26.9.09

சரஸ்வதி பிரம்மனால் உண்டானவளா? அகத்தியரிடத்தில் உற்பத்தியானவளா?

சரஸ்வதி பிரம்மனால் உண்டானவளா? அகத்தியரிடத்தில் உற்பத்தியானவளா?
சரஸ்வதி பூஜை கொண்டாடும் தமிழா சரசுவதியின் கதையை அறிவுப்பூர்வமாக அறிந்து கொண்டுதான் கொண்டாடுகிறாயா? சரசுவதியின் கதையை இப்போது அறிந்து கொள்.அதன்பின் சரசுவதி பூஜை கொண்டாடியது எவ்வளவு அசிங்கமான செயல் எனபதை உணர்வாய்!. இதோ சரசுவதியின் கதை:

சரஸ்வதியா? சரசவதியா?

கல்வித்துறையின் கடவுளாகக் கற்பிக்கப்பட்டுள்ள கலைவாணி (சரஸ்வதி) யின் பிறப்புக் கதையும் குளறுபடியாகவே இருக்கிறது. மற்றத் தெய்வங்களின் விரசமான கதைக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை இது!

இவளின் பிறப்புப்பற்றி ‘அபிதான சிந்தாமணி’யின்
588- ஆம் பக்கம் தரும் செய்திகள் வருமாறு.

1. பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள்.

2. ஒருகாலத்து அகத்தியரிடம் பிறந்தவள்.

3. பிரம்மன் யாகம் செய்யும்போது, யாக கலசத்தில் தோன்றியவள்.

பிறப்புப் பற்றிய மூன்று செய்திகள் இவை.

இவளின் நன்னடத்தை(!)களைப் பற்றிப் புராணங்கள் தாங்கும் புத்திசாலித்தனமான கதைகளையும் கொஞ்சம் நினைவூட்டிக்
கொள்வோம்.

பிரம்மனின் சிருஷ்டியில் உருவான சரஸ்வதி அழகியென்றால் அழகி! கொள்ளை அழகி!! அந்த அழகில் இளகிய படைப்புக் கடவுளின் தாபவெள்ளம் உடைப்பெடுத்தது. பிறக்கும் போதே வெறும்மேனியுடன் பிறக்கவில்லை இவள்! வெண்ணிற ஆடை யுடனான மேனி, ஜெபமாலை தாங்கிய கை, இன்னொரு கையில் புத்தகம், இருந்த மீதி கரங்கள் இரண்டிலும் வீணை.

இந்த கோலத்தில் வந்துவிட்ட தனது சிருஷ்டியில் தானே திருஷ்டி போட பிரம்மனுக்கு மனம் உசுப்பியது. ‘காமம் கண்ணறியாது’ என்ற மொழிக்கு ஒரு ஸ்தானமாகப் பிரம்மனின் செயல் விளங்கியது.

“பெற்ற மகளோ! செத்த நாயோ!” போன்ற கொச்சை மொழியின் துவக்கத்தை இங்கிருந்துதான் துவக்கியிருக்கவேண்டும். அந்தத் தேவ மங்கை அவ்வளவு இலகுவில் இணங்க விடுவாளா? பிகு இல்லாமல் சுவை கிடையாது என்ற ‘தொழில் சூத்திரத்தை’உணர்ந்த சகல கலாவாணி ஆயிற்றே அவள்! ஓடிவரட்டுமே என ஓட்டம் பிடித்தாள் எப்படி? தானாக அல்ல! தண்ணீராக!

உருமாறி, திசையெட்டும் திக் விஜயம் செய்தவளை திரும்பித் திரும்பிப் பார்த்தான் பிரம்மன். ஒரு தலையால் ஆகிய காரியமல்ல இது என்று முளைக்க வைத்தான் மேலும் மூன்று தலைகளை.

