Posts

Showing posts from October, 2008

கி.பி. 1677 - கி.பி. 1988 வரையிலான தமிழர் வரலாறு

Image
கி.பி. 1677
விசய நகர பேரரசின் கடைசி வாரிசான சீரங்கனுடன் நாயக்கர் ஆட்சி முடிந்தது.
கி.பி. 1682-1689
அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் கிருத்துவ துறவி சான்-டி-பிருட்டோ மதுரை பகுதியில் சமயத் தொண்டாற்றினார்.
கி.பி. 1688-1706
இராணி மங்கம்மாவின் காலம். உய்யக்கொண்டான் வாய்க்காலை செப்பனிடச் செய்தார். குளம் வெட்டி வளம் பெருக்கிட சாலைகளும் சோலைகளும், அன்னச்சாவடிகள், சத்திரங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்தார். சமய சார்பற்ற குடிநலம் பேணினார். மதுரை பொற்றாமரைக் குளத்தின் அருகில் கல்யாண மண்டபத்தில் நினைவுச் சின்னமாக அவருடைய உருவம் ஓவியமாக உள்ளது. 'மங்கம்மாள் மலைமேற் சோலை' எனப் பாராட்டப் பட்டுள்ளது.
கி.பி. 1700
உலக மக்கட்தொகை 610 மில்லியன். தற்போதைய இந்திய மக்கட் தொகை 165 மில்லியன்.
கி.பி. 1705-1742
தமிழ் சைவ சித்தாந்தியும் கவியுமான தாயுமானவ…

கி.பி. 1 - கி.பி. 1856 வரையிலான தமிழர் வரலாறு

கி.பி. 1 - 20
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.
கி.பி. 10
உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.
கி.பி. 21 - 42
குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.
கி.பி. 42 - 100
சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம்.
கி.பி. 53
ஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமசு இக்கால சென்னையில் மறைவு.
கி.பி. 101 - 120
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி…

கி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு

கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம்.முதன் முதலில் தமிழ் நாட்டில் தோன்றியது.தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு,பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100000
நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.
கி.மு. 75000
கடைகி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.
கி.மு. 50000 - 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
கி-மு. 20000 - 10000
ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங…

ஈழம்- வரலாற்றுச் சுருக்கம்

Image
ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று தனித்துவங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு எஞ்சியுள்ள தனித்துவத்தினை பேணிப் பாதுகாப்பதில் முன்னின்று செயற்படும் இக்காலகட்டத்தில் எமது வரலாறு பற்றி எழுதுவதும் அவற்றைப் படிப்பதும் அறிவது அவசியமாகிறது. எனவே எமதுஇந்த முயற்சிகள் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு எமது தொன்மையான வரலாறு பற்றியும்.அதில் எமது தனித்துவம் பற்றியும் அதன் தார்ப்பரியம் பற்றியும் உணரக்கூடியதாக எடுத்தியம்பும் என நினைக்கிறோம்.
ஈழத்தமிழரை பொறுத்தவரையில் எங்களுடைய வரலாறு என்பது மிகத்தொன்மையானது பல நூற்றான்டு காலம் தொடர் வரலாற்றைக் கொண்டதுமாகவே காணப்படுகிறது. வரலாறு என்பது மிகத்தொன்மையானது பல நூற்றாண்டு காலம் தொடர் வரலாற்றை கொண்டதுமாகவே காணப்படுகிறது. வரலாறு என்பது எழுதப்படுவதற்கு முன் நிலவிய குறுனிக் கற்கால பண்பாட்டுடன் ஆரம்பமாகி பெருங்கற்காலப் பண்பாடு கதிரமலை அரசு சிங்கைநகர் அரசு என இருந்த போதும் கி.பி 09ம் நூற்றாண்டில் இருந்து 13ம் நூற்றாண்டுவரை சோழர்களின் ஆட்சியில் இவர்களை அடுத்த 13ம் நூற்றாண்டில் இருந்து யாழ் இராச்சியம் ஊடாக ஒரு தொடர் வரலாற்றைக் கொண்டிருந்த மக்களாகவே ஈழத்தமிழருடைய வரலாறு அமைகிறது.
ந…