24.11.13

கடவுள்.....


சிலருக்கு திடீர் பக்தி ஏற்படுவதை அண்மையில் கவனிக்கமுடிந்தது...

’பிறருக்கு இன்னா செய்தலை தவிர்க்கும்’ எவருக்கும் இந்த நிலை இல்லை. அவர்கள் என்றும் போல் நன்றாக தான் உள்ளனர்.

இந்த அப்பப்ப தப்பு செய்து அப்பப்ப அதுக்கு பரிகாரம் தேடுபவர்கள் போலியான பக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் வேடம் தான் மிகுந்திருக்கும்....

உள்ளம் பெருங்கோயில்
ஊன் உடம் பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே!

எனும் திருமந்திரப்பாடல்களிலேயே... இறைவழிபாட்டை வகுத்திருக்கிறார்கள்..

ஆனாலும், இப்படி வேடமிட்டுதான் இறையை வணங்குதல்...

எத்தகைய விளம்பரப் பிரியர்கள் என்று பாருங்கள்....

( இந்தப் பாடலில் ’கள்ளப் புலன்கள்’ என்பது மிக முக்கியமான வார்த்தை – நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை உலக இன்பங்களின்பக்கம் இழுத்துவிடக்கூடியவை கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்கள். ஆகவே அவற்றைக் ‘கள்ளப் புலன்கள்’ என்று அழைத்தார்கள் – கள்வனைக் கட்டுப்படுத்தி வைப்பதுபோல் புலன்களை அடக்கப் பழகவேண்டும் என்பது பொருள் ...

திரு மூலரே பகுத்தறிவோடு தான் சொல்லியிருக்கிறார்...)

இறை என்பதை நாம் தான் வகுத்தோம்...
அது அடையாளம்....
அவ்வளவுதானே ஒழிய...
ஆற்றலற்றது....

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை உணர்ந்து...

வாழ்க்கையை வழிநடத்தினால்... பரிகாரத்திற்கு வேலையில்லை....


19.11.13

யார் இந்த மின்வெளி கள்ளர்கள்..? (பகுதி 3)


’நாளை ஒப்படைக்க வேண்டிய ஆவணங்களை காணவில்லையே’ என்று அலுவலகங்களில் சிலர் மண்டையை பிடித்துக்கொண்டு புலம்புவது நம்மில் பலர் பார்த்திருப்போம். நம்மில் சிலருக்கு அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.

போட்டிக்காரணமாகவும், பொறாமைக்காரணமாகவும் கோப்புகளை நீக்கி விடுவார்கள்.

இதற்காக மேலதிகாரிகள் இடம் புகாரளித்து, பின்னர் நடவடிக்கை எடுத்து, அதற்காக பழிவாங்கல்...

இப்படியாக தொடரும்.....கணினி தொடர்பான குற்றங்களை தடுக்க, கணினியை பயன்படுத்துவோருக்கு பொதுவான அறிவுறுத்தல்கள் பல்கலைக் கழகங்கள் வாயிலாக அத்துறையில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அவ்வாறு படித்து வெளிவரும் அந்த மாணவர்கள் பணியிடங்களில் சேரும் போதும், அவ்வாறு கணினியை கோண்டு தவறான செயலில் ஈடுபட கூடாது என்பதான அறிவுறுத்தலோடும், ஒப்பந்தங்களோடும் பணி ஆணை வழங்கப்படுகிறது.

இருந்தாலும், இதுப்போன்ற குற்றங்கள் நிகழக்காரணம். நமக்குள் இருக்கும் தன்னல எண்ணம் தான்.

பிறர் நமக்கு இன்னா செய்தலை விரும்பாத  நாம் நம் வாழ்வில் அதனை கடைப்பிடிக்க வேண்டும். நாம் நமக்கான சில கட்டுப்பாடுகளை வகுத்து, குற்றங்களாக கருதப்படுபவையை தவிர்க்க வேண்டும்.

கணினி நன்னெறிக் கழகமானது, நன்னெறி தொடர்பான பத்துக் கட்டளைகளை  வரையறுத்துள்ளது.

