Posts

Showing posts from September, 2008

தமிழியக்கம்- பாரதிதாசன்

Image
வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர்
ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப்
பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர்
ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே.
மிகுகோவில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர்,
தகுமாறு மணம்புரிவோர், கல்விதரும் கணக்காயர், தம்மா ணாக்கர்,
நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ? நல்வாழ் வுக்கோர்
புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர்உயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே.மகிழ்ச்சிசெய வருங்கூத்தர், மாத்தமிழை மாய்ப்பதுண்டோ? வாய்ப்பாட் டாளர்,
இகழ்ச்சியுற நடப்பதுண்டோ? இசைப்பாடல் ஆக்குபவர் இழிவேன் ஏற்றார்?
நகச்சிலசொற் பொழிவாளர் நாணற்றுப் போயினரோ? வாழ்வுக் கான
புகழ்ச்சியினைப் போக்கடித்தும் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே.கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும் கூட்டம்? தீமை
மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ? சொல்லாக் கத்தார்
தூற்றுமொழி ஏன்சுமந்தார்? துண்டறிக்கை யாளருமோ தீயர்? வாழ்வில்
ஏற்றமுற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே.
நல்லஅரும் பொருளுடையார் நந்தமிழ்க்கோ பகையாவார்? நாட்டில் ஆணை

தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்

தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்மொழியியலறிஞர்:- ஜே.நீதிவாணன் தரும் அதிர்ச்சி தகவல்கள்!

புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வந்தேறி தமிழர்களின் மொழி உணர்வு நூலின் முக்கியப்பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார்.
போர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப்படுபவர்கள்,தொழிலாளர்கள், வணிகர்கள், பேரரசு நிறுவியவர்கள், கலாச்சார ரீதியில் சென்றவர்கள்
என 5 வகையாக புலம் பெயர்ந்தவர்களைப் பகுக்கலாம். ஆப்பிரிக்கர்களும், ஆர்மீனியர்களும் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்தவர்கள். இந்தியத் தமிழர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். பிரித்தானியர் பேரரசை நிலைநாட்டப் புலம் பெயர்ந்தவர்கள். சீனர்களும் லெபனானியர்களும் வணிகர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். கரீபியர்கள் கலாச்சார ரீதியில் புலம் பெயர்ந்தவர்கள். ஆனால் யூதர்கள் மட்டும் முற்றிலும் வேறுபாடான வகையில் புலம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு புலம் பெயரும் பொழுது மீண்டும் தாயகம் திரும்பும் எண்ண…

தமிழ்ப் பெயர்கள்

தமிழியக்கம்- பாரதிதாசன் பாடல்
வாணிகர்,தம் முகவரியை வரைகின்ற பலகையில்,ஆங் கிலமா வேண்டும்?
'மாணுயர்ந்த செந்தமிழால் வரைக' என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!
ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈராக அனைவர் போக்கும்
நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலம்காக்கும் செய்கையாமோ?
உணவுதரு விடுதிதனைக் 'கிளப்'பெனவேண் டும்போலும்! உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு 'சில்கு"¡ப்' எனும்பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்!
மணக்கவ ரும் தென்றலிலே குளிராஇல்லை? தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை!
'பவன்' 'மண்டல்' முதலியன இனியேனும் தமிழகத்தில் பயிலா வண்ணம்
அவண்சென்று முழங்கிடுவீர்! ஆங்கிலச்சொல் இந்திமொழி வடசொல் யாவும்
இவண்தமிழிற் கலப்பதுண்டோ 'பிராம்மணர் கள்உண்ணும் இடம்' இப் பேச்சில்
உவப்புண்டோ தமிழ்மானம் ஒழிந்திடுதே ஐயகோ உணர்வீர் நன்றே .
அறிவிப்புப் பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சொல் ஆக்குவதே அன்றி, அச்சொல்
குறைவற்ற தொடராகக் குற்றமற்ற சொல்லாக அமையு மாயின்
மறுவற்றுத் திகழாளோ செந்தமிழ்த்தாய்? தமிழ்மக்கள் மகிழ்ந்தி டாரோ?
குறியுற்ற மறவர்களே! இப்பணிய…

