25.12.09

எங்கேயோ கேட்ட குரல் !

மீனா - பிரசன்ட் மிஸ்
ரோஷ்னா - பிரசன்ட் மிஸ்
புனிதா - பிரசன்ட் மிஸ்
புனிதா ஆர் யூ நியூ அட்மிஷன் ? எஸ் மிஸ்
உனக்கு செகண்ட் லாங்வேஜ் தமிழ்தானே, புனிதா ?
நோ! டமில்...? நோ மிஸ் - ஐ கேவ் டேக்கன் ப்ரெஞ்ச்
இஸ் இட்? இன் வாட் லாங்வேஜ் டூ யூ ஸ்பீக் வித் யுவர் பேரண்ட்ஸ்?
இன் இங்கிலீஷ் மிஸ்.
வித் யுவர் கிராண்ட் பேரண்ட்ஸ்?
இன் இங்கிலிஷ் ஒன்லி மிஸ்.
தென் ஹூ ஸ்பீக்ஸ் இன் டமில் அட் ஹோம்?
மை சர்வண்ட் ஸ்பீக்ஸ் இன் டமில் (எங்கள் வீட்டு வேலைக்காரி மட்டும் தமிழில் பேசுகிறார்)
இஸ் நாட் டமில் யுவர் மதர் டங் ?
மை மதர் டங் இஸ் டமில் ஒன்லி ! பட் அட் ஹோம் ஒன்லி வித் மை சர்வன்ட் ஐ ஸ்பீக் இன் டமில்.
தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை மாநகரில் ஒரு மத்திய அரசுப் பள்ளியில்
காதாரக் கேட்ட நிகழ்ச்சி இது.

தமிழ் மிகவும் பண்பட்ட மொழி - என்றார் மாக்சுமுல்லர்
தமிழ் வேறு எந்த மொழிக்கும் தாழ்ந்த மொழியன்று என்றார் போப்,
தமிழ் நிறைந்து, தெளிந்து, ஒழுங்காய் வளர்ந்துள்ள மொழிகள் எல்லாவற்றுள்ளும் தலை சிறந்த ஒரு மொழி என்றார் டெய்லர்.
தமிழ் பண்டையது. சிறப்பு உடையது. உயர்வடைந்தது. விரும்பினால் வடமொழி உதவியின்றித் தனித்தியங்க வல்லது - என்றார் கால்டுவெல்
எண்ணுவதற்கும் பேசுவதற்கும் வேறு எந்த ஐரோப்பிய மொழியைவிடச் சிறந்த மொழி தமிழ் மொழி என்றார் விட்டினி.

இவ்வாறு தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி மேனாட்டுப் பேரறிஞர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

தமிழால் முடியும் - ஆனால், தமிழர்களால் முடிவதில்லையே அது ஏன்? சற்றே சிந்திப்பீர்
!

நன்றி:
தமிழ் இலெமூரியா இதழ்


தமிழ் பெயர்கள்:
http://web.archive.org/web/20071213202034/www.nithiththurai.com/name/index.html
http://www.tamilcc.org/thamizham/ebooks/3/277/277.pdf 
http://www.thamizham.net/pdffiles/multiname01.pdf
http://www.tamilcc.org/thamizham/ebooks/4/391/391.pdf
http://sempulam.com/files/pdf/pure-tamil-name.pdf
தமிழ்ச்சொற்கள்:
http://www.tamilcc.org/thamizham/ebooks/5/450/450.pdf
22.12.09

கற்போம்கணினி: நமது கணினியில் மற்றொருவர் கணினியை திறப்பது எப்படி?

அலுவலகமோ, உள்வலையமைப்புக்கொண்ட பணிச்சூழலிலோ உள்வலையமைப்பில் இருக்கும் கணினிகளை இருந்த இடத்தில் இருந்தே அணுக முடியும். அவ்வாறு, உள் வலையமைப்பில்(Local Area Network)இணைக்கப்பட்டிருக்கும்  கணினிகளில் , ஒரு கணினியை இன்னொரு கணினித்திரையில் பார்ப்பதற்கு விண்டோசு எக்சுபி வசதிகளை வழங்குகிறது.
இதன் மூலம் ஒரு நிறுவனத்தின் கணினிகளில் உள்ள பயன்பாடுகளின் சிக்கல்களை, ஐயங்களை  ஒருவர் தனது கணினியிலிருந்து அந்த கணினியை அணுகி அச்சிக்கல்களை சரி செய்ய முடியும்.
அவ்வாறு செய்வதற்கான வழி முறைகளை இங்கே பார்ப்போம்.