Ten Commandments of Computer Ethics

1. Thou Shalt Not Use A Computer To Harm Other People. 
2. Thou Shalt Not Interfere With Other People’s Computer Work. 
3. Thou Shalt Not Snoop Around In Other People’s Computer Files. 
4. Thou Shalt Not Use A Computer To Steal. 
5. Thou Shalt Not Use A Computer To Bear False Witness. 
6. Thou Shalt Not Copy Or Use Proprietary Software For Which You have Not Paid. 
7. Thou Shalt Not Use Other People’s Computer Resources Without Authorization Or Proper Compensation. 
8. Thou Shalt Not Appropriate Other People’s Intellectual Output. 
9. Thou Shalt Think About The Social Consequences Of The Program You Are Writing Or The System You Are Designing. 
10. Thou Shalt Always Use A Computer In Ways That Insure Consideration And Respect For Your Fellow Humans. 


 * பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் கணினியைப் பயன்படுத்தாதீர்கள்.
 * பிறரின் கணினிப் பணியில் தலையிடாதீர்கள்.
 * பிறரின் கணினி கோப்புகளை நோட்டம் விடாதீர்கள்.
 * கணினிப் பயன்படுத்திக் களவாடாதீர்கள்.
 * பொய் சாட்சி உருவாக்க கணினியைப் பயன்படுத்தாதீர்கள்.
 * நீங்கள் விலை கொடுத்து வாங்காத பதிப்புரிமை உள்ள மென்பொருட்களை நகலெடுக்காதீர்கள் அல்லது பயன்படுத்தாதீர்கள்.
 * பிறருடைய கணினி வளங்களை அனுமதியின்றியோ, உரிய கட்டணமின்றியோ பயன்படுத்தாதீர்கள்.
 * பிறரின் அறிவுசார் படைப்புகளை முறைகேடாக அபகரித்துக் கொள்ளாதீர்கள்.
 * நீங்கள் உருவாக்கும் மென்பொருள் அல்லது நீங்கள் வடிவமைக்கும் முறைமையின் சமூக விளைவுகளைச் சற்றே எண்ணிப் பாருங்கள்.
*  உடன்வாழும் மனிதர்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டு உரிய மரியாதை வழங்கும் வகையிலேயே எப்போதும் கணினியைப் பயன்படுத்துங்கள்.இதில், எதையும் பின்பற்ற முடியாதே என்கிறீர்களா...?

மீண்டும் சொல்கிறேன்...

பிறர் நமக்கு இன்னா செய்தலை விரும்பாத  நாம் நம் வாழ்வில் அதனை கடைப்பிடிக்க வேண்டும். நாம் நமக்கான சில கட்டுப்பாடுகளை வகுத்து, குற்றங்களாக கருதப்படுபவையை தவிர்க்க வேண்டும்.

அப்போது தான் மின்வெளி கள்ளர்கள் இல்லா உலகை நாம் உருவாக்க முடியும்...

இதனை பொருட்டாக எடுத்துக்கொள்ளாத நாட்டில், மின்வெளி கள்ளர்களின் அட்டகாசம் தாங்காது.....

இனிவரும் காலம் எப்படி அமையுமோ....


- வெ.யுவராஜ் • யார் இந்த மின்வெளி கள்ளர்கள்..? (பகுதி 1)
 • யார் இந்த மின்வெளி கள்ளர்கள்..? (பகுதி 2)
 • யார் இந்த மின்வெளி கள்ளர்கள்..? (பகுதி 3)
 • 18.11.13

  யார் இந்த மின்வெளி கள்ளர்கள்..? (பகுதி 2)

  கணினி குற்றங்கள்/இணையவெளி குற்றங்கள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

  இணையதளங்களை தகர்க்கும் ஹாக்கர்களை அண்மை பதிவில் அறிந்துக்கொண்டோம்.

  கணினி குற்றங்கள் பொதுவாக எவ்வாறு கருதப்படுகிறது என்றால்... மிரட்டல் மின்னஞ்சல் விடுப்பது, புகழ்பெற்ற ஒருவர் குறித்து அவதூறாக எழுதுவது, இணையதளங்களை முடக்குவது, வங்கி கணக்குகளில் பணம் திருடுவது... உள்ளிட்டவைகளில் அடங்கி விடுகிறது.

  ஆனால், இவற்றையெல்லாம் செய்யாமலே நம்மில் 99.99% பேர் கணினி குற்றவாளிகளாக இருக்கிறோமே... உங்களால் நம்பமுடிகிறதா..?

  ஆமாங்க... நம்புங்க...


  டோரண்ட்ஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா...

  இல்லையா..?

  சரி கூகுளாவது தெரியுமா..?

  தெரியாதவர்களே இல்லை என்கிறீர்களா..?

  இந்த கூகுள் மூலம் என்னென்னமோ தேடுகிறோம்.

  அப்படியே நமக்கு தேவையான மென்பொருட்களையும் தேடி கணினியில் நிறுவிக்கொள்கிறோம்.

  உண்மைத்தானே.

  அதேப்போல டோரண்ட் மூலமாகவும், கணினி மென்பொருட்கள், ஆவணங்களை பெற முடியும். இது இன்னொரு கூகுளா என்று கேட்காதீர்கள், கோப்பு பகிரக்கூடிய முறை தான் இது.

  நிகரிடைப் பிணையம் (peer-peer network) மூலம் ஒரு கோப்பை நமது கணினியில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

  இது எப்படி செயல்படுகிறது என்றால்.

  டோரண்ட் மூலம் நான் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்கிறேன்.

  அது முடிந்ததும். நான் ஒரு வழங்கி (செர்வெர்) ஆக மாறிவிடுவேன். அதாவது. என்னைப்போன்று அந்த கோப்பை தரவிறக்கி கொண்டவர்களெல்லாம் வழங்கி யாக மாறியிருப்பார்கள்.

  நான் தரவிறக்கிய அந்த கோப்பை வேறொருவரும் தரவிறக்க முயற்சிக்கும் போது, என்னிடமிருந்தும், என்னைப்போன்றவர்களிடமிருந்து பகுதி பகுதியாக அந்த குறிப்பிட்ட நபர்  தரவிறக்குவார்.

  இது ஒரு தொழில்நுட்பம் தான்.

  நமக்கு பிரச்னை இங்கில்லை.

  இது பொதுவுடைமை தத்துவத்தில் இயங்கும்  தொழில்நுட்பம்.

  யாவும் யாவருக்கும்.


  ஆனால், இங்கு பகிரப்படும் கோப்புகள் திரைப்படங்கள், பாடல்ப்பதிவுகள், மென்பொருட்கள் முறையான உரிமம் பெற்றதா? என்பதை அறிவீர்களா..?

  சும்மா கிடைத்தால் எதையும் பெற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் வளர்கிறோம். அதனால் தான், இனாம்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாம் அறிசார் சொத்துரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.


  இப்படி அனுமதியில்லாமல், எப்படியேனும் ஒரு மென்பொருளின் நுழைவு/உரிமத்தை உடைத்து அதனை பயன்படுத்துவது கணினி குற்றத்தில் அடங்கும்.

  அப்படி பார்த்தால், நமது கணினியில் உள்ள விண்டோஸ் இயங்குதளம் (ஓஎஸ்), எம்.எஸ்.ஆபிஸ், போட்டோசாப், உள்ளிட்டவை அதிகமாக உரிமமில்லாமல் தான் பயன்படுத்தப்படுகிறது.

  இதற்கு பெயர் தான் உரிமையிலா நகலாக்கம் (பைரசி)

  பொது வாழ்வில் கண்ணியவானாக, நேர்மையாளனாக வாழநினைக்கும் நாம், இந்த கணினி குற்றத்தை அறியாமல் செய்வதை இனியும் அனுமதிக்கலாமா..?

  இப்படி கணினியில் மென்பொருட்களை உரிமமில்லாமல் நாம் பயன்படுத்த காரணம் என்னவென்று பார்த்தால்...

  நம்மால் இலவசமாகப் பெறமுடியும் என்கிறபோது, எதற்காக
  விலை கொடுத்து வாங்க வேண்டும் என்கிற எண்ணம் நம்முள் மேலோங்கி இருப்பதே.

