22.12.09

கற்போம்கணினி: நமது கணினியில் மற்றொருவர் கணினியை திறப்பது எப்படி?

அலுவலகமோ, உள்வலையமைப்புக்கொண்ட பணிச்சூழலிலோ உள்வலையமைப்பில் இருக்கும் கணினிகளை இருந்த இடத்தில் இருந்தே அணுக முடியும். அவ்வாறு, உள் வலையமைப்பில்(Local Area Network)இணைக்கப்பட்டிருக்கும்  கணினிகளில் , ஒரு கணினியை இன்னொரு கணினித்திரையில் பார்ப்பதற்கு விண்டோசு எக்சுபி வசதிகளை வழங்குகிறது.
இதன் மூலம் ஒரு நிறுவனத்தின் கணினிகளில் உள்ள பயன்பாடுகளின் சிக்கல்களை, ஐயங்களை  ஒருவர் தனது கணினியிலிருந்து அந்த கணினியை அணுகி அச்சிக்கல்களை சரி செய்ய முடியும்.
அவ்வாறு செய்வதற்கான வழி முறைகளை இங்கே பார்ப்போம்.


முதலில் உங்கள் கணினி அலுவலக உள்வலையமைப்பில்(LAN) இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

மேலும், தொடர்புக்கொள்ள இருக்கும் 2 கணினிகளின் அமைப்புகளில் கீழ்காணுபவை சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

1.கணினிகள் ஒன்றோடொன்று தொலைவில் இருந்து தொடர்புக்கொள்வதில் இணக்கம் கொள்ளுதல். My Computerல் வலது சொடுக்கம் செய்து, பின்னர் அதில் Properties ஐ சொடுக்க வேண்டும். இப்போது திரையில் தோன்றும் சாளரத்தில் Remote எனும் கீற்றை தேர்ந்தெடுத்து, Remote Desktop என்பதின் கீழ் உள்ள, Allow users to connect remotely to this computer எனும் தேர்வுப்பெட்டியை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

2.கணினிகளின் இணைய எண்ணை(IP Address) குறிப்பெடுத்துக்கொள்ளுதல்

இணைய எண்ணை (IP) கண்டறியும் முறை:
1. Start-> Run ஐ சொடுக்கிக்கொள்ளவும்.

2. இப்போது வரும் சாளரத்தில் cmd என்று தட்டச்சு செய்து, Ok அழுத்தவும்.
3. இப்போது வரும் திரையில் ipconfig தட்ட்ச்சு செய்து, Enter அழுத்தவும். இப்போது IP எண் தோன்றும். அதை குறித்துக்கொள்ளவும்.

கணினியை இணைக்கும் முறை:
இப்போது, Start->All Programs->Accessories->RemoteDesktopConnection
சொடுக்கவும்.

ஒரு சாளரம் தோன்றும். அதில் , தொடர்புக்கொள்ள வேண்டிய கணினியின் இணைய எண் (IP) குறிப்பிடவும்.பின்னர் connect என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இப்போது
அந்த கணினியின் தொடக்க திரை தோன்றும். அதில் புகுச்சொல்,கடவுச்சொல் கொடுத்து உள் நுழைய வேண்டும்.

இவ்வாறு உள் நுழையும்போது, தொடர்புக்கொள்ள இருக்கும் கணினியின்  நடப்பு திரை பூட்டப்படும்.
அதாவது அதில் நாம் தொடர்ந்து ஒரு நேரத்தில் 2 இடத்திலும் பணி செய்ய இயலாது.

அதேப்போல், அணுகக் கூடிய கணினிக்கு நுழைவு புகுச்சொல்,கடவுச்சொல் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த இயக்கம் செயல்ப்படுத்த முடியும்.


இவ்வாறு செய்து, கணினிகளை தொலைவில் இருந்துக்கொண்டு இயக்கலாம்.

இத்தொழில்நுட்பம்,  அலுவலகங்களில் தொழில்நுட்ப உதவிகளுக்கு பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில் ஒரு கணினியிலிருந்து 2 கணினிகளை பயன்படுத்தி பணி செய்வதற்கான சூழலில் பயபடுத்தலாம்.

முயற்சி செய்துப்பாருங்கள்.

குறிப்பு: மேலுள்ள படங்கள் பெரிதாக பார்க்க அதன் மீது சொடுக்கி பார்க்கவும்.3 comments:

தகடூர் கோபி(Gopi) said...

நல்ல விவரமான இடுகை.

விண்டோஸ் எக்ஸ்பி தவிர்த்த மற்ற இயங்குதளங்களிலும் இது போல மற்ற கணினியை திறக்கப் பயன்படும் ரியல் விஎன்சி போன்ற மென்பொருட்கள் பற்றியும் எழுதுங்களேன்.

புதுப்பாலம் said...

Team Viewer மென்பொருள் கிடைக்கிறதே. அதுவும் உதவும்.

=இஸ்மாயில் கனி

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

நல்ல முயற்சி.... வாழ்த்துக்கள்.

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...