Posts

Showing posts from February, 2009

அறிவியல் தமிழ் களஞ்சியம்

அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படையில் காணக் கிடைக்கவில்லை. அதாவது, யூனிகோடு வடிவில் இல்லாமை, நடைமுறை பயன்பாடின்மை என சிக்கல்கள் உள்ளன.

அறிவியல் வளர்ச்சியில் அதன் பயன்பாட்டில் கட்டமைக்கப்பட்டு வரும் சமுதாயம் அறிவியலை உணர வேண்டுமெனில் மொழியை வளப்படுத்த வேண்டும். அறிவியலை உணர பல மாறுபட்ட கருத்துகளை பரிமாற சரியான ஊடகம் அமைக்கப்பட வேண்டும். மொழி என்பது ஊடகமென்பதால் அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தும் கலைச்சொற்களோடு பல்துறை பதிவுகளோடு வாழ்க்கையை, அறிவியலை, தொழிலை வெளிப்படுத்தும் கருவியாகவும் செம்மைப்படுத்த வேண்டும்.

அதற்கு கணினியும், இணையமும் சிறந்த கருவியாக உள்ளது. மேலும், கணினி சார்ந்த கலைசொற்கள் நிறைய காண உள்ளன. பிற துறை கலைச்சொற்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனை போக்க மிகப்பெரிய திட்டமாக கலைச்சொல் களஞ்சியத்தை உருவாக்கி, பிற இடங்களில் இருக்கும் தரவுகளை ஒருங்கிணைத்து, இணையத்தில் சிறப்பான அறிவியல்தமிழ் கலைச்சொல் அகராதியை உருவாக்க வேண்டும்.

ஆங்கில மொழியறிந்து, பின் ஆங்கில வழி அறிவியலறிந்து…

அறிவியல் தமிழ் கலைச்சொல் களஞ்சியம்

Loading...

அனைத்துலக தாய்மொழி நாள்.

இன்று பெப்ரவரி 21 , அனைத்துலக தாய்மொழி நாள்.

1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை அரச நிருவாக மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக உலகளாவிய மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுகோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது.

பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுகோ அறிவித்தது.

2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.




உலகில் உள்ள 6900 மொழிகலில் ஏறக்குறைய 2500 மொழிகள் அடியோடு அழிந்து விடும் ஆபத்து - ஐ நா

அதிகப்படியாக இந்தியாவில் 196 மொழிகள் விரைவில் அழிந்து விடும் என எச்சரிக்கிறது ஐ நா.

அடுத்து அமெரிக்காவில் 192 மொழிகளும், இந்தோனேசியாவில்…

சிறந்த வலைப்பதிவர் விருது - தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்குகிறது

தமிழ் ஸ்டுடியோ.காம் தமிழில் குறும்படம், இலக்கியம், வரலாறு என்று தனது கிளை பரப்பி வளர்ந்து வரும் ஓர் இணையத்தளம் ஆகும்.

தொடர்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல், வாசகர் சந்திப்பு, குறும்பட வழிகாட்டல், புதிய படைப்பாளிகளை ஊக்குவித்தல் போன்ற பணிகளை செய்வதில் ஆர்வம் கொண்டுள்ள தமிழ் ஸ்டுடியோ.காம் ஒவ்வொரு மாதமும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழாவையும் நடத்துகிறது. இவ்விழா தனிச்சையாக இல்லாமல் தமிழ் ஸ்டுடியோ.காம் ஒவ்வொரு மாதமும் நடத்தும் குறும்பட வட்ட நிகழ்ச்சியுடன் இணைந்தே நடத்தப்படுகிறது.

தனக்குள் பல திறமைகளை கொண்டிருக்கும் வலைப்பதிவர்களை சிறப்பு செய்யும் ஒரு வாய்ப்பாகவே தமிழ் ஸ்டுடியோ.காம் இதனைக் கருதுகிறது எனவும், தொடக்கத்தில் ஊக்கத்தொகை இல்லாமல் கேடயத்துடன் வழங்கப்படும் ஒரு சில மாதங்களில் ஊக்கத்தொகையுடன் வழங்கப்படும் எனவும் தமிழ்ஸ்டுடியோ.காம் அருண் தெரிவித்தார்.
மேற்படி தொடர்புக்கு....