  நமது எண்ணமும் செயல்பாடுகளும் சுயநலத்தை
  அடிப்படையாய்க் கொண்டவை என்பதால்,
  பண ரீதியாகப் பயன் தருகிற
  ஒன்றைப்பெறும் வாய்ப்புக் கிடைக்கும் எனில் அதைத்
  தயங்காமல் பெற முயற்சிப்போம்.  குறைந்த ஆபத்து விளைகிற இந்த செயலை செய்ய ‘ரிஸ்க்’ எடுப்பதில் நமக்கு அச்சம் ஏற்படுவதில்லை.


  கணினி குற்றங்கள் தொடர்பான தண்டனைமுறைகள், சட்டவிதிகள் நம் நாட்டில் பெரிதாக இல்லை என்பதால், இந்த போக்கு சாதாரணமாக இருக்கிறது.

  இனிவரும் காலங்களில் கணினி குற்றங்கள் குறித்த விழுப்புணர்வும், அதுத்தொடர்பான சட்ட விதிகள் கடுமையாக இயற்றப்படும் போது, ’ரிஸ்க்’ எடுப்பதை நம்மவர்கள் யோசிப்பார்கள் என்பது திண்ணம்.


  சரி. கணினி நன்னெறிகள் என்று ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளது அறிவீர்களா..?

  அதனை பின்பற்றினாலே கணினி குற்றங்கள் குறையவாய்ப்பிருக்கிறது.

  அது என்ன கணினி நன்னெறிகள்...

  அடுத்த பதிவில் அறிவோம். (தொடரும்)


  - வெ.யுவராஜ்

  17.11.13

  யார் இந்த மின்வெளி கள்ளர்கள்..? (பகுதி 1)  புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் பாதுகாப்பு (?) அரண்களையும் தாண்டி உள்நுழைந்து, உள்ளடக்கங்களை நீக்கி, முடக்கி வைத்து விட்டார்கள்  ‘மின்வெளி கள்ளர்கள்’.

  யார் இந்த மின்வெளி கள்ளர்கள்..?


  இவர்களை தெரிந்துக்கொள்ளும் முன்னர் இணையதளங்கள் தொடர்பாக பொதுவான தகவலை தெரிந்துக்கொள்வோம்.

  பொதுவாக, மின்வெளி ( சைபர் ஸ்பேஸ்)யில், ஏராளமான தகவல்கள் பொதிந்துக்கிடக்கின்றன.

  இந்த தகவல் எல்லாம், வெவ்வேறு பெயர்களில் இணையதளங்களாக பதியப்பட்டுள்ளன.

  இந்த இணையதளங்களில் உள்ள தகவல்களில் சில ரகசியங்களாகவும், பதிப்புரிமைகளாகவும், பாதுகாக்கப்படவேண்டிய ஆவணங்களாகவும், பொதுவான தகவல்களாகவும், செய்தியாகவும் இருக்கலாம்.

  இந்த இணையதளங்களுக்கென தனித்தனி நுழைவுகள் இருக்கின்றன. அவற்றை அதன் உரிமையாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள்.

  இந்த உரிமையாளர்கள் என்பவர்கள் வாடகை வீட்டில் குடியிருப்போரை போன்றோர் தான்.

  வீட்டுக்கு உரிமையாளர் என தனியாக இருப்பார்.
  அவர் பெயர் ’மின்வெளி வழங்கி’ (வெப் சர்வர் ).

  இவரிடம் ஒரு கணிசமான தொகைக்கு  ( வாடகை) குறிப்பிட்ட அளவு இடம் வாங்கி, அதில் தகவல்கள் இடம்பெற செய்யப்படுகிறது.

  அதேசமயம் , இணையதள முகவரிகள் மற்றும் எண்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு (ஐகேன்) தான் இணையமுகவரிகளை நிர்வகிக்கிறது.

  இந்த முகவரிகளை ’வழங்கி’களில் இணைத்து, இணையப்பக்கங்களை உருவாக்கி முழுமையான இணையதளங்களாக காட்சிக்குக் கொண்டு வரப்படுகிறது.


  இதுவரை என்ன சொன்னீர்கள் என்று நீங்கள் கேட்கிறீர்களா ?.

  இன்னும் எளிமையாக சுருக்கமாக சொல்கிறேன்.


  ஒரு இணையதளம் தொடங்க வேண்டும். அதற்கு பெயர் www.abcd.com என்று வைத்துக்கொள்ளுங்கள்.

  அந்த பெயரை முதலில் பதிவு செய்யவேண்டும்.

  அதற்காக ஏராளமான சேவை வழங்குநர்கள் உள்ளனர்.

  எங்கு உள்ளனர் என்றால்....

  இணையத்தில் தான் அவர்களும் உள்ளனர்.


  இதனை பதிவுசெய்த பின்னர், இடம் வாங்க வேண்டும்.  இதற்கும் சேவை வழங்குநர்கள் உள்ளனர்.

  இவற்றை தனித்தனியாகவும் வாங்கலாம். அல்லது ஒரே வழங்குநரிடமும் வாங்கலாம்.

  சரி.


  பொதுவாக இணையதளத்தை எல்லோராலும் காண முடியும்.

  ஆனால், இணையதள அமைப்புகளை அணுக அதன் உரிமையாளரை தவிர யாராலும்  முடியாது.

  அதற்கென நுழைவு முறைகள் உள்ளன. அதன் மூலம் தான் அணுகி மாற்றங்கள் செய்ய முடியும்.

  அதாவது, இணையதளத்தில் என்னென்ன தெரிய வேண்டும் என்பதை நிரல்களாக எழுதி, அந்த கோப்பை ‘இணையப்பக்கங்களை நிர்வகிக்கும் இடத்தில் சேமிக்க வேண்டும். அத்ற்கு தான் நுழைவுச்சொல் தேவைப்படும்.


  அவ்வாறு, நுழைவு தகவல்கள் தெரியாத நிலையிலும், ‘மின்வெளி கள்ளர்கள்’ மூலம் சிலவேளை இணையதளங்களை அணுகி தகவல் தகர்க்கப்படுகிறது.


  எவ்வாறு அவ்வாறு செய்யமுடியும்?  மின்னஞ்சல் முகவரி கொண்டில்லாத படித்தவர்களே இல்லை எனலாம்.

  அதனால், மின்வெளி குற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்க சரியான எடுத்துக்காட்டு மின்னஞ்சல் தான் சரியானது என்று எண்ணுகிறேன்.


  மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வதற்கு,  பலகட்ட தகவல்களை நாம் உள்ளிடுகிறோம்.

  அது போதாதென செல்பேசி வழியாகவும் உறுதிசெய்யப்பட்டு தான் மின்னஞ்சல் முகவரி உருவாகிறது.

  ( மின்னஞ்சல் முகவரியை நண்பர்கள் உருவாக்கி கொடுத்தார்களே என்கிறீர்களா....  சிரமப்படாமல் போய் ஒரு முகவரியை உருவாக்கி பழகிக்கொள்ளுங்கள்... இனாமாக தான் கிடைக்கிறது....)


  ஒரு கட்டத்தில், மின்னஞ்சல் முகவரிக்கான நுழைவுச்சொல் மறந்துப்போனால், அதனை மீட்டெடுக்க, மின்னஞ்சல் சேவை தளமே சில வாய்ப்புகளை கொடுக்கிறது.


  நீங்கள் முதலில் பதிவு செய்த தகவல்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து, நுழைவுச்சொல்லை மீட்டெடுக்கலாம். அல்லது புதிதாக மாற்றிக்கொள்ளலாம்.

  நீங்கள் பதிவு செய்த தகவல்கள் கடினமாகக்கூட இருக்கலாம்.

  அதாவது மற்றவர்களால் தெரிந்து வைத்திருக்காதவையாக இருக்கலாம் என்று வைத்துக்கொள்வோம்.

  இப்போது, உங்களுடைய மின்னஞ்சல் பெட்டியை நான் பார்க்க ’ஆசை’ப்படுகிறேன்.

  உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன என்பது எனக்கு தெரிகிறது.

  நுழைவுச்சொல் தெரிந்தால் அஞ்சல் பெட்டியை அணுகி விடுவேன்.

