2.1.09

காலாவதியான செம்மொழி நிறுவனம்!!

காலாவதியான செம்மொழி நிறுவனம்!!

இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனம் , செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தை நிறுவி அதற்கென தனி இணையதளத்தை வடிவமைத்து இயக்கிக்கொண்டுவந்தது(?).
அத்தளம் இப்போது காலாவதியாகி ஒரு மாதம் ஆகிறது. ஆனால் அதை கண்டுக்கொள்வார் எவரும் இல்லை.

எனக்கு பழைய செய்தி ஒன்று நினைவில் தோன்றி, அதை கணினியில் சொடுக்கி பார்த்தேன்........

அதை நீங்களும் படியுங்கள்.......

செம்மொழி நிறுவனப் பெயர்ப்பலகையில் தமிழ் இடம்பெறுமா?

-பொன்மொழிவேந்தன்

சென்னையில் செம்மொழி நிறுவனம் அமைந்துள்ளமை மகிழ்ச்சிக்கு உரிய ஒன்றாகும். அதன் பெயர்ப் பலகையில் Central Institute of Classical Tamil என ஆங்கிலத்தில் கீழே உள்ளது. அதற்கு நிகராகச் 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' என மேலே உள்ளது. இங்கு Central என்பதை "மத்திய" என்ற பிறமொழிச் சொல்லால் குறிப்பிட்டுள்ளனர். Central என்பதற்கு"நடுவண்" என்ற தமிழ்ச்சொல்லை ('நடுவண் ஐந்திணை'-தொல்காப்பியம்) ஆளுவதே பொருத்தம்.

மைசூரில் உள்ள Central Institute of Indian Languages என்பது இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் என்றே தமிழில் ஆளப்படுகிறது.அவ்வாறு இருக்க நடுவண் என்று பயன்படுத்தாமல் 'மத்திய' என்ற சொல் ஆளப்பட்டது எவ்வாறு?. முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தால் கட்டாயம் ஆவன செய்திருப்பார்.

எனவே "செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம்" என்று இருப்பதே பொருத்தம். சரியானது.

தமிழை வளர்க்க நினைக்கும் இடத்திலேயே தமிழ் இல்லையே?
"ஊரைத்திருத்தும் முன் உலகைத் திருத்தும்முன் உன்னைத் திருத்தடா தமிழா!" என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதை நினைவிற்கொள்வோம்.முதற்கோணல் முற்றுங்கோணலாகி விடுவதற்குள் திருத்துவோம்.

எண்பேராயம், ஐம்பெருங்குழு, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர், செயலாளர் இவர்களுக்கு இது கண்ணில் படவில்லையா? கருத்தில் படவில்லையா?

மூலம்: Oneindia

இது நிறுவனத்தின் தொடக்கமே இப்படி இருப்பதைக்கண்டு ஆதங்கப்பட்டவரின் பதிவு.

நம் மொழி உலகம் தழுவி சிறக்க போகிறது ? என்கிற மனப்போக்கை இதுப்போன்ற செயற்பாடுகள் ஏற்படுத்துகின்றன.
இப்போது நிறுவனமொன்று இருப்பதாக அறிந்து கொள்ளவே முடியாத நிலையில் உள்ளது.
துறை சார்ந்தவர்கள் இதை கவனிப்பார்களா..??????

பார்க்கவும்.....
www.ciil-classicaltamil.org

No comments:

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...