Posts

Showing posts from 2008

தமிழ் புத்தாண்டு

- சுப.நற்குணன்,மலேசியா.

முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு
தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.

மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டு…

தமிழ் குறித்த என் கட்டுரைகள்

Image

தமிழின் வரலாறு

தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும். ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக, தானே முயன்று உருவாக்கிய மொழியே தமிழ். இத்தனித்துவமே தமிழினத்தின் சிறப்பு. இது குறித்து அறிய இதன் வரலாற்றை நான்கெனப் பகுத்து அதன் தோற்றத்தையும், தனித்துவத்தையும் விரிவாகப் பார்ப்போம். அவையாவன..மொழி வரலாறுஇலக்கிய வரலாறுஇன வரலாறுதமிழ் எழுத்து வரலாறு

மொழியின் தோற்றம் ஒரு அமைப்போ, சமுதாயமோ தன் கருத்துக்களை பரிமாறிடவும், ஒத்த கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அவசியம் தேவை மொழி. தமிழர்கள் பேசிய மொழி எக்காலத்தைச் சேர்ந்தது, என்கிற வினாவுக்கு அறிஞருலகம் தெளிவாகவே விடை தருகிறது.அகழ்வு ஆய்விலும் பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள், பாறை செதுக்கல்களில் உள்ள ஆதாரங்கள் கிடைத்த காலம் வரலாற்றுக் காலமெனவும், சான்றுகள் இல்லாத பழமையான மக்கள் வசித்த இருப்பிடங்கள…

நம் தமிழகத்துள் (வழங்கப்பெற்ற - வழங்கப்பெறும்) பானை வகையுட் சில...........

நம் மண் - கலங்கள்
பேராசிரியர் - ப. அருளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்


1) அஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
2) அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
3) அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
4) அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
5) அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
6) அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
7) உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
8) உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
9) எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
10) எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
11) எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
12) ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
13) ஓதப் பானை - ஈரப் பானை
14) ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
15) ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பா…

வாசி வாசியென்று வாசித்த தமிழின்று ..

படித்ததில் பிடித்தது


வாசி வாசியென்று வாசித்த தமிழின்று ..
என்ன ஆனது?

மனிதன் மூடப் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டு, சடங்கு சம்பிரதாயம் என்ற விலங்குகளை மாட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒரு இனத்தையே வீறு கொண்டு எழச் செய்த தாரக மந்திரம்தான் 'கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு!'.

இன்று எங்கே போயிற்று அந்த மந்திரம்?

'பாவம் விஜியோட வளைகாப்புக்குக் கூடப் போக விடாம சரோவோட மாமியாரும் நாத்தனாரும் இப்படிக் கொடுமை பண்ணறாங்களே! இந்த மெட்டி ஒலியிலதான் வாழ்க்கையில நடக்கறதை அப்படியே காட்டறான்.'

'ஹலோ! பெப்சி உமாங்களா! நான் வெட்டியாபுரத்துல இருந்து ஊர்சுத்தியப்பன் பேசறேன்! ஐயோ!! உங்க கூடப் பேசறதுக்குக் கொடுத்து வெச்சிருக்கனும். சந்தோஷத்தில என்ன பேசறதுன்னே புரியலீங்க. எனக்கு மதுர படத்துல இருந்து எலந்தப்பலம் எலந்தப்பலம் பாட்டுப் போடுங்க.'

'சக்திமான் காப்பாற்றுவார் என்று கூறிக் கிணற்றில் குதித்த ஏழு வயதுச் சிறுவர்கள் மூன்று பேர் பலி - நாளிதழில் வந்த செய்தி.'

'மாப்ளே! இன்னிக்கு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இருக்குடா. இந்நேரம் ஆரம்பிச்சிருக்கும். அதனாலதான் பரீட்சைப் பேப்பரை…

கி.பி. 1923 - கி.பி. 2006 வரையிலான தமிழ்ர் வரலாறு

1923 தன்னாட்சி கட்சியைத் தோற்கடித்து பனகல் அரசர் தலைமையில் அமைச்சரவை செயல்பட்டது.
1924 சான் மார்சல் (1876-1958) சிந்து சமவெளி புதைப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டார்.
1925
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம்.
1926 தன்னாட்சி கட்சி ஆதரவுடன் சுயேட்சையான சுப்புராயன் அமைச்சரவையை ஏற்படுத்தினார்.
1927-1981 கவிஞர் கண்ணதாசன் "சங்க இலக்கியத்தைத் தங்க இலக்கியமாய் மனதில் தங்க வைத்தவன்" இக்கவிஞன். இராமநாதபுரம் சிறுகூடற்பட்டியில் பிறந்தவர். பேரறிஞர் அண்ணா பாசறையில் பாடம் படித்தவர். "காற்றுக்கு மரணமில்லை, கண்ணதாசன் கவிதைக்கும் மரணமில்லை". ஆனாலும் இவர் 1981ல் அமெரிக்காவில் தன் உடல் துறந்தார்.
1930 முனுசாமி தலைமையில் நீதிக் கட்சி பதவிக்கு வந்தது.
1930-1959 பட்டுக் கோட்டை கலியாணசுந்தரம் மக்கள் கவிஞன். புரட்சி கவிஞர் பாரதிதாசன் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர். தன் பாடல்களால் தமிழ்த் திரையுலகில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தினார்.��…

கி.பி. 1677 - கி.பி. 1988 வரையிலான தமிழர் வரலாறு

Image
கி.பி. 1677
விசய நகர பேரரசின் கடைசி வாரிசான சீரங்கனுடன் நாயக்கர் ஆட்சி முடிந்தது.
கி.பி. 1682-1689
அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் கிருத்துவ துறவி சான்-டி-பிருட்டோ மதுரை பகுதியில் சமயத் தொண்டாற்றினார்.
கி.பி. 1688-1706
இராணி மங்கம்மாவின் காலம். உய்யக்கொண்டான் வாய்க்காலை செப்பனிடச் செய்தார். குளம் வெட்டி வளம் பெருக்கிட சாலைகளும் சோலைகளும், அன்னச்சாவடிகள், சத்திரங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்தார். சமய சார்பற்ற குடிநலம் பேணினார். மதுரை பொற்றாமரைக் குளத்தின் அருகில் கல்யாண மண்டபத்தில் நினைவுச் சின்னமாக அவருடைய உருவம் ஓவியமாக உள்ளது. 'மங்கம்மாள் மலைமேற் சோலை' எனப் பாராட்டப் பட்டுள்ளது.
கி.பி. 1700
உலக மக்கட்தொகை 610 மில்லியன். தற்போதைய இந்திய மக்கட் தொகை 165 மில்லியன்.
கி.பி. 1705-1742
தமிழ் சைவ சித்தாந்தியும் கவியுமான தாயுமானவ…

கி.பி. 1 - கி.பி. 1856 வரையிலான தமிழர் வரலாறு

கி.பி. 1 - 20
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.
கி.பி. 10
உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.
கி.பி. 21 - 42
குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.
கி.பி. 42 - 100
சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம்.
கி.பி. 53
ஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமசு இக்கால சென்னையில் மறைவு.
கி.பி. 101 - 120
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி…

கி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு

கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம்.முதன் முதலில் தமிழ் நாட்டில் தோன்றியது.தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு,பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100000
நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.
கி.மு. 75000
கடைகி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.
கி.மு. 50000 - 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
கி-மு. 20000 - 10000
ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங…