Posts

Showing posts from 2010

புறக்கணிப்போம் தீபாவளியை!

புறக்கணிப்போம் தீபாவளியை! பார்ப்பன-பனியா-மார்வாடி-முல்தானி கூட்டுக்கொள்ளையை முறியடிப்போம்!
என்ற தலைப்பில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இலட்சக்கணக்கில் துண்டறிக்கை அச்சிடப்பட்டுள்ளது. அந்த இருவண்ண இரண்டுபக்கத் துண்டறிக்கையின்  மாதிரியை இத்துடன் இணைத்துள்ளோம். துண்டறிக்கை வேண்டுவோர் ஆயிரம் துண்டறிக்கைகளுக்கு 400 ருபாய் - 1000 / 400( அனுப்பும் செலவு உட்பட ) என்ற அளவிற்கு தொகையை விரைந்து அனுப்பி துண்டறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளவும்.  தொகை செலுத்த வேண்டிய முறை, துண்டறிக்கை பெறும் வழிகள் குறித்து அறிய
திண்டுக்கல் இராவணன் 9786889325 
சென்னை சுகுமார் 9962934373
கோபி அர்ச்சுனன்  9788092096
திருச்சி புதியவன் 9842806098
சேலம் கோகுலக்கண்ணன் 9787707197
ஆகியோரின் எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

துண்டறிக்கை மாதிரி

சரஸ்வதி பூசை -ஆயுத பூசை தேவையா?

நன்றி:  http://thamizhoviya.blogspot.com/2010/10/blog-post_7788.html
சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி , அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி , கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக்கொண்டே , அவர்கள் படித்துப்பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத "மக்குகள்" என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் , அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு , அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப் பட்டு அவளைப் புணர அழைக்கையில் , அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும், உடனே பிரம்மன் தானும் ஒரு ஆண் மா…

உலகின் முதல் இணையப்பெயரின் வெள்ளி விழா !!!

200,000,000 க்கும் மேற்பட்ட இணைப்பெயர்கள் இன்று உள்ள நிலையில் உலகின் முதல்ம் இணையப்பெயர் எதுவாக இருக்கும் , யார் அதை பதிவு செய்திருப்பார்கள் என்ற கேள்வி நம்முள் எழும்.. அல்லது எழுந்திருக்கும்.


1985 மார்ச்சு 15ம் நாள் - உலகின் முதலாவது இணையப் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.

DNS எனப்படும்  இணையப்பெயர் வழங்கல் சேவை  1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
பின்னர் 1985ல் .com , .org, .edu, .gov, .mil, ,ccTLD உள்ளிட்ட முதல் மட்ட இணைப்பெயர் நீட்சிகள் நிர்ணயிக்கப்பட்டது.

முதல் .com , symbolics.com, பதிவு செய்த நாள் மார்சு 15,1985 ஆகும்

முதல் .edu , cmu.edu,purdue.edu,rice.edu,ecla.edu, பதிவு செய்த நாள் ஏப்ரல்,1985 ஆகும்
முதல் .gov , css.gov, பதிவு செய்த நாள் சூன்,1985 ஆகும்
முதல் .org , mitre.org, பதிவு செய்த நாள் சூலை 15,1985 ஆகும்


முதல் 100 பெயர்கள்...

SYMBOLICS.COM
BBN.COM
THINK.COM
MCC.COM
DEC.COM
NORTHROP.COM
XEROX.COM
SRI.COM
HP.COM
BELLCORE.COM
IBM.COM
SUN.COM
INTEL.COM
TI.COM
ATT.COM
GMR.COM
TEK.COM
FMC.COM
UB.COM
BELL-ATL.COM
GE.COM
GREBYN.COM
ISC.COM
NSC.COM
STARGATE.COM
BOEING.COM
ITCORP.C…

தமிழ் இணையப் பயிலரங்கம்

தமிழ் இணையப் பயிலரங்கம், 
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
சனவரி,30,2010

சிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.
அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.
தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் தமிழியல் துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்குரிய வாய்ப்புகளைத் தமிழியல் துறைத்தலைவரும், புகழ்பெற்ற பேராசிரியருமாகிய முனைவர் பழ.முத்து வீரப்பன் அவர்கள் உருவாக்கினார்.
அவர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப  எதிர்வரும்  சனவரி30, காரி (சனிக்) கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலரங்கம் நடைபெறுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் டாக்டர் ம.இராமநாதன் அவர்கள் பயிலரங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரைக்க உள்ளார். பேராசிரியர் பா.பழனியப்பன்(முதன்மையர்,பொறியியல்புலம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்),பேராசிரியர் வ.செயதேவன்,(சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரைக்க உள்ளனர்.
முனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் …

"புதிய தலைமுறை “ இதழில் தமிழுக்கான கூகுள் IME பற்றிய கட்டுரை

இந்த வார (1/1/10) "புதிய தலைமுறை “ இதழில் தமிழுக்கான  கூகுள்  IME பற்றிய எமது கட்டுரை வெளிவந்துள்ளது.
அதனை வாங்கிப் படிக்கவும்.

 http://thamizhthottam.blogspot.com/2009/12/blog-post.html


ஆசிரியர் மாலன் அவர்களுக்கும் மற்றும் இதழ் குழுவினருக்கும் எமது  நன்றி