  நீங்கள் நுழைவுச்சொல்லாக என்ன கொடுத்திருப்பீர்கள் என்று என்னால் கருதக்கூடியவைகளை இடுகிறேன்.

  அப்போதும் உள் நுழைய முடியவில்லை.

  உடனே, கடவுச்சொல் (நுழைவுச்சொல்) மறந்துவிட்டது என்கிறேன்.

  உடனே, படிவம் வருகிறது.

  அதில் சில அடிப்படை கேள்விகள் கேட்கப்படுகிறது..?

  அவை எனக்கும் தெரிந்திருந்தால், நான் உங்கள் அஞ்சல் பெட்டியை அணுகிவிடுவேன்.  ( தெரியவில்லை என்றால்..... முடியாது.)


  இதற்கு பெயர் தான் ஹாக்கிங். ( இணையவெளி அரண் உடைத்தல்/தகர்த்தல்)
  மின்னஞ்சல் மட்டுமல்ல, நுழைவு உள்ள எந்த இடத்திலும் அத்துமீறல், அல்லது அரண் உடைத்தலை ஹாக்கிங் என்றே சொல்லலாம்.


  மேற்சொன்ன நுழைவு சொல் மூலம் அணுகுவது மட்டுமல்லாமல், எங்கெல்லாம் பாதுகாப்பு ஓட்டை இருக்கிறதோ அந்த தடத்தை அணுகி உள்நுழைந்து அதன் மூலம் தகவல்களை திருடுதல், நீக்குதல் பணியை செய்யலாம்.


  அந்த இணையதளத்தில் நச்சுநிரல்களை கூட பதிவேற்றிவிடலாம் (வைரஸ்).
  மேற்சொன்ன செயலை செய்தால், அது யார் செய்தார்கள் என்று கண்டுபிடிப்பது எளிது. அதற்கான தடயங்களை அறிய முடியும்.

  ஆனால், அந்த தடயங்களையும் துடைத்துக்கொண்டு செல்லும் ‘ஹாக்கர்’ களை கண்டுபிடிப்பது எளிதானதல்ல.


  ஹாக்கிங் செய்வதும் அவ்வளவு எளிதான செயலும் அல்ல.

  அது சாதாரண கணினி பட்டதாரியாலோ, பொறியாளராலோ செய்யக்கூடியதும் அல்ல.

  கணினி நிரலியலில், கணினி வலையம் தொடர்பான வல்லமை பெற்ற, எந்நேரமும், இதே ஆய்வில் இருக்கும் ஒருவரால் மட்டுமே இத்தகைய செயலில் ஈடுபட முடியும்.

  இவர்கள் ’கணினி வல்லுநர்கள்’.


  சரி இந்த ஹாக்கர்கள் இணையதளத்தை தான் ‘கிழி’ப்பார்களா..? என்றால் அவர்களின் கில்லாடித்தனம் நீண்ட நெடியது.


  உங்களில் எத்தனை பேர் பணம் கொடுத்து மென்பொருளை பயன்படுத்துகிறீர்கள்.?

  ஆம் என்றால் நன்றாக அறிந்து ஆம் என்று கூறுங்கள்...

  ஏனென்றால், நீங்கள் பணம் கொடுத்து சில மென்பொருட்களை கணினியில் நிறுவ சொல்லியிருப்பீர்கள். அதனை நிறுவியவர் நீங்கள் கேட்ட மென்பொருளை நிறுவிவிட்டு, பணம் வாங்கிக்கொண்டு சென்றிருப்பார்.

  இங்கு மென்பொருள் நிறுவப்பட்டிருக்கும். அதற்காக பணம் கொடுத்திருப்பீர்கள்.

  உண்மையில், என்ன நிகழ்ந்திருக்கும் என்றால், நீங்கள் மென்பொருளுக்கு பணம் கொடுத்திருக்கமாட்டீர்கள். அதனை நிறுவியதற்கு தான் பணம் கொடுத்திருப்பீர்கள்.

  அந்த மென்பொருள் கள்ள நுழைவு மூலம் நிறுவப்பட்டிருக்கும்.


  இதற்கு பெயரும் ஹாக்கிங் தான்.  கிராக்கிங் என்றும் சொல்லலாம்.

