின் பதிவுகளும் வருகிறது.

பிறகு பொது தளங்களில் இருந்து தேடற்பொருத்தங்கள் காண்பிக்கப்படுகிறது.


இதிலிருந்து என்ன தெரிகிறது.?


யோசித்துக்கொண்டே... இன்னொரு தகவலையும் உங்கள் சிந்தைக்குள் போட்டுவையுங்கள்...

உங்கள் இணையதளத்தை கூகுளில் தேடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது, எனக்கு என்னவெல்லாம் முதல்பக்கத்தில் கூகுள் தகவலாக வழங்கும்...?

அதையும் பார்த்துவிடலாமே...

எடுத்துக்காட்டாக.... எந்த தளத்தை தேடலாம்...?

உங்கள் தளத்தை நீங்களே தேடிப்பாருங்கள். நான் என்டிடிவியை எடுத்துக்கொள்கிறேன்...



என்ன பார்த்தீர்கள்...?

முதலில் என்.டி.டி.வி இணையதள இணைப்பு தோன்றுகிறது. அதுவது பகுதிகளாக பிரித்து காட்டுகிறது.
அடுத்து என்.டி.டி.வி செய்திகளை தேடிக்கொடுக்கிறது.
அதற்கப்புறம்... என்.டி.டி.வி டிவிட்டர், ஃபேஸ்புக், விக்கிப்பீடியா... இப்படி முதல்பக்கம் நிரம்பிக்கிடக்கிறது.

அப்படியே வலதுப்பக்கம் பாருங்கள்...
என்டிடிவியின் கூகுள் ப்ளஸ் பின்தொடர் விசையும், அந்த நிறுவனம் பற்றிய விக்கிப்பீடியா தகவலும், அதற்கு கீழே... கூகுள் ப்ளஸ் சமூக வலைதளத்தில் அண்மையில் பதிவேற்றிய நிலைத்தகவல் ஒன்றும் இடம்பெற்று உள்ளது.


மீண்டும் பழைய கேள்வி.. 

இதிலிருந்து என்ன தெரிகிறது.?

அதிகம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்.

இதெல்லாம் செய்தி இணையதளங்கள் அடிப்படையில் அறிந்திருக்க வேண்டியவை...

தமிழில் இந்த அறிதல், தெரிதல், எல்லாம் இதுவரை எப்படி இருந்ததோ.. இனிமேல் வரலாம்.

தொழில்நுட்பம் நம் மொழிக்குள் ஊடுரவ வேண்டும் என்பது எமது நோக்கம் என்பதால்.. இதனை வெளிப்படையாக பகிர அவாவுறுகிறேன்.

சரி.

இந்த வித்தைகளை எவ்வாறு செய்திகளை வெளியிடும் இணையதளங்கள் பயன்படுத்திக்கொள்வது பற்றி பார்ப்போம்.

அதற்கு முன்..

கூகுளின் சேவைகளை முதலில் மேலோட்டமாக அறிவது நலம்.

கூகுள் செய்தி,
கூகுள் ப்ளஸ்,
கூகுள் வரைபடம்,
யூடியுப்..
அப்புறம்.. கூகுள் இணைய கருவி....

இதனை அடுத்த பகுதியில் அறிவோம்...

அது வரை காத்திருங்கள்...


- யுவராஜ்.வெ



செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)

2.12.13

செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)

செய்திகள் எனப்படுவது பொதுவாக  ‘நிகழ்வின் பதிவு’.

இது முதன்மையானதா... முதன்மையற்றதா... என்பதை முடிவு செய்வது நிகழ்வின் தன்மையை பொறுத்தது.

இந்த செய்திகளை ஒருங்கிணைத்து கொண்டு சென்று பொது மக்களிடம் சேர்ப்பது தான்  ‘ஊடகம்’.




இந்த ஊடகம் எதை கொண்டு சேர்க்கிறது. எதை பாதியிலேயே விழுங்கிவிடுகிறது என்பதெல்லாம் வாதத்திற்குரியது.

எது செய்தி என்பதும் வாதத்திற்குரியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த ஊடகங்களை வகைப்படுத்தினால், மூன்றாக பிரிக்கலாம்.

