Posts

Showing posts from January, 2011

தமிழகத்தின் தலைவிதி

அண்மையில் ஒரு நடிகர் தனது பலத்தைகாட்ட மிகப்பெரிய தம்பட்டத்துடன் ஒரு மாநாட்டை கூட்டி இருந்தார்.
தாம் தான் அடுத்த முதல்வர், ஏற்கனவே தமிழகத்தை ஆண்டுவிட்ட 2 பெரிய திராவிட கட்சிகளை உடைத்தெறிந்து விட்டு வாருங்கள் என்று மக்களை அழைத்திருக்கும் அவர், தனது கூட்டணியை விவரிப்பதாக கூறி ஒட்டுமொத்த அரசியல் முகங்களை திரும்ப செய்தார்.
கூட்டணியை அவர் அறிவித்தாரோ இல்லையோ அல்லது சூட்சமமாக வெளிப்படுத்தினாரோ. அது ஒருபுறம் இருக்கட்டும்.
அந்தப்பொதுக்கூட்டத்தில், அந்த பெரு நடிகர் பேசிய பேச்சை கேட்கும் போதுதான் தமிழகத்தின் தலைவிதி எங்ஙனம் உள்ளது என்று நமக்கு புரிகிறது. தமிழக மக்கள் கூத்தாடிகளின் கூத்துக்கு மயங்கிக்கிடக்கிறார்கள் என்று எண்ணி இருப்பாரோ என்னவோ, தனது மோசமான ஒழுக்ககேடான நடத்தையை அங்கு அரங்கேற்றியுள்ளார் அவர். இதை கைத்தட்டி ஏற்றுக் கொண்டிருந்தது ஒருக் கூட்டம் என்பதுதான் வெட்கக்கேடு.
தன்னை தலைவராக, தமிழக மக்களை லஞ்ச லாவண்ய ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க வந்தவராக சொல்லிக்கொள்ளும் நடிகர், தான் யோக்கியராக, முன்மாதிரியாக மக்கள் நலனில் அக்கறைக்கொண்ட செயல்வாதியாக இருக்க வேண்டும். ஆனால், மது மயக்கத்தில், முன்னா…