  இதுப்போன்று முறையான உரிமம் பெறாமல் மென்பொருள்களை பயன்படுத்துவது உரிமையிலா நகலாக்கம் (பைரசி) எனப்படுகிறது.


  இதுக்குறித்து, அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.


  சரி விடயத்திற்கு வருவோம்.


  இணையதள அரண் உடைத்தல்/தகர்த்தல் (வெப்சைட் ஹாக்கிங்) என்பது எளிதான செயல் என்று தெரியும். அதனை செய்வோரும் எளிதானவரும் அல்லர் என்றும் தெரியும்.

  இத்தகையவர்களை வல்லுநர்கள் என்று சொல்லாமல் குற்றவாளிகள் என்று சொல்ல காரணம். அந்த செயல் பிறருக்கு தீங்கு விளைவிக்கிறது என்பது தான்.


  ஹாக்கிங் செய்வோருக்கு  காரணமாக இருப்பவை: பழிவாங்கல், வணிகப் போட்டி அல்லது சாகசம்


  தற்போது, தமிழ் தொலைக்காட்சிகளின் இணையதளங்களை சூறையாடியிருப்பதற்கு காரணமும் மேற்சொன்னவையாக கூட இருக்கலாம்.


  அவர்கள் எவ்வாறெல்லாம் உள்நுழைந்திருப்பார்கள் என்பதை பார்ப்போம்.


  * இணையதளங்களின் நுழைவுப்பக்கம் (அட்மின் பக்கம்) எது என்று அறிந்து, அவற்றின் மூலம் சென்றிருக்கலாம். இதனையறிய தொழில்நுட்பம் தெரிய வேண்டிய அவசியமில்லை. அதற்கான கருவிகள் இணையதளங்களிலேயே கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்

  * ஹாக் செய்யப்பட்ட இணையதளங்கள் ஸ்டேடிக் அதாவது நிலையான தகவல்கள் கொண்ட இணையதளங்கள் அல்ல. அவை டைனமிக் அதாவது மாறக்கூடிய தகவல்களை கொண்ட இணையதளங்களாக உள்ளன. ஹாக் செய்யப்பட்டதற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா..?
  டைனமிக் இணையதளங்களுக்கு என்று தயார் செய்யப்பட்ட நிரல்கள் கொண்ட இணையப்பக்க தொகுப்பு சந்தையில் கிடைக்கிறது. அவற்றை பயன்படுத்தியிருந்தால், அதில் நுழைவு விபரங்கள் கொண்ட பக்கத்தை அறிந்து உள்நுழைந்திருக்கலாம். இதுப்போன்ற தொகுப்புகளில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வபோது செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன.

  * நுழைவு விபரம் தெரிந்த நபரால், அல்லது அதனை களவாடியவர்களால் கூட உள் நுழைந்திருக்கலாம்.

  இதுப்போன்ற செயல்களை தவிர்க்க என்ன வழி?

  * இணையதள உள்நுழைவு விபரங்களை கமுக்கமாக வைத்திருப்பது நல்லது. வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடக்கூடாது என்றால், நம்பத்தகுந்த இரண்டு அல்லது மூன்று நபர்கள் அதனை பாதுகாக்க வழிவகை செய்யவேண்டும்.

  * மாதாமாதம் நுழைவுகளை மாற்றியமைக்கலாம்

  * இணையதளத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளை புதுப்பித்துக்கொண்டிருக்க வேண்டும்.

  * நுழைவு விபரங்கள் எளிதில் நினைவுக்கொள்ளத்தக்கதாக இருக்க கூடாது.

  * இணையதளத்திற்காக பயன்படுத்தப்படும் வழங்கி (சர்வர்) பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும். அதுப்போன்ற வழங்கிகளிடம் இருந்து இடம் வாங்கலாம்.

  * இணையதளத்தின், பக்கங்களை பதிவேற்ற பயன்படும் ,  எஃப்டிபி அல்லது நிர்வாக பக்கம் (அட்மின் பக்கம்) அணுகலை சுருக்கலாம். அதாவது, குறிப்பிட்ட கணினிகளை தவிர மற்ற கணினிகளில் இருந்து அணுக இயலாதவாறு அமைப்புகளை மாற்ற வேண்டும். அவ்வாறு வெளியிலிருந்து அணுக முயலும் போது, அதனை இணைய நிர்வாகிக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தும் வகையில் நிரல் எழுதலாம்.