ஒன்று அச்சு ஊடகம், இரண்டு மின் ஊடகம்(தொலைக்காட்சி, வானொலி), மூன்று புதிய ஊடகம் (இணையம்)



அச்சு, தொலைக்காட்சி , வானொலி (வானொலியில் செய்தி கேட்பது அரிதாகிவிட்டது) இவற்றை நாம் நன்றாகவே பயன்படுத்தி வருகிறோம். இவற்றை   விளக்கவும் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.

இவற்றையெல்லாம் தாண்டி வளர்ந்து வருவது இணைய ஊடகம். இதை பற்றி நாம் அறிய வேண்டிய நிறைய உள்ளது. இதனை மின் ஊடகங்கள் பிரிவில் சேர்க்கலாம். இருந்தாலும், இந்த இணைய ஊடகத்திற்கு தனிச்சிறப்புகள் உள்ளன. அதனால், தனியாக பிரித்தறிவது நல்லது.

ஒரு காலத்தில், இணையதளங்கள் வளர்ந்த நகரங்களில் மட்டுமே காண கூடியதும், அணுக கூடியதுமாக இருந்தது.
ஆனால், 15 ஆண்டுகளில், “யாருக்கு தான் தெரியாது இணையதளங்கள் பற்றி” என்றாகிவிட்டது.

படித்த சமூகம் பெருகிவிட்டதால், அவர்களுக்கு இணையதளங்கள் இன்றியமையாததாகி இருக்கிறது.

இணையதளம் தனி பகுதி.  இதனை இன்னொரு நாள் விளக்கமாக காணலாம்.

இணையதளம் எவ்வாறு செய்தி ஊடகமாகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

செய்திக்கென்று இணையதளங்கள் - ஆங்கிலமல்லாத பிற மொழிகளில் பெருகி விட்டது.

ஏன் ஆங்கிலமல்லாத.. என்று சுட்டிக்காட்டுகிறேன் என்றால், கணினியை கண்டுபிடித்ததும், இணையத்தை பயன்படுத்த தொடங்கினதும் ஆங்கிலத்தில் தான் என்பதால், தமிழ் போன்ற பிற மொழிகளின் எழுத்துருக்களை கணினிகள் ஏற்காதவையாக இருந்தன.

அதற்காக தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டது. இதையெல்லாம் ஒருங்கே கணினியில் நிறுவி இணையதளங்களை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல...

இந்த எழுத்துரு கதையும் தனி கதை. அதையும் பிறகொரு நாள் பார்ப்போம்.

சரி. இணையத்தில் செய்தி ஊடகங்கள் பற்றி பார்ப்போம்.



வெறும் எழுத்துகளாக மட்டும் செய்திகளை  படிக்காமல், அதனை, எந்த வடிவிலும் தெரிந்துக்கொள்ள இணையதளங்கள் உதவி புரிகின்றன.
ஒலியாக கேட்கலாம், ஒளியாகவும் பார்க்கலாம்.

வழங்கல் (ப்ரெசண்டேசன்) முறை பயனரின் விருப்பதற்கு ஏற்றாற் போல் இணைய ஊடகங்கள் அமைகின்றன.

அவ்வாறு பல வடிவங்களில் பல மொழிகளில் செய்திகளை உடனுக்குடன் வழங்க இணைய ஊடகங்கள் வளர்ந்து விட்டன.

இந்த ஊடகங்களுக்கென வரன்முறை கிடையாது . எதை வழங்க வேண்டும் . எந்த வாசகருக்கு எது பிடிக்கும் என்பதெல்லாம் அறிந்து தன்னியல்பாக அந்த இணையதளங்கள் மாறிக்கொள்கின்றன. நீங்கள் இரவு நேரங்களில் என்ன பார்ப்பீர்கள் என்பதை நுகர்ந்து அதற்கேற்றாற் போல் அந்த இணையதளம் இரவு நேரங்களில் நீங்கள் / உங்களை கேட்காமலே , அதனை வழங்க ஏற்பாடு செய்கின்றன.

அது எது என்பது.. உங்களின் தேடலை பொறுத்தது.

அப்படி, செய்தி இணைய தளங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதை எப்படி ஒருங்கே படிப்பது.. பார்ப்பது.. என்ற குழப்பத்திற்கும் விடை அளிக்கிறது இணையம்.....

தேடுபொறிகள் என்ன செய்யும் . ?

பொதுவாக தேடும் சொல் எந்த இணையதளத்தில் உள்ளது என்பதை தேடி காட்டும்.

இன்னும் மேம்பட்ட தேடலில், காணொளியாகவோ, படங்களாகவோ, தேடி கொடுக்கும்...

செய்தி இணையதளங்களில் மட்டும் தேடு என்றால்... அதையும் தேடி கொடுக்கும்...

என்னடா.. செய்தி... ஊடகம்... இணையதளம் ன்னு சொல்லிவிட்டு... தேடுபொறி க்கு வந்துவிட்டேன்னு நினைக்காதீங்க...

இணைய ஊடகம் குறித்து பாடம் எடுக்க விரும்பவில்லை. அதற்கான பாடசாலையும் இது அல்ல.  அதனால், அடுத்து வருவதை கவனமா படிங்க.

இங்க தான் நம்ம கதை இருக்கு.

கூகுள்.

இது இணைய உலகின் அசைக்க முடியாத ஒன்று.

இந்த கூகுள் சேவைகள் பலவற்றை நாம் பயன்படுத்தி வந்தாலும். நம்மில் எத்தனை பேர் கூகுளின் செய்தி சேவையை பயன்படுத்துகிறோம் என்பது தெரியவில்லை.

கூகுள் செய்தி சேவை மற்ற செய்தி சேவைகளை விட வேறுபட்டது.

எடுத்துக்காட்டாக யாகூவின் செய்திச்சேவையை பாருங்கள். மைக்ரோசாப்ட்டின் எம்எஸ்என் இணையதளத்தையும் பாருங்கள்...

அவற்றின் செய்திகளில், தனிப்பட்ட நிறுவனங்களின் செய்திகளை விலைக்கு வாங்கி பதிவிட்டிருப்பார்கள்....

ஆனால், கூகுள் அவ்வாறு இல்லாமல், செய்தி இணையதளங்கள் பதிவு செய்யும் நேரத்திலேயே அந்த செய்திகள் கூகுள் செய்திகள் பக்கத்தில் வந்துவிடும்.

அதை சொடுக்கினால், அந்த கூறிப்பிட்ட இணையதளத்திற்கு நேரடியாக செல்லும்.

அதேப்போன்ற செய்திகள், பிற இணையதளங்களில் பதிவாகி இருந்தால் அந்த பதிவுகளும் காட்டப்படும்...

சரி. நமக்கு ஒரு கணக்கு  மனதுக்குள் தோன்றியிருக்குமே... இதனால் கூகுளுக்கு என்ன லாபம் என்று..?

நாம் கூகுளுக்கு என்ன லாபம் என்பது பற்றி சிந்திக்காமல் , இதனால் செய்தி இணையதளங்களுக்கு  என்ன லாபம் என்று தான் கணக்கிட வேண்டும்.

இந்தியாவில், ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் தான் கூகுள் செய்தி சேவை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் செய்தி சேவையில், பெரும்பாலான அச்சு ஊடகங்களின் (நாளிதழ்) இணையதளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு தொலைக்காட்சிகளின் இணையதளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இதை தாண்டி, விமர்சனங்கள் எழுதும் இணையதளங்களும், மற்ற இணையதளங்கள் என சிலவற்றையும் காணமுடிகிறது....

நீங்கள் செய்திகளை வழங்கும், இணையதளங்களை கொண்டிருந்தால்,
இதற்கு மேல் இந்த சேவை குறித்து அறிந்து கொள்ள, உங்களுக்கு ஆசை வரலாம்...

இதில் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியாது. கூகுள், செய்தி இணையதளங்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. அவற்றையும் அறிந்துக்கொண்டால், அதன் முழு பலனையும் அனுபவிக்கலாம்.

* கூகுள் செய்தி சேவையில் இணைவது எப்படி..?
* கூகுள் சேவைகளில் செய்தி இணையதளங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியவை என்னென்ன..?
* இணைய உலகில் கோலோச்ச ரகசியங்கள் என்னென்ன..?





தொழில்நுட்பத் தகவல்களை தாண்டி.... 
இன்னும் அறிந்துக்கொள்ள காத்திருங்கள்.... 

( அடுத்த பகுதியில் தொடரும்...)



செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)
செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)


- யுவராஜ் .வெ.


வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...