25.10.11

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடு

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50-ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மான அவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்.

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும், முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

"மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித
உருவமுள்ள மிருகமே ஆவர்" என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி வைத்தத் தன்மைக்கு ஏற்பத் தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களைத் தமிழ்மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று அவற்றுக்கு அடிமையாகி, பின்பற்றித் தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை, விரதம், நோன்பு, உற்சவங்களாக, நல்ல நாள், தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிருஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையில் ஒரு அளவுக்கு தலைகீழான மாறுதல் எற்படும்படியான கல்வி அனுபவமும், ஞானமும் ஏற்பட்டிருந்தும் கூட இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும், சிறு அளவு ஞானமும், மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும், அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகமும், துரோகம், மோசத்தாலும், வாழவேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கி விட்டார்களேயானால் எப்படி யார் எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதைக் காதில் வாங்கக்கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதே போல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள் அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உட்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும்புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக்கூறு இவைகளில் நிபுணர்கள் உட்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கு அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமுமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக்காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும், கல்லுாரிகளும், பல்கலைக்கழகங்களும் நம் மக்களுக்கு இந்த இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக் கூட அறிவைக் கொடுக்கவில்லையென்றால், இக்கல்விக் கூடங்கள் மடமையையும், மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர, வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் பயிலும் மாணவர்களுக்கு எந்த விதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10-விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?

இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

* பூமி தட்டையா? உருண்டையா?

* தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?

* எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?

* சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ, தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?

* எங்கிருந்து தூக்குவது?

* கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?

* விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

* அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?

* பூமி மனித உருவா? மிருக உருவமா?

* மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம், இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் அசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதைத் திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்லுகிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத் துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், இந்த பார்ப்பனர்கள் வந்து பார்த்து "கங்கா ஸ்நானம் ஆயிற்றா" என்று கேட்பதும், நாம் ´ஆமாம்´ என்று சொல்லி கும்பிட்டு காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்லுவது?

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம் புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக்காலத்தில் நாம் ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

- பெரியார்

ஆதாரம்: [பெரியார் எழுதிய "இந்து மதப் பண்டிகைகள்" என்னும் நூலில் இருந்து.

11.9.11

நல்வழிகாட்டி - ஏழைகளின் கல்விக்கான இளைஞர்கள் கூட்டமைப்பு

நல் வழிகாட்டி - எதிர்கால கனவு என்பதை கூட கனவு காண முடியாத ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும், சமூகத்தில் வெளியுலகமே அறியாதவர்களை பன்னாட்டு பார்வைக்கு கொண்டு செல்லவும், ஏழைக்குழந்தைகளின் வாழ்க்கை வழிகாட்டியாய், இளைஞர்களை உள்ளடக்கி உஇயங்கி வரும் அறக்கட்டளை.....

உங்கள் பகுதியில், உங்களுக்கு தெரிந்த பகுதியில் கல்வி கற்க வறுமை தடையாக கொண்ட மாணவர்கள் உள்ளனரா... 
தேவைக்கு.../ உதவிக்கு... அழையுங்கள்.... 
9600579018 / 9578675904

http://www.nalvazhikatti.org/

23.8.11

அட முட்டாள் பய தமிழக அரசே....!

அட முட்டாள் பய தமிழக அரசே....!

தொல்லியியல், வானியல் நிபுணர்களை வைத்து, ஆராய்ந்து தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ன்னு இப்போ மாத்திட்டாங்களாம்.....!

அடேய்.... இத படிங்கய்யா முதல்ல... வரலாறு தெரிஞ்சிக்குங்க,...

http://thamizhthottam.blogspot.com/2008/12/blog-post_24.html


தமிழனை தமிழனா வாழ் விடமாட்டங்க போலிருக்கே... தமிழனுக்கு என்று ஒரு அடையாளமும். இல்லைங்கிற நிலை வரப்போகுது....

தமிழர்களே விழிப்பா இருங்க...!!

29.6.11

தமிழில் மொழிபெயர்ப்பு கருவி..