9840698236, 9894422268

தனித்தமிழ் மென்பொருள்

தனித்தமிழில் எழுத வேண்டுமா?
கிரந்த எழுத்துகள் அற்ற தமிழ்99 விசைப்பலகை ஒழுங்கில் கிரந்தத்திற்கு மாற்றான தனித்தமிழில் எழுதுவதற்கான கருவி.

இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த.....
தனித்தமிழ்

அகர வரிசை முறையில் வரிகளை ஒழுங்குப்படுத்த வேண்டுமா ?

வரிசையாக்கி எனும் இம்மென்பொருள் நீங்கள் தரும் அனைத்து வரிகளையும் அகர வரிசை முறையில் ஒழுங்குப்படுத்தி தரும்.

இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த.....

வரிசையாக்கி

தமிழ் கணினி - கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்

சென்னை இலொயோலா கல்லூரியில் வருகிற பிப் 12-13 நாட்களில் கணியம் எனப்படும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இதில் பொறியியல்/அறிவியல் கல்லூரி கணினித்துறை மாணவர்கள் தங்கள் இறுதி ஆண்டு திட்டப்பணி ஒப்படைப்பில் தமிழில் கணினி சார்ந்த ஆய்வுகளை மென்பொருட்களை உருவாக்குவது எப்படி, தமிழ்கணினி துறையின் அவசியம், தேவை, பணி வாய்ப்பு என பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் உரை நிகழ்த்த உள்ளனர்.

இக்கருத்தரங்கை கணித்தமிழ் சங்கம், தமிழ் இணைய பல்கலைக்கழகம், இலொயோலா கல்லூரி இணைந்து நடத்துகின்றன.

பங்கேற்பு:
முனைவர் மன்னர் சவகர், துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்
முனைவர் அனந்த கிருட்டிணன், முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்
முனைவர் நக்கீரன், இயக்குனர், தமிழ் இணைய பல்கலைகழகம்
அருட்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை, முதல்வர், இலொயோலா கல்லூரி
திரு ஆண்டோபீட்டர், தலைவர் கணித்தமிழ் சங்கம்
திரு இளங்கோவன், முன்னாள் தலைவர் கணித்தமிழ் சங்கம்.
முனைவர் டி.வி. கீதா, பேராசிரியர், அண்ணா பல்கலை கழகம்
திரு. ஜெ.ஜெரால்டு இனிகோ, லொயோலா கல்லூரி
திரு இ.இனியநேரு, தொழில்நுட்ப இயக்குனர், தேசிய தகவல் மய்யம்.
முனைவர். வி.கிருட்டிண மூர்த்தி, பேராசிரியர் , கிரசண்ட் ப…

கூகிள் சிறப்புகள் - தொலைப்பேசி வழி தேடல்

கூகிள் தனது சேவைகளில் ஒன்றாக தொலைப்பேசி வழி இலவசமாக வணிக தகவல்கள், திரையரங்க திரைப்பட நேரங்கள், விமான போக்குவரத்து நிலை போன்றவற்றை அறியும் வண்ணம் செயலபடுத்தப்படுகிறது.

இதன் மூலம் நாம் வினவும் சொல்லுக்கு ஏற்றாற்போல் தேடி ஒலியாக விடையளிக்கிறது. மேலும், குறுஞ்சேதியாக நம் எண்ணுக்கு உடனேயே தருகிறது.

இச்சேவை, முதற்கட்டமாக, ஐதராபாத்,தில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து இயக்கப்படுகிறது.
ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் சேவையளிக்கப்படும் கூகிளின் இச்சேவை, சோதனை நிலையில் இயங்குகிறது.
அதுக்குறித்த தகவலுக்கு... சொடுக்கவும்

கூகிள் சிறப்புகள்

கூகிள் நிறுவனம் தனது சிறப்பான சேவையை மக்களுக்கு அள்ளி வழங்கி வருகிறது.
அதன் பொருட்டு கூகிளின் சேவைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
தமிழில் வழங்கும் சேவைகள்...