ஒரு முகப் பிரம்மா, சதுர் (நான்கு) முகப்பிரம்மாவானான். நதியை வளைத்துப் பிடித்து, பழைய நிலைக்குத் தளதள மேனியாக்கி, தழுவிக் கழித்தான் பிரம்மன் நழுவி ஓடிவிடாமல் கழுத்தில் தாலிச் சரட்டையும் தவழவிட்டு தாரமாக்கிக் கொண்டான். தாலி கட்டித் தாரமாக்கி, திறமை காட்டி ஈரமாக்கினால் மட்டும் ஒரு மனைவி நம்மிடம் நீடிப்பாளா, நிலைப்பாளா என்று பிரம்மன் மனத்தைப் போட்டு அலட்டிக்
கொண்டான்.

“சிறைக்காக்கும் காப்பு எவன் செய்யும்?” என்றாலும் அதைவிடக் கதி இல்லை என்று கருதினானோ என்னவோ, கல்விக்கு அதிபதியான அவளை வாய்க்குள் போட்டுக் கொண்டான். காவலுக்கு ஆள் வேண்டுமே! பற்களை உயிர்பித்துப் போர் வீரர்களாக்கிவிட்டான்.

கிளர்ச்சியை மனம் கிளப்பும்போது, பள்ளியறையிலும் நாடி தளர்ந்து ஆடிக் குலைந்ததும் பிரம்மனின் வாயாகிய சிறைச்சாலையிலும் படுக்கையறைப் பாவையாகக் காலந்தள்ளினாள் சரஸ்வதி. இப்படி இருந்தது ஒரு நாளோ , ஒன்பது நாளோ அல்ல ; நூறு தேவ வருடம் இதே வேலை. ஆசைக்கும் மோகத்திற்கும் அத்தனை நாள், இத்தனை நாள் என்ற கணக்கையெல்லாம் பிரம்மன் பொய்யடித்து விட்டான்.

இத்தனை நாளைக்குபின் பிரம்மனுக்கு லேசான ஒரு சலிப்பு! மகனை அழைத்து , மனைவிக்கு மணாளனாக்கி வைத்தான். மகனே என்று அழைக்கவேண்டியவனிடம், மன்மத சுகங்காண கலைவாணியும் ‘காலெடுத்து’ நடந்தாள். ‘சித்தி’ முறையாயிற்றே என்ற வெட்கம் சிறிதுமின்றி சிருங்காரத்தைப் பிழிந்தான் பிரம்மபுத்திரனும்-பிரம்மனின் மகன் பெயர் சுவாயம்பு.

பல புராணங்களில் இருந்து சலித்தெடுத்த பல ருசிகரக் கதைகளை இப்படியாகச் சொல்லிப் போகின்றது அபிதான சிந்தாமணி.

பரிதாபத்திற்குரிய பக்தர்களை ஒரு பார்வை பார்ப்போம். அருமை பக்தர்களே, வினாவுக்கு விடை கொடுங்கள்!

1. சரஸ்வதி பிரம்மனால் உண்டானவளா? அகத்தியரிடத்தில்
உற்பத்தியானவளா?

2. பிறக்கும்போதே ஜெபமாலை, புத்தகம், வீணை , வெண்ணிற
ஆடை, இத்யாதி இத்யாதி சர்வலங்கார மேக்கப்புடன்
எப்படிப் பிறக்க முடியும்?

3. மகன் முறை கொண்டாட வேண்டியவனிடம், மையல் கொள்
பவள் தான் தெய்வப் பிறவியா?

4 தழுவ வந்ததும் தண்ணீராய் ஓடிய விந்தை, நான்கு புறமும்
ஓட நான்காய்த் தலைகள் ஆன கதை நம்பமுடிகிறதா

நண்பர்களே!

5. தாலிகட்டி மனைவியான பின்பும், சிறைவைக்கும் நிலைக்குத்
தரங்கெட்டவனாக வர்ணிக்கப்படுபவனைத் தெய்வமாக
ஏற்க முடியுமா?

6. அதைக் கிழிப்பான்- இதைக் கிழிப்பான் என்று பிரம்மன்
புகழ்பாடும் பக்தர்களே! தன்னால் உருவானவளே தனக்குத்
தண்ணீர் காட்டினாள் என்று சொல்லும் நிலைக்கு பலவீனப்
பேர்வழியாகிவிட்ட கடவுளின் சக்தியில் நம்பிக்கைக் கொள்ள
எப்படித் துணிகிறீர்கள்?