நண்பர்களே.. தமிழ் மொழி மட்டுமே தெரிந்துக்கொண்டு உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் தற்போது நாம் கடிதங்கள் எழுதலாம்.... அதேப்போன்று, பிற மொழிகளில் உள்ள கடிதத்தை தமிழுக்கு மாற்றி படிக்கலாம்.
ஆம். நிச்சயமாக மேற்சொன்னவாறு செய்ய முடியும் நம்மால்.
கூகுள் இணையதளம் வெறும் இணையதளங்களை தேடித்தரும் சேவையை மட்டும் செய்யாமல், உலகை மொழி பாகுபாடின்றி ஒன்றிணைக்க முயற்சி செய்திருக்கிறது.
தங்கள் தாய்மொழியிலேயே உலகின் பல்வேறு மொழிக்காரர்களுடன் உறவை மேம்படுத்த உதவும் வகையில் மொழி கருவிகளை நமக்கு படைத்திருக்கிறது கூகிள்.
குறிப்பாக தமிழில் உள்ள கருவிகள் என்று பார்த்தால்..
செய்திகள், மின்ன்ஞ்சல், தட்டச்சு கருவி, மொழிப்பெயர்ப்பு, தேடல், காணொளி, படங்கள், ஆவணம், என ஏராளமான சேவைகள் வழங்குகிறது
தற்போது தமிழுலகிற்கு கூகுள் வழங்கியுள்ள சேவையானது கூகுள் மொழிமாற்றி ஆகும். Google Translate.
இந்த கருவி முதற்கட்டமாக சோதனை அடிப்படையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சேவையை பெற நாம் http://translate.google.com/ என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இப்போது, கீழ்காணும் பக்கம் தோன்றும்.


இப்போது, (மூலம்) From என்பதில் மொழி மாற்றம் செய்ய வேண்டிய வாக்கியத்தின் மொழியையும், (பெறுநர்) TO என்பதில் மாற்ற வேண்டிய மொழியையும் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் மொழிப்பெயர் (Translate) என்ற பொத்தானை சொடுக்கினால் அருகில் மொழி பெயர்க்கப்பட்ட வாக்கியம் தோன்றும். 

இந்த வாக்கியங்களில் பிழைகள் தோன்றலாம். அதனை சரி செய்ய கூகுள் நமக்கு வசதிகளை செய்து தருகிறது...
அதன் மூலம், நாமே பிழை திருத்திவிடலாம்.
இதனால் அடுத்த முறை பிழை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
ஆனால், ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் ஓரளவு சரியாக மொழிபெயர்க்கப்படுகிறது.
இந்த வசதியை முழுமையாக பெற நமக்கு வெகு நாட்கள் எடுக்கலாம். ஆனால் நாமெல்லோரும் ஒத்துழைத்தால் விரைவில் முழுமையான மொழி பெயர்ப்பு கருவி உருவாகிவிடும்.
நாம் வெறும் வாக்கியங்களை வைத்து மொழி பெயர்க்காமல், ஒரு இணையதளத்தையோ அல்லது ஆவணத்தையோ மொழி பெயர்க்க முடியும்...
உதாரணமாக... உரைப்பெட்டியில் இணையதள முகவரியை இட்டால், அந்த தளம் எளிதாக மொழி மாற்றமாகிவிடும்..

கூடுதலாக மொழி மாற்றம் செய்யப்பட்ட வாக்கியங்கள் நமக்கு ஒலி வடிவிலும் கிடைக்கிறது.
பொதுவாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே கையாளும் நிலையிலிருந்து சாதாரணமாக வெறும் தாய்மொழியை தெரிந்தாலே போதும் கணினி கற்று, கையாளவும் செய்யலாம் என்ற நிலை தற்போது வந்துள்ளது.
இதுப்போன்ற மொழி கருவிகள் தகவல் தொழில்நுட்பம் மூலம் பெருகினால், தகவல் தொடர்பு எளிதாகிவிடும் என்பது திண்ணம்.