தமிழ்ப் பெயர்கள்

Image
வ.எண்பிற மொழிப்பெயர்கள்தமிழ்ப் பெயர்கள்1டிரேடரஸ்  வணிக மையம்2கார்ப்பரேஷன்   நிறுவனம்3ஏஜென்சி   முகவாண்மை4சென்டர்   மையம், நிலையம்5எம்போரியம்   விற்பனையகம்6ஸ்டோரஸ்  பண்டகசாலை7ஷாப்   கடை, அங்காடி8அண்கோ   குழுமம்9ஷோரூம்   காட்சியகம், எழிலங்காடி10ஜெனரல் ஸ்டோரஸ்  பல்பொருள் அங்காடி11டிராவல் ஏஜென்சி   சுற்றுலா முகவாண்மையகம்12டிராவலஸ்  போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்13எலக்டிரிகலஸ்  மின்பொருள் பண்டகசாலை14ரிப்பேரிங் சென்டர்   சீர்செய் நிலையம்15ஒர்க் ஷாப்   பட்டறை, பணிமனை16ஜூவல்லரஸ்  நகை மாளிகை, நகையகம்17டிம்பரஸ்  மரக்கடை18பிரிண்டரஸ்  அச்சகம்19பவர் பிரிண்டரஸ்  மின் அச்சகம்20ஆப்செட் பிரிண்டரஸ் மறுதோன்றி அச்சகம்21லித்தோஸ்  வண்ண அச்சகம்22கூல் டிரிங்கஸ்  குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்23ஸ்வீட் ஸ்டால்   இனிப்பகம்24காபி பார்   குளம்பிக் கடை25ஹோட்டல்   உணவகம்26டெய்லரஸ்  தையலகம்27டெக்ஸ்டைலஸ்  துணியகம்28ரெடிமேடஸ்  ஆயத்த ஆடையகம்29சினிமா தியேட்டர்   திரையகம்30வீடியோ சென்டர்   ஒளிநாடா மையம், விற்பனையகம்31போட்டோ ஸ்டூடியோ   புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்32சிட் பண்ட்   நிதியகம்33பேங்க்   வைப்…

உலக எழுத்தறிவு நாள்

ஐ.நா கல்வி,அறிவியல்,பண்பாட்டு நிறுவனத்தின் முயற்சியால் ஆண்டு தோறும் செப்தம்பர் 8 ஆம் நாள் "உலக எழுத்தறிவு நாளாக" கொண்டாடப்படுகிறது. 1966ல் தான் இந்த நாள் முத்ன்முதலாக கொண்டாடப்பட்டது. தனி மனிதர்களுக்கும்,பல்வேறு வகுப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதமையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும். எழுதப்படிக்கக்கற்றுக்கொடுப்பதற்கும், எயிட்ஸ், காச நோய், மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் , தொற்று நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவத்ற்கும் முதன்மை அளிக்கும் வகையில் "எழுத்தறிவும் நலவாழ்வும்"என்பது இந்த ஆண்டு உலக எழுத்தறிவு நாள் இயக்கத்தின் கருப்பொருளாக தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. "எழுத்தறிவித்தலே சிறந்த மருந்து" என்ற முழக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் 77.4 கோடி மக்கள் இன்னமும் எழுதப்படிக்க தெரியாமல் இருக்கிரார்கள். அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது. இவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள். 7.5 கோடி குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருக்கிறார்கள். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டவர்கள்,அரைகுறையாக …

மக்கள் தொலைக்காட்சி

Image
"பொழுதைத் திருடும் தொலைக்காட்சியல்ல இது... தமிழின் அனைத்து அடையாளங்களையும், தமிழனின் அடையாளங்களையும் மறுமீட்டெடுத்து, அறிவால், இரசனையால், சிந்தனையால், பொருளாதாரத்தால், வாழ்க்கை முறைகளின் முதிர்ச்சியால்... உலக உயரத்தில் ஓர் இனத்தை உட்கார வைக்கும் முயற்சி.. மக்கள் தொலைக்காட்சி-இது தமிழ் கூறும் நல்லூடகம்!"

மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா 06-09-08 அன்று மதுரையில் நடைபெறுகிறது.
அவ்விழாவின் அழைப்பு:
தன்னிகரில்லாத தமிழ்

நன்றி: வரலாறு
ச.கமலக்கண்ணன் & தமிழ்சசி

"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தக் குடி எங்கள் தமிழ்க் குடி" என்று சொல்லும் பொழுதெல்லாம் சிலருக்கு மெய்சிலிர்க்கும். சிலருக்குக் கோபமும், எரிச்சலும் வரும். கல் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றி இருக்க முடியாது என்றாலும், தமிழ் மிகப் பழமையான மொழி என்ற கருத்தாக்கத்துடன் எழுதப்பட்ட இப்பாடலைப் பலர் தங்களின் சார்புகளுக்கு ஏற்பத் திரித்தும், புகழ்ந்தும், இகழ்ந்தும், விமர்சித்தும் பேசி வந்திருக்கிறார்கள்.

மொழி மீது தமிழகத்தில் ஒரு காலத்தில் அதீதப்பற்று இருந்த நிலைமாறி இன்று "தமிழன்" என்று கூறுவதே இரண்டாம் பட்சமாக மாறிவிட்ட சூழ்நிலையில், தமிழனின் வரலாறு குறித்த ஆய்வுகளுக்குத் தேவையான அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. தமிழக வரலாற்றுத் தேடல் என்பது தமிழனின் மிகத் தொன்மையான வரலாற்றுத் தடயங்களைத் தேடிச் செல்லும் மிக நீண்ட பயணம். இந்தப் பயணத்தில் தங்கள் வரலாற்றைத் துச்சமென மதிக்கும் தமிழர்கள், தமிழக அரசுகள் எனப்பல இடற்பாடுகளைக் கடந்துதான் வரலாற்று ஆய்வாளர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் என்று கூக்குர…