மீனா - பிரசன்ட் மிஸ்
ரோஷ்னா - பிரசன்ட் மிஸ்
புனிதா - பிரசன்ட் மிஸ்
புனிதா ஆர் யூ நியூ அட்மிஷன் ? எஸ் மிஸ்
உனக்கு செகண்ட் லாங்வேஜ் தமிழ்தானே, புனிதா ?
நோ! டமில்...? நோ மிஸ் - ஐ கேவ் டேக்கன் ப்ரெஞ்ச்
இஸ் இட்? இன் வாட் லாங்வேஜ் டூ யூ ஸ்பீக் வித் யுவர் பேரண்ட்ஸ்?
இன் இங்கிலீஷ் மிஸ்.
வித் யுவர் கிராண்ட் பேரண்ட்ஸ்?
இன் இங்கிலிஷ் ஒன்லி மிஸ்.
தென் ஹூ ஸ்பீக்ஸ் இன் டமில் அட் ஹோம்?
மை சர்வண்ட் ஸ்பீக்ஸ் இன் டமில் (எங்கள் வீட்டு வேலைக்காரி மட்டும் தமிழில் பேசுகிறார்)
இஸ் நாட் டமில் யுவர் மதர் டங் ?
மை மதர் டங் இஸ் டமில் ஒன்லி ! பட் அட் ஹோம் ஒன்லி வித் மை சர்வன்ட் ஐ ஸ்பீக் இன் டமில்.
தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை மாநகரில் ஒரு மத்திய அரசுப் பள்ளியில்
காதாரக் கேட்ட நிகழ்ச்சி இது.
தமிழ் மிகவும் பண்பட்ட மொழி - என்றார் மாக்சுமுல்லர்
தமிழ் வேறு எந்த மொழிக்கும் தாழ்ந்த மொழியன்று என்றார் போப்,
தமிழ் நிறைந்து, தெளிந்து, ஒழுங்காய் வளர்ந்துள்ள மொழிகள் எல்லாவற்றுள்ளும் தலை சிறந்த ஒரு மொழி என்றார் டெய்லர்.
தமிழ் பண்டையது. சிறப்பு உடையது. உயர்வடைந்தது. விரும்பினால் வடமொழி உதவியின்றித் தனித்தியங்க வல்லது - என்றார் கால்டுவெல்
எண்ணுவதற்கும் பேசுவதற்கும் வேறு எந்த ஐரோப்பிய மொழியைவிடச் சிறந்த மொழி தமிழ் மொழி என்றார் விட்டினி.
இவ்வாறு தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி மேனாட்டுப் பேரறிஞர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
தமிழால் முடியும் - ஆனால், தமிழர்களால் முடிவதில்லையே அது ஏன்? சற்றே சிந்திப்பீர் !
நன்றி: தமிழ் இலெமூரியா இதழ்
தமிழ் பெயர்கள்:
http://web.archive.org/web/20071213202034/www.nithiththurai.com/name/index.html
http://www.tamilcc.org/thamizham/ebooks/3/277/277.pdf
http://www.thamizham.net/pdffiles/multiname01.pdf
http://www.tamilcc.org/thamizham/ebooks/4/391/391.pdf
http://sempulam.com/files/pdf/pure-tamil-name.pdf
தமிழ்ச்சொற்கள்:
http://www.tamilcc.org/thamizham/ebooks/5/450/450.pdf
Subscribe to:
Post Comments (Atom)
வணிகமொழியானது தமிழ்!
தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...

-
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...
-
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...
-
புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...

2 comments:
சிந்திக்க வைக்கும் இடுகை!
சில தலைமுறைகளாகவே தமிழன் டமிலனாக மாறிவருகிறான் நண்பரே..
நாம் நமது நண்பர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவை அனுப்பி,
முதலில் ஒழுங்காகத் தமிழ் பேசுவோம்.
தினம் ஒரு திருக்குறள் படிப்போம், வாய் விட்டு.
Post a Comment