7. இப்படியெல்லாம் அயோக்கியத்தனம் பண்ணியதால் தான்
பிரம்மனை நாங்கள் கோவில் கட்டி கும்பிடுவதில்லை என்று
நொண்டிச் சமாதானம் கூறுபவர்களே!

8. மொத்தமாக ஒரு கேள்வி.

இக்கதையில் எந்த ஒரு வரியை நம்ப முடியும்? இந்த மாதிரி
கடவுளையும்-அதன் லீலைகளுக்கு இலக்கான அம்மணியையும்
வணங்கும் போக்கு எதைக் காட்டும்?


நன்றி : நூல்: “கடவுளர் கதைகள்” பக்கம் 32 -35

24.9.09

கூகிள் அஞ்சல் சேவையில் மீண்டும் ஒரு பிழை !!

கூகிள் நிறுவனம் வழங்கும் ஜிமெயில் சேவையால் பெரிதும் பயன்பெற்று வரும் இணைய உலகத்தினர், கடந்த சில மணி (24/09/09 இரவு 8 மணியிலிருந்து..... ) நேரங்களாக ஒரு பிழையை/குறையை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதாவது, தொடர்புகள் அனைத்தும் காண கிடைக்காத நிலையில் ஜிமெயில் இருக்கிறது.
இதனால், தானாக முகவரிகளை நிரப்பிக்கொள்ளும் வசதி, அரட்டை வசதி போன்றவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.


Contacts temporarily unavailable

Your contact list is temporarily unavailable, which may result in a few issues:

  • Auto-complete may not work
  • The contact manager may not load
  • Chat may not work
We're working to fix the problem, and in the meantime, you should be able to continue to read and send mail as normal. Thank you for your patience.


குறிப்பு: இரவு 10 மணி வாக்கில் அரட்டையை தவிர மீதி சரியாகிவிட்டது..

3.9.09

கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது!

கூகுள் நிறுவனத்தின் ஜீ மெயில் மின்னஞ்சல் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை இரு மணிநேரம் தடைப்பட்டிருந்தது.
இதனையடுத்து கூகுள் நிறுவனம் சர்வதேச ரீதியாகத் தன்னோடு இணைந்திருக்கும் 150 மில்லியன் பயனர்களிடம் மன்னிப்பு கோருகிறது.

இது போன்ற தவறுகள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாதவாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது.

எத்தனையோ பேர் தனிப்பட்ட மற்றும் அலுவலக தொடர்புகளை ஜீ மெயிலில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுத் தமக்குத் தெரியும் என்று அதன் நிறுவன அதிகாரியான பென் டெயினர் தெரிவித்தார்.

இதே போன்று கடந்த மே மாதமும் தொழில்நுட்ப பிரச்சினை ஒன்று ( அனைத்து இணையதளமும் நச்சுநிரலால் பாதிப்புக்குள்ளானது என்று பிழை செய்தியை தனது தேடலில் காண்பித்தது) கூகுள் இணையத்தள சேவையில் இடம்பெற்றிருந்தமை குறிபிடத்தக்கது.

2.9.09

கூகிள் அஞ்சல் சேவை இடைநிறுத்தம் !!!

நம்மில் பெரும்பாலானோர் கூகிள் நிறுவனம் வழங்கும் ஜிமெயில் அஞ்சல் சேவையை பயன்படுத்தி வருகிறோம்.

இன்று(02-09-09) காலை 2.00 மணி முதல் ஜிமெயில் அஞ்சல் சேவை சரிவர இயங்கவில்லை.

எதை சொடுக்கினாலும், இன்னும் பணிபுரிகிறது? என்கிற செய்தியை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தது .

ஒரு கட்டத்தில் இயலாமையை பிழை செய்தி மூலம் அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
அதாவது சேவையக பிழை செய்தி காட்டிக்கொண்டிருக்கிறது.

முதலாவதாக வந்த பிழை செய்தி.


இரண்டாவதாக வந்த பிழை செய்தி

புதுப்பிப்பு:
ஒருவழியாக 3 மணிக்கு சரியாகிவிட்டது..(???)

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...