குறிப்புகள்:
1.       1. பொதுவாக ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்பு கருவி என்பது எளிமையானதாக அமைந்துவிடும். காரணம், வாக்கிய அமைப்புகளும், பொருளும் வேறுபடுமே ஒழிய எழுத்துகள் ஒரே மாதிரியானதாக தான்  இருக்கும்..
2.       கூகுள் இதுவரை 63 மொழிகளில் மொழி பெயர்க்க கூடிய அளவிற்கு சொல்வளம் கொண்டுள்ளது. அதில் தமிழ், இந்தி, உட்பட 6 இந்திய மொழிகளும் அடக்கம்.
3. கணினி துறையில் Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு) பிரிவின் கீழ் வரும் Natural Language Processing ( இயற்கை மொழி செயலாக்கம்) என்பது மனிதர்கள் பேசும் மொழியிலேயே கணினியானது சமிக்ஞைகளை ஏற்று செயல்படக்கூடிய தன்மை பற்றியதாகும். இந்த இயற்கை மொழி செயலாக்கத்தின் கீழ் வருவது தான் Machine Translation. இது குறித்த ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டுள்ளன. ஆனால், நமது கல்லூரிகள் மாணவர்களுக்கு Artificial Intelligence குறித்த போதிய அறிவுறுத்தலை தருவதில்லை. இந்த துறை சவாலானதும், தேவையானதுமாகும்.
பொறியியலில் ஆராய்ச்சிக்கான ஆர்வத்தை மாணவர்கள் பெற இதுப்போன்ற திட்டங்களை, திட்டப்பணிகளை எடுத்து செயல்படுத்தவேண்டும். 
கணினி தமிழ் துறை இதற்கான உதவிகளை அதிகரிக்க வேண்டும்.

27.6.11

இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்த்த நாள் இன்று.....

27-06-1974
இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்த்த நாள் இன்று.....

1974 மற்றும் 1976ம் ஆண்டில் இந்திய அரசு தனக்கு சொந்தமான கச்சதீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தது. இந்த ஒப்பந்தங்களில் மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் இலங்கை அரசிடம் அனுமதி பெறவேண்டியதில்லை என்பது விதியாகும். இந்த விதியை மீறி இலங்கை அரசு தமிழக மீனவர்களை சுட்டு கொன்று வருகிறது. 1960ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது என்று கூறி 2008ம் ஆண்டு அதிமுக தலைவர் செயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். தமிழக சட்டசபையில் சூன் 9, 2011 அன்று நடந்த சட்டபேரவை தீர்மானத்தில் தமிழக வருவாய் துறையையும் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

6.6.11

பாப்பாவான பாபாவின் Publicity Patriotism

நள்ளிரவில் கைதுக்கு பயந்து பாபா(?) ராம்தேவ் திடீரென மேடையிலிருந்து குதித்து சுடிதார் துப்பட்டா அணிந்து கொண்டு பாப்பாவாகி தப்பிக்க முயன்றுள்ளார்.


உண்மையான சத்தியாகிரகி பெண்கள் உடையில் ஒளிந்துக்கொண்டு ஓடமாட்டான் - ராம்தேவ்க்கு காங். பொதுச்செயலாளர் ஜனார்தனன் திவேதி தாக்கு

உடனே செருப்பால் அடிக்க போலி செய்தியாளன் முயற்சி.

இது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் என்னவென்றால்.

ஊழலை எதிர்த்து போராடும் ராம்தேவ் மீதான நடவடிக்கையை கண்டித்து பாஜக தர்ணா.

தர்ணாவில் சுஷ்மா சுவ்ராஜ் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.


இந்த ஒழுங்கீனமான நாட்டுப்பற்றை என்னவென்று சொல்வது.?

'Publicity Patriotism' செய்யும் ராம்தேவ், RSS & CO உள்ளிட்டோரின் செயற்பாடுகள் கூட ஒருவித அரசியல் ஆதாயம் தேடும் "நாட்டுப்பற்று ஊழல்"தான்.

31.5.11

அறிவு கெட்டவனுங்க...

அறிவு கெட்டவனங்க...

மாரியம்மன் கோயில்ல கூழ் ஊற்றும் திருவிழாங்கிற பேர்ல மடத்தனமான ஒரு வேலைய செஞ்சிட்டிருக்காங்க...

( பொதுவாக எல்லா காராமத்திலேயும் நடப்பதுதான் ) எங்க ஊர் திருவிழாவில் ஒரு பகுதியா சாமி ஆட வேண்டி சில பேரை வரிசையா நிற்க வச்சி பம்பை உடுக்கைன்னு அடிக்கிறாங்க...

ஒரு மணிநேரமா ஒன்றும் நடக்கலை...

பார்த்தான் ஒருத்தன் திடிர்ன்னு குதிச்சிக்கிட்டே வந்து 'தாம் தான் சாமிங்கிறான். ஊர்ல யாரோ செய்வினை வச்சதால தான் தன்னால (சாமி) எதுவும் செய்யமுடியலங்கிறான்...'

இப்படியே சாமி தன்னுடைய கையாலாகா தனத்துக்கு காரணம் சொல்லிக்கொண்டே இருக்கிறதே தவிர நாட்டு பிரச்சனை சமூக பிரச்சனைகளை பேசவுமில்லை அதை பற்றி யாரும் கேட்கிறதும் இல்லை. ஒருவழியா திருவிழா திருப்தி தானான்னு கேட்டு மலை ஏற்றிட்டாங்க...'

பாருங்க எவ்வளவு அறிவிலி தனமான போக்கு இது.

'மக்களின் நம்பிக்கை' என்பதற்காகவே இதனை ஏற்று கொள்ளும் மனோபாவம் ஏன் மாறமாட்டேங்குதுன்னு தான் தெரியல...

சிறுதெய்வ வழிபாட்டு முறையில் நடக்கும் இந்த செயற்பாடுகள் 'பண்பாட்டு' அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

கோடையை போக்கி மழை பொழிந்து விளை நிலங்கள் குளிர செய்து உழவு தொழிலை வளங்கான வேண்டி மாரி(மழை)அம்மனை வழிபடுகிறார்கள்.

கோடை முடிந்தால் காரி காலம் வரும். அப்போது தானாக மழை பெய்யும் என்கிற தகவல் அறியும் வாய்ப்பையும் நுட்பங்களையும் நாம் பெற்று இருக்கிற சூழல் தற்போது உள்ளது.
இந்நிலையில் அம்மனையும் அய்யனையும் நம்பி இருப்பதனால் ஆக்கம் எதுவும் நிகழ போவதில்லை.

சாமி ஆடுதல் என்பதை கூட நாம் ஆய்வு செய்தால் 'அந்நியன்','சந்திரமுகி' திரைப்படங்களில் வரும் கதை போல தான். உளவியல் சிக்கலாகதான் அதை எடுத்துகொள்ள வேண்டும்.
தம்மீது சாமி வரவேண்டும் என்கிற ஆவலோடு இருக்கும் ஒருவரின் மனதில் ஆழமாக இறைநம்பிக்கையும் ஊன்றி இருக்கும். ஏற்கனவே உள்ளூர் பிரச்சனைகளும், சாமி செய்தால் நல்லா இருக்கும் என்று தாம் எதிர்பார்த்து வைத்திருந்த விசயங்களும் பொங்கி எழுந்து தன்னிலைபிறழ்ந்த நிலைக்கு ஆளாக்கப்படுகிறார் சாமியாடி.
பின்னர் சாமியாக மாறுகிறார்.
அப்போது அவரது மூளையையும், நரம்புகளையும் ஒரே அலைவுகளில் வைத்துக்கொள்ளவும்,பிறழ்வு நிலையை உச்சக்கட்டத்தில் வைத்துக்கொள்ளவும் பம்பை உடுக்கை ஒலியை ஏற்றி இசைக்கிறார்கள்.

பிறகு, இயல்பு நிலைக்கு கொண்டுவர வெப்பத்தை கொடுக்கிறார்கள். (வாயில் எரியும் கற்பூரத்தை போடுவார்கள்)

28.5.11

சாதி ஒழிய...

சாதி ஒழிய ஒரே வழி திருமணம் மட்டும் தான்.

