21.12.09

தமிழ் கணினி: கூகிள் வழங்கும் எளிமையான தமிழ் தட்டச்சுவான்

கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் தமிழை நமது கணினியில் தட்டச்சு செய்வதற்கு எளிமையான கருவியை கூகிள் வழங்கி இருக்கிறது.அதன் பெயர் Google Transliteration IME
இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் கூகிள் தனது தரவுத்தளத்திலிருந்து ஏராளமான சொற்களை வழங்குகிறது. இதனால் தமிழை ஆங்கில முறையில் தட்டச்சு செய்யும் போதே உதவி சொற்கள் வந்துவிடுகின்றன. இதனால் நாம் முழுமையாக தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமுமில்லை.

இந்த மென்பொருள் உள்ள இணைப்பு....

http://www.google.com/ime/transliteration/

இதில் தமிழ் என்பதை தேர்ந்தெடுத்து, பதிவிறக்கிகொண்டு, கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

பின்னர்,
Windows XP இயங்குதள பயனாளர்கள் தங்கள் கணினியில் பயன்படுத்தும் முறை

1. கணினியில் Control Panel ல் Regional and Language Options ல் Languages கீற்றை( tab ) தேர்ந்தெடுக்கவும்.Supplement Language Support ன் கீழ் Install Files for complex Script என்பது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தேர்வு செய்து, விண்டோசுக்கான நிறுவல் குறுவட்டை செலுத்தி நிறுவ வேண்டும்.

அதில் Text services and input languages (Details) என்பதை சொடுக்கி, Advanced கீற்றை( tab ) தேர்ந்தெடுக்கவும்.


 
2.அதில் System Configuration ன் கீழ் Turn off advanced text services எனும் தேர்வு பெட்டி தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க வேண்டும். அதனை உறுதி செய்துக் கொள்ளுங்கள்

3. மேலே Settings எனும் கீற்றை( tab ) தேர்ந்தெடுக்கவும்.


4. இப்போது, Preferences என்பதன் கீழுயுள்ள Language Bar ஆழியை சொடுக்கவும்.
5. இதில் Show the Language bar on the desktop எனும் தேர்வுப்பெட்டியை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் OK யை சொடுக்கவும்.
6. அதேப்போல் , Installed Services ன் கீழ் உள்ளிட்டு மொழி தேர்வில் தமிழை இணைக்க வேண்டும். அதற்காக, அதன் அருகில் உள்ள Add எனும் ஆழியை சொடுக்க வேண்டும். இப்போது வரும் சாளரத்தில் Input Languages: என்பதில் தமிழை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் Keyboard layout/IME: ல் Google Tamil Inputஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

7. இப்போது OK ஆழியை சொடுக்கி அனைத்தையும் முடித்துக்கொளவும்.

இப்போது பணிப்பட்டையில் EN அல்லது TA என்று சிறு சின்னம் இடம்பெற்றிருக்கும்.அதில் தேர்ந்தெடுத்துக்கொண்டு தட்டச்சு செய்யலாம்.எடுத்துக்காட்டாக. TA என்பதை தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் திரையில் நிலைக்கருவி தோன்றும் (படம்1)


நாம் தட்டச்சு செய்தால் அங்கு குறிப்புடன் கூடிய  பெட்டி தோன்றுவதை காணலாம்.(படம்2)

விசைப்பலகை உதவிக்கு வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்தியும் தட்டச்சு செய்யலாம்.(படம்3)என்ன அற்புதமான கூகிளின் படைப்பு பாருங்கள். நாம் கணினியில் தமிழை பயன்படுத்துவதில் இனி தடை ஏதுமில்லை. அதற்கான தீர்வுகள் உடனுக்குடன்  வந்துக்கொண்டிருக்கின்றன. அதனால், தமிழை பயன்படுத்துவதை ஊக்குவிப்போம்.


13 comments:

சிறில் அலெக்ஸ் said...

Great News! Thanks for sharing!. Keep doing the wonderful job.

தேவன் said...

Thank you Sir

தேவன் said...

தமிழ் வளர்ப்போம்! தமிழனாவோம் !! அருமை அருமை தோழரே மிக்க நன்றி உங்களுக்கும் கூகுலிற்கும் !!

Hai said...

on 6 th step in input languages in Keyboard layout/IME:there is no Google Tamil Input in my system what should i do?

Yuvaraj said...

http://www.google.com/ime/transliteration/

இதில் தமிழ் என்பதை தேர்ந்தெடுத்து, பதிவிறக்கிகொண்டு, கணினியில் நிறுவ வேண்டும்.
அதன் பின்னர்தான் நான் கொடுத்துள்ள வழிகாட்டியை பின்பற்ற வேண்டும்

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள குறிப்பு நண்பரே..

Suresh Kumar said...

அருமையான தமிழ் தோட்டம் !!

"கருவெளி" said...

மிக்க நன்றி. மிகவும் உதவியாக உள்ளது.

sampath said...

அருமை அருமை தோழர்....

மிக்க நன்றி

கணேஷ் said...

sir, after full process when i click the ok button this msg appear that windows could not load the tamil key board like that please help me.


then thank you for your help this is realy good thing for me.good jos please cont. for tamil

Yuvaraj said...

தங்கள் கணினியில் தமிழுக்குரிய ஒருங்குறி வசதிகள் தன்னியல்பாக நிறுவாமல் இருக்கலாம்.

இந்த கட்டுரையின் 2வது படம் விளக்கும் சிவப்புக்குறி வட்டத்தில் supplemental language support ல் instaal file for complex script ஐ தேர்ந்தெடுக்கவும்.
அதனை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

இந்த கட்டுரை இந்தவார “புதிய தலைமுறை” இதழில் வெளிவந்துள்ளது. படிக்கவும்.

neyvelivichu.blogspot.com said...

Thanks for the information. i tried installing.. but i am not able to add the key board. I dont see tamil at all in the list.. any suggestions?

anbudan vichu

Yuvaraj said...

தங்கள் கணினியில் தமிழுக்குரிய ஒருங்குறி வசதிகள் தன்னியல்பாக நிறுவாமல் இருக்கலாம்.

இந்த கட்டுரையின் 2வது படம் விளக்கும் சிவப்புக்குறி வட்டத்தில் supplemental language support ல் instaal file for complex script ஐ தேர்ந்தெடுக்கவும்.
அதனை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

அதகான விளக்கத்தை இக்கட்டுரையிலேயே உள்ளது.

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...