  (குறிப்பு: நாளேடு ஒன்றின் இணையதளத்தின் பழைய வடிவத்தில், செய்தியை பதிவிடும் பக்கத்தை எளிதாக அணுகும் வகையில் வைத்திருந்தார்கள். அதற்கு நுழைவே தேவையில்லை. இப்போது, மாற்றிவிட்டார்கள் என்பது வேறுத் தகவல்)

  * அடிக்கடி இணைய பார்வையாளர்களை கண்காணிக்க வேண்டும். எந்த ஐபியிலிருந்து வருகிறார்கள். எந்தெந்த பக்கங்கள் பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.


  இவைகளினால், ஹாக்கிங்கை தடுக்கலாம்.  சரி ஹாக்கிங் பற்றியெல்லாம் படிப்பு இருக்கிறது உங்களுக்கு தெரியுமா...?


  பயப்புள்ளைக இதயெல்லாம் படிச்சுப்புட்டா இந்த வேல செய்யுதுக.... ன்னு ஆச்சிரியப்படுகிறீர்களா..?

  உயர் படிப்புகளில்,  அவைக்குறித்த பாடங்கள் உள்ளன.

  குறிப்பாக எத்திகல் ஹாக்கிக் எனப்படும் நன்னெறி தகர்ப்பு சொல்லித்தரப்படுகிறது.

  இது எதற்காக என்றால், தீங்கு செய்யும் இணையதளங்கள், தீங்கு செய்வோரின் இணையதளங்களின் அரண் உடைத்து தீங்கை தடுப்பதற்காக தான்.

  இந்த வேலை அரசே செய்கிறது.

  இணையவெளி குற்றத்தடுப்பு காவல்துறையினர் பயன்படுத்துகிறார்கள்.


  ஆனால், இதனை தீங்கு நோக்கத்தோடு வெளியில் செய்வோரை இணையவெளி குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள்.


  அண்மையில்  நடந்த இணையதள தாக்குதல்/தகர்த்தல்/ஹாக்கிங்/அது/இது எல்லாம் யார் செய்தது என்பது தான் விழிப்பிதுங்கி நிற்கும் வினா..?

  அவை ஒரே கூட்டத்தால் தான் நிகழ்த்தப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் ஹாக்ஸர்ஸ் க்ரிவ் எனப்பெயரிட்டுக்கொண்டுள்ள அந்த கூட்டம் மிகத்தைரியமாக சவாலிட்டு பதிவு போட்டிருக்கிறார்கள்.


  இதுத் தொடர்பாக பெங்களூரிலிருந்து ஈஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், கைதானவர் உண்மையான குற்றவாளியல்லர்.

  ஆனால், இணையதளத்தின் நிர்வாகி பக்கத்தை அணுக அதிக முறை முயற்சித்தார் என்பது தான் குற்றம்.

  அதாவது, ஹாக் செய்ய முயற்சித்ததற்காக கைதாகியுள்ளார். விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடுவதாக கூறியிருக்கிறார்கள்.


  சரி.....

  நாம் இன்னும் இதுத்தொடர்பாக பேசலாம். (தொடரும்..)


  அதற்கு முன்னர் ஓர் அறிவுறுத்தல்....


  கணினி வல்லுநர்கள் / பொறியாளர்கள் அனைவரும் தங்களின் படிப்பின் ஓர் அங்கமாக கணினி நன்னெறிகளை அறிந்திருப்பீர்கள். அதில், கணினியை பிறர்க்கு தீங்கில்லாமல் பயன்படுத்துவது குறித்தும் அறிந்திருப்பீர்கள்.....
  இருந்தாலும், உங்களுக்கான ’கெத்’தை காண்பிக்க மற்றவர்களின் இயல்புநிலை அசைத்துப்பார்ப்பது தான் முறையா...?

  - வெ.யுவராஜ்   வணிகமொழியானது தமிழ்!

  தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...