Posts

Showing posts from November, 2009

விழ விழ எழுவோம்!!

தமிழர்களுக்கெதிரான இந்தியாவின் எத்தகைய செயலும் இந்தியாவுக்கு ஆபத்தானது.

Image
- - வெ.யுவராசன்
வரலாற்று சிறப்பும், பெருமையும் வாய்ந்த தமிழினம், தனக்கென்று ஒரு நாடின்றி உலகெங்கிலும் ஏதிலிகளாக சிதைந்துக் கிடக்கிறது. இலங்கையில் சிங்கள இன வெறியர்கள் ஈழத்தமிழ் சொந்தங்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்துவருகிறார்கள். தமிழர் நிலங்களில் சிங்கள  குடியேற்றமும், நில அபகரிப்பும் நடந்தேறுகின்றன.
இனவழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் ஒரு கட்டமாக தமிழர்கள் கடந்த முப்பது ஆண்டுகாலமாக கருவியேந்தி களத்தில் போராடி வருகிறார்கள்.
தனித் தமிழீழமொன்றே தீர்வென தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாது களத்தில் நின்றனர். 
ஆனால், இலங்கை அரசு போர் முறைகளை மீறி தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக இலங்கை தீவிலிருந்து ஒழிக்க திட்டமிட்டு, தடைச் செய்யப்பட்ட கருவிகளையும், நச்சுப் பொருட்களையும், கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்தி, பாதுகாப்பு வலையத்தில் இருந்த அப்பாவி பொதுமக்களையும், மருத்துவமனைகளையும், கல்விக் கூடங்களையும் குறிவைத்து அல்லவா இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
இரண்டு இலட்சத்திற்குமேலான தமிழர்களை கொன்று குவித்தனர்.
கடந்த மே 16லிருந்து 18 வரையிலான மூன்று நாட்களில் வன்னிமண் பிணக்காடா…