சாதி விட்டு பெண்ணையோ பையனையோ பார்த்து திருமணம் செய்தால் ஒரு சாதிக்குள்ளேயே சுழன்று இருந்த மரபணுக்களும் புத்துணர்வு பெற்று மனித இனத்தின் ஆயுளை நீட்டீக்கும்...

ஆம்.
கால காலமாக அகமணம் புரிவதால் மரபணு தேய்மானம் ஏற்பட்டுள்ளது.

X சாதிக்குள்ளேயே மரபணுக்கள் பல்கும்போது அது தேய்மானமாகி வலுவிழக்கிறது. ஆனால் Yசாதிகாரங்களோட சம்பந்தம் பேசிட்டோம்னு வச்சிகுங்க அந்த ரியாக்ஷன், Zசாதி ஆகிடும். அப்புறம் மரபணு வீக் ஆகாது.

நம்மாளுங்க சாதியால வெட்டிக்கிட்டு சாகிறது இல்லாம
மரபணு தேய்ந்து புதுபுது நோயால சாகனுமா?

அதனால காதலுக்கு மரியாதை கொடுங்க...

சாதி ஒழிஞ்சிடும். கூடவே மனித இனம் நீண்ட காலம் வாழும்.

26.5.11

ரஜினி : ???

ரஜினி சார் நல்லா இருக்காருங்களா?
பாவம் யார் பெத்த புள்ளையோ?
நாட்டுக்கு அப்படி என்ன பண்ணீட்டார்ன்னு தெரியல...
ஜனங்க கோயில் கோயிலா போய் உருண்டு புரள்றாங்க...
தீ மிதிக்கிறாங்க...
லதா மேடம் தாலி பாக்கியம் கெட்டி பெற பொம்பளைங்க பால்குடம் ஏந்தி தொடர் வழிபாடு செய்றாங்க...

ரஜினி சார் நாட்டுக்காக ஏதோ செஞ்சிருக்காருங்க...

நான்தான் வரலாறு சரியா படிக்கல போலிருக்கு...
நான் நினைக்கிறேன் சுதந்திரம் வாங்கி கொடுத்திருப்பாரோ...
மக்களுக்காக போராட்டம் நடத்தியிருப்பாரோ..

ச்சே...
எத்தனையாவது வகுப்பு வரலாற்று புத்தகத்துல போட்டிருக்காங்களான்னு தெரியலையே...
ஒரு வேளை சமச்சீர் கல்வியில இருக்கும்ன்னு நினைக்கிறேன்

நல்லவங்களுக்கு தான் சோதனை வரும் போலிருக்கு...

ரஜினி சார் பற்றி கூட தெரிஞ்சிக்காம இருக்கேன்.

12.1.11

தமிழகத்தின் தலைவிதி

அண்மையில் ஒரு நடிகர் தனது பலத்தைகாட்ட மிகப்பெரிய தம்பட்டத்துடன் ஒரு மாநாட்டை கூட்டி இருந்தார்.

தாம் தான் அடுத்த முதல்வர், ஏற்கனவே தமிழகத்தை ஆண்டுவிட்ட 2 பெரிய திராவிட கட்சிகளை உடைத்தெறிந்து விட்டு வாருங்கள் என்று மக்களை அழைத்திருக்கும் அவர், தனது கூட்டணியை விவரிப்பதாக கூறி ஒட்டுமொத்த அரசியல் முகங்களை திரும்ப செய்தார்.

கூட்டணியை அவர் அறிவித்தாரோ இல்லையோ அல்லது சூட்சமமாக வெளிப்படுத்தினாரோ. அது ஒருபுறம் இருக்கட்டும்.

அந்தப்பொதுக்கூட்டத்தில், அந்த பெரு நடிகர் பேசிய பேச்சை கேட்கும் போதுதான் தமிழகத்தின் தலைவிதி எங்ஙனம் உள்ளது என்று நமக்கு புரிகிறது.
தமிழக மக்கள் கூத்தாடிகளின் கூத்துக்கு மயங்கிக்கிடக்கிறார்கள் என்று எண்ணி இருப்பாரோ என்னவோ, தனது மோசமான ஒழுக்ககேடான நடத்தையை அங்கு அரங்கேற்றியுள்ளார் அவர். இதை கைத்தட்டி ஏற்றுக் கொண்டிருந்தது ஒருக் கூட்டம் என்பதுதான் வெட்கக்கேடு.

தன்னை தலைவராக, தமிழக மக்களை லஞ்ச லாவண்ய ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க வந்தவராக சொல்லிக்கொள்ளும் நடிகர், தான் யோக்கியராக, முன்மாதிரியாக மக்கள் நலனில் அக்கறைக்கொண்ட செயல்வாதியாக இருக்க வேண்டும். ஆனால், மது மயக்கத்தில், முன்னால் இருக்கும் மக்களெல்லாம் அறிவிலிகளாக , கொச்சைப்படுத்தும் அளவிற்கு தெளிவில்லாத போதை முனகலில் பேசிய அந்த நடிகர் வெறும் ’நடிகர்’ தான் என்பது மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக நம் மக்கள் சினிமா எனும் கவர்ச்சியில் மயங்கிக்கிடக்கிறார்கள்.
சினிமா எனும் தளம் கலையாக நிற்க வேண்டியதிலிருந்து, தடம்புரண்டு, பாலியல் ஆபாசம் என்கிறவற்றை முதன்மை முழக்கமாக முழங்கிவருகிறது.
பெண்ணை ஒரு கவர்ச்சி எல்லைக்குள் தள்ளி, நுகர்வு கலாச்சாரத்திற்கு உட்படுத்தி, சதை வியாபாரம் செய்கிறது. நாளடைவில் இதுவே சினிமா கலாச்சாரமாகிவிட்ட நிலையில் இளைய சமூகத்தை உணர்வு அடிமைகளாக மாற்றிவிட்டது என்றால் அதுதான் உண்மை.

தமிழக இளைஞர்களை அறிவாளிகளாக, அறிவியலாளர்களாக தொழிலதிபர்களாக பொறுபாளிகளாக மாற்றுகிற, ஊக்குவிக்கும் ஊடக செயற்பாடுகள் இங்கு என்ன இருக்கிறது?

உணர்வு தூண்டல் என்கிற நிலையில் இருந்து பயணிக்கும் சினிமாவால் தமிழகத்தின் இளைய சமூகத்தின் எதிர்காலம் குறித்து எங்ஙனம் அக்கறை கொள்ள முடியும்  என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
சுயநலங்களும், வன்மமும், பொருள் நோக்கிய பயணமுமாய் செல்லும் சமூக நிலை மனித உறவுகளை சிதைக்கும் என்பதில் அய்யமில்லை.

சமூகத்தில் போலிகளுக்குதான் மதிப்பீடுகள் கூடுகின்றன. 
நடிகர், நடிகைகளை மதிக்கும் பெருமைக்கொள்ளும் நிலைதான் ஓங்கியுள்ளதே தவிர அறிவிச்சார் வளங்கொண்ட மனிதர்களை போற்றுவதற்கில்லை.
வெறும் கவர்ச்சிக்கு அடிமைப்பட்டு கிடக்கும் நம்மக்கள் , முன்னர் நாம் கூறிய அந்த பெரிய நடிகரின் பின்னால் செல்வதனால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றுதான் கூற வேண்டும்.

இவர்கள் மது, புகை, உள்ளிட்ட பழக்கங்களுக்கு அப்பாற்பட்டு  நின்று வழிகாட்டுபவர்களாக இருந்தால், இவர்கள் பின்னால் செல்வதை வரவேற்கலாம்.
ஆனால், சமூக நலன், கலாசாரம், இவைகளை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாது, ஆபாசம், கட்டுக்கடங்கா வன்முறைகளுக்கு துணை போகும் இவர்களுக்கு முதல்வர் பதவி, உயிர்கொடுக்க ரசிகர்கள் கூட்டம் என்றெல்லாம் நினைக்கும்போது............

ஒரு கடைக்கோடி நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், அங்கீகாரம்  உள்ளிட்டவை விவசாயிகளுக்கும், உழைக்கும் பாட்டாளிகளுக்கும் கிடைப்பதில்லை.

தமிழர்கள் எவ்வளவோ படித்து, உயர்நிலையில் இருந்தாலும் அரசியலையும், நாட்டினையும், சினிமாவையும் பிரித்துப்பார்த்தறியாதவர்களாக உள்ளார்கள் என்பதுதான் வேதனைக்குரியது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கும் இந்த சூழலில் ஊடகங்களின் பெருக்கமும், அதன் தாக்கமும் வேகமெடுத்துள்ளது.
ஆனால், அறிவார்த்தமான பொழுதுப்போக்கிற்கு அதில் ஒரு இடம்                 கூட இல்லை என்பதுதான் வேதனை.

சினிமாவின் பிரதிகளாக இருபத்திநான்கு மணிநேரமும், வீட்டிற்குள்ளேயே வந்து சீரழித்துக்கொண்டிருக்கிறது பெரும்பாலான ஊடகங்கள்.
இரண்டொரு நாளில் தமிழர் திருநாள் உலகமெங்கும் கொண்டாடப்படவுள்ளது.

இதற்காக ஊடகங்கள் வரிந்துக்கட்டிக்கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்துள்ளன. இந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் இடம் பிடித்து இருப்பது, தமிழ் பண்பாடும், தமிழர் வாழ்வு நெறியும் அல்ல, நடிகை, நடிகர்களின் களியாட்டங்களும், இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறைகளும் தான்.
நமது இளைய தலைமுறையின் சிந்தனைமுறைகளையும், கண்ணோட்டங்களையும் மாற்றும் ஊடகங்களாக தான் இன்றைய காட்சி ஊடகங்கள் உள்ளன.

இதுமட்டுமல்லாது நம்மை வெறும் வேடிக்கைப்பார்க்கும்  சமூகமாக மாற்றியமைத்துள்ளன என்பது தான் வெட்கம். ஒருவன் இன்னொருவனை அடிப்பதையும், தாக்குவதையும் ஏன் சமயத்தில் கொல்லுவதையும் வெறுமனே பார்த்து ரசிக்க கூடியவர்களாக உருவாக்கி விட்ட அவ்வூடகங்களால் நேரில் அந்நிகழ்வுகள் நடந்தாலும், வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாகவே ஊக்கிவித்துள்ளன என்பது தான் காணும் உண்மை.
இதற்கெல்லாம் தீர்வை காண நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

நமது சிந்தனையையும், அறிவாற்றலை ஊக்குவிக்கும் ஊடகத்தையும், காட்சியாக்கத்தையும் நாம் பெறவெண்டும். அறிவுசார் உழைப்பாளிகளையும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பாட்டாளிகளையும் முன்னிறுத்தப்பட வேண்டும். அப்போது தான் நமது தமிழகம் அனைத்திலும் ஓங்கி நிற்கும்.

இனாம்களுக்கு அடிமைப்பட்டு போவதும், நமக்கென்ன என்று வேடிக்கை பார்க்கும் சமூகமாக நம்மை மாற்றியுள்ள நிலையும் அகலவும், அரசியல் தெளிவும், அறிவாற்றலும் பெருக வேண்டும். 
ஆட்சியாளர்களும், அவர்களை ஆட்சியில் ஏற்றியிருக்கும் மக்களும் தான் இதற்கான தீர்வுகாண வேண்டும்.

ஒரு தலைமைக்குள் அடங்கிப்போகும் உணர்வை வளர்க்கும் தற்போதைய அரசியல் கட்சிகள் மக்களுக்கான தேவைகளை அவர்களே தீர்மானித்துக்கொள்ளும் நிலையை மாற்றி, மக்களின் பிரதிநிதிகளாகவே செயல்படக்கூடிய நிலைக்கு மாற்றியமைக்கக் கூடிய சிந்தனை முறைக்குள் மக்கள் தயாராக வேண்டும்.

-  வெ.யுவராஜ், செய்தி ஆசிரியர், தமிழன் தொலைக்காட்சி

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...