முதலில் உங்கள் கணினி அலுவலக உள்வலையமைப்பில்(LAN) இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

மேலும், தொடர்புக்கொள்ள இருக்கும் 2 கணினிகளின் அமைப்புகளில் கீழ்காணுபவை சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

1.கணினிகள் ஒன்றோடொன்று தொலைவில் இருந்து தொடர்புக்கொள்வதில் இணக்கம் கொள்ளுதல். My Computerல் வலது சொடுக்கம் செய்து, பின்னர் அதில் Properties ஐ சொடுக்க வேண்டும். இப்போது திரையில் தோன்றும் சாளரத்தில் Remote எனும் கீற்றை தேர்ந்தெடுத்து, Remote Desktop என்பதின் கீழ் உள்ள, Allow users to connect remotely to this computer எனும் தேர்வுப்பெட்டியை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

2.கணினிகளின் இணைய எண்ணை(IP Address) குறிப்பெடுத்துக்கொள்ளுதல்

இணைய எண்ணை (IP) கண்டறியும் முறை:
1. Start-> Run ஐ சொடுக்கிக்கொள்ளவும்.

2. இப்போது வரும் சாளரத்தில் cmd என்று தட்டச்சு செய்து, Ok அழுத்தவும்.
3. இப்போது வரும் திரையில் ipconfig தட்ட்ச்சு செய்து, Enter அழுத்தவும். இப்போது IP எண் தோன்றும். அதை குறித்துக்கொள்ளவும்.

கணினியை இணைக்கும் முறை:
இப்போது, Start->All Programs->Accessories->RemoteDesktopConnection
சொடுக்கவும்.

ஒரு சாளரம் தோன்றும். அதில் , தொடர்புக்கொள்ள வேண்டிய கணினியின் இணைய எண் (IP) குறிப்பிடவும்.பின்னர் connect என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இப்போது
அந்த கணினியின் தொடக்க திரை தோன்றும். அதில் புகுச்சொல்,கடவுச்சொல் கொடுத்து உள் நுழைய வேண்டும்.

இவ்வாறு உள் நுழையும்போது, தொடர்புக்கொள்ள இருக்கும் கணினியின்  நடப்பு திரை பூட்டப்படும்.
அதாவது அதில் நாம் தொடர்ந்து ஒரு நேரத்தில் 2 இடத்திலும் பணி செய்ய இயலாது.

அதேப்போல், அணுகக் கூடிய கணினிக்கு நுழைவு புகுச்சொல்,கடவுச்சொல் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த இயக்கம் செயல்ப்படுத்த முடியும்.


இவ்வாறு செய்து, கணினிகளை தொலைவில் இருந்துக்கொண்டு இயக்கலாம்.

இத்தொழில்நுட்பம்,  அலுவலகங்களில் தொழில்நுட்ப உதவிகளுக்கு பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில் ஒரு கணினியிலிருந்து 2 கணினிகளை பயன்படுத்தி பணி செய்வதற்கான சூழலில் பயபடுத்தலாம்.

முயற்சி செய்துப்பாருங்கள்.

குறிப்பு: மேலுள்ள படங்கள் பெரிதாக பார்க்க அதன் மீது சொடுக்கி பார்க்கவும்.காலாவதி நிலையில் செம்மொழி நிறுவன வலைத்தளம்

செம்மொழி மய்ய இணையத்தளம் காலாவதியாகி ஒருமாதமாகிறது
Ciil-classicaltamil.org domain name expired on Dec 01 2009 09:50PM.
தமிழ் மாநாடெல்லாம் நடக்க இருக்கிற இந்த நேரத்தில் தமிழ் செம்மொழி நிறுவன வலைத்தளம் இப்படி இயங்காமல் இருப்பது. துறை சார்ந்தவர்கள் கவனிக்காமல் இருப்பது வேதனைக்குரியது.


http://www.ciil.org/ Central Institute of Indian Languages ல் Past Projectsல் www.Ciil-classicaltamil.org இணையத்தளம் உள்ளது. அதில் உள்ள இணையத்தளங்களில் www.Ciil-classicaltamil.org மட்டும் புதிப்பிக்கப்படாமல் உள்ளதை அறிய முடிகிறது.
http://www.cict.in/
புதிய முகவரி அறியப்படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அதில் இருக்கும் இணைப்புகளும் பயன்பாடுகளும் சிறந்தவைகளாக இருக்கின்றன.


நம் ஏக்கமெல்லாம் தமிழ் வளர்ச்சியின் பேரால் குளறுபடிகள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதுவே.


தமிழ் வளர்ச்சியே! தமிழின வளர்ச்சி!!!

