ஈழம் : பொது வாக்கெடுப்பு நடத்த ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

2009 ஆம் ஆண்டில் தமிழீழத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையை மையப்படுத்தி ஓர் இயக்கம் உருவாக்க எண்ணி அதில் பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் என அனைவரையும் உள்ளடக்கும் நோக்கத்தில் உருவான அமைப்பு போர்க்குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள்.

தற்போது ஈழத்தில் தமிழர்கள் மத்தியில் தமிழீழம் தொடர்பாக ஐ.நா மன்றத்தில் நேரடி கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடத்த கோரியும், தமிழ்நாட்டிலும் அதற்கான முழு ஆதரவு உள்ளது என்பதை தெளிவுப்படுத்தியும் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளது.

மொத்தம் ஒரு கோடி கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா நாளை மே 16 அன்று மாலை 4 மணிக்கு சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே நடைப்பெற உள்ளது.

இதில், பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.தங்கள் ஊடகம் சார்பில் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்களை அனுப்பி செய்திகளை வெளியிட வேண்டுகிறோம்.
தொடக்க விழாவில் கலந்துக்கொண்டு கையொப்பமிட உள்ள தலைவர்கள்:


தோழர் நல்லகண்ணு, (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
திரு. பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய இயக்கம்)
திரு. வைகோ, (மதிமுக)
இயக்குனர் மணிவண்னன்,
திரு. வன்னியரசு,  (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
தோழர் கொளத்தூர் மணி, (பெரியார் திராவிடர் கழகம்)
தோழர் மணியரசன், (தமிழ் தேச பொதுவுடைமை கட்சி)
இயக்குனர் புகழேந்தி தங்கராசு,
திரு. பண்ருட்டி வேல்முருகன், (தமிழக வாழ்வுரிமை கட்சி)
திரு. அர்ஜூன் சம்பத், (இந்து மக்கள் கட்சி)

சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு. ஜவாஹிருல்லா, (மனிதநேய மக்கள் கட்சி)
திரு. மருத்துவர் கிருஷ்ணசாமி, (புதிய தமிழகம்)
திரு. தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை)
Post a Comment

Popular posts from this blog

கட்செவி அஞ்சல்

அறிவியல் தமிழ் களஞ்சியம்

உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன்