தமிழ் இனமும் மொழியும் காலங்காக்க வழிநிற்போம்.

உருவளர்க்க பொருளீட்ட
பலநாடு பறந்திட்டாலும்
சிறப்புற்ற பிறந்தநாட்டை
எம் தமிழர்கள்
உரமேற்றி உயர்த்த மறப்பதேனோ....?

மணம் மாறி குணம் மாறி
மனங்கெட்ட இனமாக
தமிழர்கள் பூமியிலே
தரங்கெட்டு திரிதலால்
தமிழும்,தமிழினமும்
நிமிரும் திறனற்று
குனிந்தே குன்றிவிடுமோ...?

பிற நாட்டு நல்லறிஞர்
எம்மொழியில் வளங்கண்டார்?
சிறப்புற்ற தாய்மொழியால்
சிகரமேறி உயர்நின்றார்.

செம்மொழியாம் நம் மொழி
எந்நிலையில் தாழ்ந்தது கண்டீர்.
கருத்தொன்றி ஒருமைக்கொண்டால்
அந்நியர்கள் ஆள்வாரோ.?

இயற்றாத தமிழரால்
இயலாமல் கிடக்கிறது தமிழ்மொழி
இயற்றுவோம் தமிழால் என்றால்
இசைந்துவர தயங்குவீரோ?

தயக்கம் கொண்ட தமிழரால்
தரணியாள எங்ஙனம் முடியும்.
தரணியாள தேவையில்லை...
தமிழ் இனமும் மொழியும் காலங்காக்க வழிநிற்போம்.

அன்புடன், வெ.யுவராசன்.
Post a Comment

Popular posts from this blog

கட்செவி அஞ்சல்

அறிவியல் தமிழ் களஞ்சியம்

உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன்