18.11.13

யார் இந்த மின்வெளி கள்ளர்கள்..? (பகுதி 2)

கணினி குற்றங்கள்/இணையவெளி குற்றங்கள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இணையதளங்களை தகர்க்கும் ஹாக்கர்களை அண்மை பதிவில் அறிந்துக்கொண்டோம்.

கணினி குற்றங்கள் பொதுவாக எவ்வாறு கருதப்படுகிறது என்றால்... மிரட்டல் மின்னஞ்சல் விடுப்பது, புகழ்பெற்ற ஒருவர் குறித்து அவதூறாக எழுதுவது, இணையதளங்களை முடக்குவது, வங்கி கணக்குகளில் பணம் திருடுவது... உள்ளிட்டவைகளில் அடங்கி விடுகிறது.

ஆனால், இவற்றையெல்லாம் செய்யாமலே நம்மில் 99.99% பேர் கணினி குற்றவாளிகளாக இருக்கிறோமே... உங்களால் நம்பமுடிகிறதா..?

ஆமாங்க... நம்புங்க...


டோரண்ட்ஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா...

இல்லையா..?

சரி கூகுளாவது தெரியுமா..?

தெரியாதவர்களே இல்லை என்கிறீர்களா..?

இந்த கூகுள் மூலம் என்னென்னமோ தேடுகிறோம்.

அப்படியே நமக்கு தேவையான மென்பொருட்களையும் தேடி கணினியில் நிறுவிக்கொள்கிறோம்.

உண்மைத்தானே.

அதேப்போல டோரண்ட் மூலமாகவும், கணினி மென்பொருட்கள், ஆவணங்களை பெற முடியும். இது இன்னொரு கூகுளா என்று கேட்காதீர்கள், கோப்பு பகிரக்கூடிய முறை தான் இது.

நிகரிடைப் பிணையம் (peer-peer network) மூலம் ஒரு கோப்பை நமது கணினியில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இது எப்படி செயல்படுகிறது என்றால்.

டோரண்ட் மூலம் நான் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்கிறேன்.

அது முடிந்ததும். நான் ஒரு வழங்கி (செர்வெர்) ஆக மாறிவிடுவேன். அதாவது. என்னைப்போன்று அந்த கோப்பை தரவிறக்கி கொண்டவர்களெல்லாம் வழங்கி யாக மாறியிருப்பார்கள்.

நான் தரவிறக்கிய அந்த கோப்பை வேறொருவரும் தரவிறக்க முயற்சிக்கும் போது, என்னிடமிருந்தும், என்னைப்போன்றவர்களிடமிருந்து பகுதி பகுதியாக அந்த குறிப்பிட்ட நபர்  தரவிறக்குவார்.

இது ஒரு தொழில்நுட்பம் தான்.

நமக்கு பிரச்னை இங்கில்லை.

இது பொதுவுடைமை தத்துவத்தில் இயங்கும்  தொழில்நுட்பம்.

யாவும் யாவருக்கும்.


ஆனால், இங்கு பகிரப்படும் கோப்புகள் திரைப்படங்கள், பாடல்ப்பதிவுகள், மென்பொருட்கள் முறையான உரிமம் பெற்றதா? என்பதை அறிவீர்களா..?

சும்மா கிடைத்தால் எதையும் பெற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் வளர்கிறோம். அதனால் தான், இனாம்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாம் அறிசார் சொத்துரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.


இப்படி அனுமதியில்லாமல், எப்படியேனும் ஒரு மென்பொருளின் நுழைவு/உரிமத்தை உடைத்து அதனை பயன்படுத்துவது கணினி குற்றத்தில் அடங்கும்.

அப்படி பார்த்தால், நமது கணினியில் உள்ள விண்டோஸ் இயங்குதளம் (ஓஎஸ்), எம்.எஸ்.ஆபிஸ், போட்டோசாப், உள்ளிட்டவை அதிகமாக உரிமமில்லாமல் தான் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு பெயர் தான் உரிமையிலா நகலாக்கம் (பைரசி)

பொது வாழ்வில் கண்ணியவானாக, நேர்மையாளனாக வாழநினைக்கும் நாம், இந்த கணினி குற்றத்தை அறியாமல் செய்வதை இனியும் அனுமதிக்கலாமா..?

இப்படி கணினியில் மென்பொருட்களை உரிமமில்லாமல் நாம் பயன்படுத்த காரணம் என்னவென்று பார்த்தால்...

நம்மால் இலவசமாகப் பெறமுடியும் என்கிறபோது, எதற்காக
விலை கொடுத்து வாங்க வேண்டும் என்கிற எண்ணம் நம்முள் மேலோங்கி இருப்பதே.

நமது எண்ணமும் செயல்பாடுகளும் சுயநலத்தை
அடிப்படையாய்க் கொண்டவை என்பதால்,
பண ரீதியாகப் பயன் தருகிற
ஒன்றைப்பெறும் வாய்ப்புக் கிடைக்கும் எனில் அதைத்
தயங்காமல் பெற முயற்சிப்போம்.  குறைந்த ஆபத்து விளைகிற இந்த செயலை செய்ய ‘ரிஸ்க்’ எடுப்பதில் நமக்கு அச்சம் ஏற்படுவதில்லை.


கணினி குற்றங்கள் தொடர்பான தண்டனைமுறைகள், சட்டவிதிகள் நம் நாட்டில் பெரிதாக இல்லை என்பதால், இந்த போக்கு சாதாரணமாக இருக்கிறது.

இனிவரும் காலங்களில் கணினி குற்றங்கள் குறித்த விழுப்புணர்வும், அதுத்தொடர்பான சட்ட விதிகள் கடுமையாக இயற்றப்படும் போது, ’ரிஸ்க்’ எடுப்பதை நம்மவர்கள் யோசிப்பார்கள் என்பது திண்ணம்.


சரி. கணினி நன்னெறிகள் என்று ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளது அறிவீர்களா..?

அதனை பின்பற்றினாலே கணினி குற்றங்கள் குறையவாய்ப்பிருக்கிறது.

அது என்ன கணினி நன்னெறிகள்...

அடுத்த பதிவில் அறிவோம். (தொடரும்)


- வெ.யுவராஜ்

1 comment:

p.balasundar said...

என்னத் தோழர் செய்யறது நமக்கே நாம படைப்பாளி ஆன பிறகு தானே நம்ம படைப்ப ஒருத்தன் திருடும் போது தானே திருட்டுத் தனம் எவ்வளவு வலியானதுன்னு புரியுது.

"இருக்கிறதெல்லாம் பொதுவாபோனா பதுக்குற வேலையும் நடக்காது"..!

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...