இன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இருக்கும் நாம் , அவ்வளர்ச்சியின்பால் மொழி, இனக்காப்பை வலுப்படுத்த வேண்டும். அனைத்தும் அறிந்த சமூகமாக தமிழினம் அமைய வேண்டும்.
வடக்கே(வட இந்தியா) இருப்பவர்களுக்கு அவர்தம் மொழிப்பற்றுதான் ஓங்கியிருக்கும். நம் மொழி குறித்த வளர்ச்சியில் நாம் தான் குரல் கொடுக்க வேண்டும்.

இணையதளம் புதுப்பிக்க முயற்சி செய்யுங்கள்தொடர்புடைய பழைய பதிவுகள்:
http://thamizhthottam.blogspot.com/2009/01/blog-post.html
http://thamizhthottam.blogspot.com/2009/01/blog-post_02.html21.12.09

தமிழ் கணினி: கூகிள் வழங்கும் எளிமையான தமிழ் தட்டச்சுவான்

கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் தமிழை நமது கணினியில் தட்டச்சு செய்வதற்கு எளிமையான கருவியை கூகிள் வழங்கி இருக்கிறது.அதன் பெயர் Google Transliteration IME
இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் கூகிள் தனது தரவுத்தளத்திலிருந்து ஏராளமான சொற்களை வழங்குகிறது. இதனால் தமிழை ஆங்கில முறையில் தட்டச்சு செய்யும் போதே உதவி சொற்கள் வந்துவிடுகின்றன. இதனால் நாம் முழுமையாக தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமுமில்லை.

இந்த மென்பொருள் உள்ள இணைப்பு....

http://www.google.com/ime/transliteration/

இதில் தமிழ் என்பதை தேர்ந்தெடுத்து, பதிவிறக்கிகொண்டு, கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

பின்னர்,
Windows XP இயங்குதள பயனாளர்கள் தங்கள் கணினியில் பயன்படுத்தும் முறை

1. கணினியில் Control Panel ல் Regional and Language Options ல் Languages கீற்றை( tab ) தேர்ந்தெடுக்கவும்.Supplement Language Support ன் கீழ் Install Files for complex Script என்பது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தேர்வு செய்து, விண்டோசுக்கான நிறுவல் குறுவட்டை செலுத்தி நிறுவ வேண்டும்.

அதில் Text services and input languages (Details) என்பதை சொடுக்கி, Advanced கீற்றை( tab ) தேர்ந்தெடுக்கவும்.


 
2.அதில் System Configuration ன் கீழ் Turn off advanced text services எனும் தேர்வு பெட்டி தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க வேண்டும். அதனை உறுதி செய்துக் கொள்ளுங்கள்

3. மேலே Settings எனும் கீற்றை( tab ) தேர்ந்தெடுக்கவும்.


4. இப்போது, Preferences என்பதன் கீழுயுள்ள Language Bar ஆழியை சொடுக்கவும்.
5. இதில் Show the Language bar on the desktop எனும் தேர்வுப்பெட்டியை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் OK யை சொடுக்கவும்.
6. அதேப்போல் , Installed Services ன் கீழ் உள்ளிட்டு மொழி தேர்வில் தமிழை இணைக்க வேண்டும். அதற்காக, அதன் அருகில் உள்ள Add எனும் ஆழியை சொடுக்க வேண்டும். இப்போது வரும் சாளரத்தில் Input Languages: என்பதில் தமிழை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் Keyboard layout/IME: ல் Google Tamil Inputஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

7. இப்போது OK ஆழியை சொடுக்கி அனைத்தையும் முடித்துக்கொளவும்.

இப்போது பணிப்பட்டையில் EN அல்லது TA என்று சிறு சின்னம் இடம்பெற்றிருக்கும்.அதில் தேர்ந்தெடுத்துக்கொண்டு தட்டச்சு செய்யலாம்.எடுத்துக்காட்டாக. TA என்பதை தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் திரையில் நிலைக்கருவி தோன்றும் (படம்1)


நாம் தட்டச்சு செய்தால் அங்கு குறிப்புடன் கூடிய  பெட்டி தோன்றுவதை காணலாம்.(படம்2)

விசைப்பலகை உதவிக்கு வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்தியும் தட்டச்சு செய்யலாம்.(படம்3)என்ன அற்புதமான கூகிளின் படைப்பு பாருங்கள். நாம் கணினியில் தமிழை பயன்படுத்துவதில் இனி தடை ஏதுமில்லை. அதற்கான தீர்வுகள் உடனுக்குடன்  வந்துக்கொண்டிருக்கின்றன. அதனால், தமிழை பயன்படுத்துவதை ஊக்குவிப்போம்.


வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...