8.9.08

உலக எழுத்தறிவு நாள்

ஐ.நா கல்வி,அறிவியல்,பண்பாட்டு நிறுவனத்தின் முயற்சியால் ஆண்டு தோறும் செப்தம்பர் 8 ஆம் நாள் "உலக எழுத்தறிவு நாளாக" கொண்டாடப்படுகிறது. 1966ல் தான் இந்த நாள் முத்ன்முதலாக கொண்டாடப்பட்டது. தனி மனிதர்களுக்கும்,பல்வேறு வகுப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதமையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும். எழுதப்படிக்கக்கற்றுக்கொடுப்பதற்கும், எயிட்ஸ், காச நோய், மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் , தொற்று நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவத்ற்கும் முதன்மை அளிக்கும் வகையில் "எழுத்தறிவும் நலவாழ்வும்"என்பது இந்த ஆண்டு உலக எழுத்தறிவு நாள் இயக்கத்தின் கருப்பொருளாக தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. "எழுத்தறிவித்தலே சிறந்த மருந்து" என்ற முழக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் 77.4 கோடி மக்கள் இன்னமும் எழுதப்படிக்க தெரியாமல் இருக்கிரார்கள். அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது. இவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள். 7.5 கோடி குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருக்கிறார்கள். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டவர்கள்,அரைகுறையாக பள்ளிகள் செல்பவர்கள் ஏராளம்.
எழுதப்படிக்கத்தெரிந்த மக்களின் எண்ணிககை விழுக்காடு அடிப்படையிலான உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 147 ஆவது இடத்தில் இருக்கிறது.இந்தியாவில் எழுதப்படிக்க த்தெரிந்தவர்களின் எண்ணிக்கை 61% ஆகும். உலகிலேயே எழுதப்படிக்கத்தெரிந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் நாடு மேற்கு ஆப்பிரிக்காவைச்சேர்ந்த பாக்கினோ பாசோதான். அங்கு எழுதப்படிக்க தெரிந்தவர்கள் எண்ணிக்கை 12.8%.

நன்றி
: தமிழ் ஓசை நாளேடு (08/09/08),சென்னை
Post a Comment

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...