திரை விசைப்பலகை
தமிழில் தட்டச்சு செய்வதில் சிரமம் இருப்பின் சுட்டி மூலம் சொடுக்கி தமிழ் எழுத்துகளில் தேடும் வசதியை தருகிறது. அதன் இணைப்பு:
தமிழ் தேடுபொறி

தட்டச்சுவான்

ஆங்கிலவழி தமிழில் தட்டச்சு செய்யும் வசதியாக கூகிள் ஒரு கருவியை படைத்தளித்திருக்கிறது.
அதன் இணைப்பு:
தமிழ் தட்டச்சுவான்
அலைபேசி வழி தேடல்
குறுஞ்சேதி மூலமாக இணையத்தில் தேவையான தளங்களில் தேடலாம்.
அதற்கான வழி முறை

9-77-33-00000 இந்த எண்ணிற்கு தேட வேண்டிய சொல்லை குறுஞ்சேதி அனுப்பினால் தேடல் முடிவுகள் நம் அலைப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.
(கட்டணங்கள் அலைப்பேசி இணைப்பு வழங்கும் நிறுவனத்தைப்பொறுத்தது.)

தொடரும்......

கூகிளின் இணையம் குறித்த விழிப்புணர்வு பேருந்து

தமிழக மக்களிடையே இணையத்தின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் சேவையை கூகிள் நிறுவனம் தொடங்கி உள்ளது.
அதன் பயணவிவரம் வருமாறு

03 பிப்ரவரி சென்னை
05 பிப்ரவரி வேலூர்
06 பிப்ரவரி கிருட்டிணகிரி
07 பிப்ரவரி சேலம்
11 பிப்ரவரி ஈரோடு
12 பிப்ரவரி திருப்பூர்
14 பிப்ரவரி கோவை
18 பிப்ரவரி திண்டுக்கல்
19 பிப்ரவரி மதுரை
23 பிப்ரவரி திருநெல்வேலி
25 பிப்ரவரி நாகர்கோவில்
27 பிப்ரவரி தூத்துக்குடி
02 மார்ச் புதுக்கோட்டை
03 மார்ச் திருச்சி
06 மார்ச் தஞ்சாவூர்
08 மார்ச் கும்பக்கோணம்
10 மார்ச் நெய்வேலி
12 மார்ச் கடலூர்
13 மார்ச் திருவண்ணாமலை

கூகிள் வழங்கும் விழிப்பிணர்வு காணொளிப்படங்கள்

1. இணையம் முலம் தகவலறிதல்
2. இணையம் மூலம் கல்வி
3. இணையம் மூலம் தொடர்பு

ஆங்கிலத்தில் முத்துக்குமார் அறிக்கை

Dear hardworking Tamil people...

Va'nakkam! I am sorry at having to meet you at this juncture when you are hurrying to work. But there is no other option. My name is Muthukumar. I am a journalist and an assistant director. Right now, I am working in a Chennai-based newspaper. I am also one like you. I am just another average person who has been reading newspapers and websites of how fellow Tamils are daily being killed, and like you I am unable to eat, unable to sleep, unable to sleep and unable to even think. While his ancient land of Tamils lets anyone coming here, like the Seths, to flourish, our own blood, the Tamils in Eelam are dying. When we lend our voices to say the killings should be stopped, Indian imperialism maintains a stony silence and does not give out any reply. If India's war is really a justifiable one, they can wage it openly... Why should they do it stealthily?

The Indian ruling class is eager to annihilate a very large population by using the hollow excu…

கூகிள் தேடுப்பொறியின் சில மணிநேர குழப்பங்கள்

கூகிள் தேடுப்பொறியின் சில மணிநேர குழப்பங்கள்........
அதுகுறித்த தகவல்..
செய்தி 1
செய்தி 2
செய்தி 3
செய்தி 4
செய்தி 5


ஆனால் சில மணிநேரத்தில் அச்சிக்கல் தீர்க்கப்பட்டது.....!!!